கண்ணன் என் காதலன்னு கேள்விப்பட்டிருப்பீங்க.. கண்ணன் என் தோழன்னு சொல்லக் கேட்டிருப்பீங்க... கண்ணன் ஒரு கடன்காரன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?
கடன்காரன்னா கடன் வாங்கினவன் இல்லை, கடன் கொடுத்தவன்! கடன் கொடுத்தவன்னு சொல்வது கூட தப்பு. ஒருத்தன் கண்ணன் பேர்ல அவன் மனைவி போட்டு வச்சிருந்த உண்டியல்லேருந்து கொஞ்சம் காசு எடுத்துடறான். அதை வசூல் பண்ண கிருஷ்ணன் விடுகிறார். ஏனோ சாம்புவிடம் அவருக்கு ஒரு பிரியம்.
V கோபாலகிருஷ்ணன் குழுவினருக்காக வாலி எழுதிக் கொடுத்த 'ஸ்ரீ கிருஷ்ண விஜயம்' நாடகத்தில் தேங்காய் கதாநாயகன் சாம்பு அய்யராக நடிக்க, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் இப்படி நாடகங்கள் நிறைய வெளியாகி இருக்கின்றன. இப்போதெல்லாம் அப்படியான நாடகங்கள் வருவது குறைந்து விட்டது. அதற்கு ரசிகர்கள்தான் காரணம்.
இந்த நாடகத்தை படமாக்க நினைத்து சாம்பு அய்யராக நடிக்க சிவாஜியை அணுகி இருக்கிறார்கள். அவர் 'தேங்காயே நல்லா நடிக்கிறார்... படத்திலயும் அவரையே ஹீரோவா போட்டுடுங்க' என்று சொல்லிவிட. அப்படியே ஆனது.
வாலி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத 'கலியுகக்கண்ணன்' படம் ரெடியானது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் V. குமார் இசையில் 1974ல் வெளிவந்து பெருவெற்றி பெற்றது. எந்த அளவு வெற்றி பெற்றது என்றால், இது பெற்ற வெற்றியின் காரணமாக இதை தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும் எடுத்தார்கள்.
ஜெய்சங்கர் தேங்காயின் மகனாக சாதாரண ரோலில் நடித்திருப்பார்.
சாம்பு அய்யர் அவ்வளவு கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவர் மனைவி சௌகார் வைத்திருக்கும் உண்டியலிலிருந்து காசு எடுத்து ரேஸ் ஆடி விடுகிறார். அவ்வளவுதான்.. ராத்திரி மொட்டைமாடியில் தூங்கும் தேங்காயிடம் கிருஷ்ணன் நேரில் வந்து கடனைக் கேட்கிறார்! இவர் சர்வசாதாரணமாக அவரை ஒரு சகமனிதனைப் போல டீல் செய்கிறார்.
படத்தில் கிருஷ்ணனாக வருபவர் இவர்தான். யாரென்று தெரிகிறதா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். நடிகர் நீலுதான் இவர். இவரை ஒருமுறை குமுதம் படைத்தும் விநோதப் போட்டி ஒன்றுக்காக (நடிகர்கள் மாறுவேஷத்தில் வருவார்கள். அவர்களைக் கண்டுபிடிக்கவே வேண்டும். ஊரும் நாளும், நேரமும் சொல்லி விடுவார்கள்) தஞ்சாவூரில் ஹவுசிங் யூனிட்டில் எங்கள் தெருவில் வந்து பிடிபட்டார்!
ஆனால் மறுபடி கொஞ்ச நேரம் படத்தை பார்த்ததும் குரல் வேறு யாரையோ நினைவு படுத்துகிறது. நீலகண்டன் என்னும் பெயரை வைத்து விக்கியே குழம்பி விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது! அவரை விவேகா பைன் ஆர்ட்ஸ் நீலு என்று நம்ப முடியவில்லை.
எச்சரிக்கைக்கு குறிப்பு : கீழே சென்று பாடலைக் கேட்டு விட்டு நேரம் இருக்கும்போது காட்சியைப் பாருங்கள்.
தேங்காய் கொஞ்சம் கொஞ்சமாக பணக்காரன் ஆனாலும், கண்ணனுக்கு அந்தக் கடனை மட்டும் திரும்பிச் செலுத்தாமலேயே இழுத்தடிக்க, கடைசியில் கிருஷ்ணன் தேங்காய் அறியாமலேயே அந்தப் பணத்தை எப்படி வசூல் செய்தேன் என்று சொல்லி மறைகிறார்.
நம்பாத போதெல்லாம் எதிரில் வந்த கிருஷ்ணன், அவன் இருக்கிறான் என்று நம்பியதும் வரவில்லை என்று ஏங்குகிறார் சாம்பு. தவறை உணர்ந்த தேங்காய் சாம்புவின் உருவத்தில் டி எம் எஸ் குரலில் சிவாஜி ஆக்ஷனில் வாலியின் பாடலை V. குமாரின் இசையில் பாடியபடியே உயிரை விடுகிறார்.
ஒரு காட்சியில் இரவு கண்ணனைப் பார்த்ததாக தேங்காய், மகன் ஜெய்சங்கரிடம் சொல்ல, "ம்ம்.. அப்படியா? எப்படிப்பா இருந்தார்?" என்று ஆர்வமாகக் கேட்பார் ஜெய். "அப்படியே N T ராமாராவ் மாதிரி இருந்தார்டா" என்பார் தேங்காய்.
கண்ணனை தேங்காய் "ஓய்.. கிருஷ்ணஸ்வாமி" என்றுதான் படம் முழுவதும் அழைப்பார். கண்ணன் கேட்கும் ஒவ்வொன்றுக்கும் அகந்தையுடனும், எள்ளலுடனும் தேங்காய் பேசுவது ரசிக்கக் கூடியது. சுவாரஸ்யமான காட்சிகள் கொண்ட படம்.
இன்று பகிரும் இந்தப் பாடல் அருமையான தத்துவங்கள் நிறைந்த பாடல்.
முருகா என்றழைக்கவா முத்துக்குமரா என்றழைக்கவா என்று ஒரு பக்திப்பாடல் உண்டு. அதற்கு பதில் சொல்வது போல முருகன் என்றும் அழைக்கலாம் முத்துக்குமரன் என்றும் அழைக்கலாம் என்று சீர்காழி ஒரு பாடல் .இப்போது அதை எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்கிறது.
காதோடுதான் நான் பேசுவேன் என்று ஒரு பாடல் பாலச்சந்தர் படத்தில் எல் ஆர் ஈஸ்வரி பாடுவார். அதற்கு பதில் போல இன்னொரு பாலச்சந்தர் படத்தில் சுசீலாம்மா 'நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்' என்று ஒரு பாடல் பாடுவார்.
அதுபோல 1973 ல் வெளியான கெளரவம் திரைபபடப்பாடலான "நீயும் நானுமா" பாடலுக்கு பதில் சொல்வது போல இந்தப் பாடல் அமைந்திருக்கும்!
இதுபோல சில கேள்வி பதில் பாடல்கள் தமிழ்த் திரைப்பாடல்களில் பார்க்கலாம் / கேட்கலாம்.
வரிவரியாக ரசிக்கக் கூடிய பாடல். இப்போதும் எனக்கு மனப்பாடம்!
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே
தெறந்துட்டே கண்னை தெறந்துட்டே
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே….
உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு
கண்ணா நான் யார் கிட்டடா தோத்தேன்
சாதாரண மனுஷன் கிட்டயா….
உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு
என்னை தெளிய வைத்தாய் தன்னை
புரிய வைத்தாய் என் நன்றி உனக்கு
கண்ணா ஜெயிச்சுட்டடா நீ
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே
சூரியனைப் பார்த்து இந்த நாய் குலைத்தது
உன் சூடு பட்டு கேடு கெட்டு வாய் அடைத்தது
அகந்தை பிடித்த சிறு குழந்தை பிடித்த
பிடிவாதம் தீர்ந்ததிங்கு பாரடா
உன்னை வென்று நின்றவன் யாரடா….
கண்ணா உன் நாடகத்தில் நானொரு பாத்திரம்
உனக்கு முன் நான் எம்மாத்திரம்
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே
எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை
இதில் நல்ல ரத்தம் உள்ள மட்டும் எத்தனை சேட்டை
கண்ணா சக்தி இருந்தப்ப புத்தியில்லை
புத்தி இருக்கிறப்போ சக்தி இல்லை
கொண்டு வந்தென்ன கொண்டு செல்வதென்ன
ஒன்றுமில்லையே முடிவிலே
இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே
கண்ணா நீதான்டா ஜெயிச்சே……
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே
ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடி வருக
கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக
கண்ணா நானொரு பைத்தியக்காரன்
நீ வேறு நான் வேறுன்னு நெனச்சப்ப நீ வந்தே
நீ என் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறப்போ எப்படி வருவே
ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடி வருக
கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக
தன்னையறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே
என்னையறிந்துக் கொண்டேன் மன்னனே
எனக்குள் கீதை எடுத்துரைத்த கண்ணனே
கண்ணா………..கண்ணா………..கண்ணா…
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஇந்தப் படத்தைப் பற்றி வாலி எழுதியிருந்ததை இருபது வருடங்களுக்கு முன்பு அவரது புத்தகத்தில் படித்திருந்தேன். கடந்த ஒரு வருடத்துக்குள்ளாகத்தான் இந்தப் படத்தை யூடியூபில் பார்த்தேன். வாலி சொன்னது, பிரபலமான நடிகரைப் போட்டிருந்தால் பிச்சுக்கிட்டு ஓடியிருக்கும், அறிமுமில்லாத தேங்காய்க்கே படம் அறுபது நாட்களுக்குமேல் ஓடி நல்ல வெற்றிப்படமாகிவிட்டது என்பார். நல்ல பகிர்வு
பதிலளிநீக்குசிவாஜி உண்மையில் தேங்காய் சீனிவாசனை சிபாரிசு செய்தார். அவர் நன்றாக நடிக்கிறார் என்று. படமும் நன்றாக ஓடியதாக தான் தகவல்.
நீக்குநேற்று, புஷ்பா2 நெட்ஃப்ளிக்சில் பார்த்தேன். 3 3/4 மணி நேரம். நான் ஐந்து மணி நேரத்தில், பாடல்களைக் கொஞ்சம் ஓட்டிப் பார்த்தேன். தெலுங்கு ரசிகர்கள் அதீத்த்தை, நடக்க முடியாதவற்றை நம்புபவர்கள் என்று புரிந்தது. அவங்ககிட்டே இருந்துதான் கதாநாயகன் ஒரு கையால் அடித்தால் 200 அடியில் மற்றவர்கள் விழுவது, கையில் ஒன்றுமில்லாமல் துப்பாக்கிகளோடு வரும் பத்து எதிரிகளை த்வம்சம் பண்ணுவது என்றெல்லாம் காட்சிகள் தமிழுக்கு வந்திருக்கணும்.
பதிலளிநீக்குகையையும் நல்லா கட்டிடுவாங்க. காலையும் நல்லா கட்டிடுவாங்க. அப்புறமும் பத்து வில்லன்களை இந்தப் படத்தில் பந்தாடினார் புஷ்பா... ஐயோ... தாங்கலைடா சாமின்னு ஆயிடுச்சு.
புஷ்பா 2 நெட்ப்ளிக்ஸில் வந்திருக்கிறது என்று பார்த்தேன். அதை பார்க்கும் தைரியம் இல்லாமல் ஸாண்ட் கேசில் - மணல் கோட்டை - என்கிற ஒரு ஆங்கில படம் பார்க்க போய் செமையாக மாட்டிக் கொண்டேன்!!!
நீக்குசிறப்பான காட்சியும், கானமும் நன்று.
பதிலளிநீக்குநன்றி தேவகோட்டைஜி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். நன்றி.
நீக்கு1970 ன் நினைவுகள் நெஞ்சில் அலை மோதுகின்றன.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகிருஷ்ணா.. சக்தி இருக்கறப்போ புத்தி இருக்கறதில்லே... புத்தி இருக்கறப்போ சக்தி இல்லேயேப்பா..
பதிலளிநீக்குஇப்படியொரு வசனம் அந்தப் படத்தில்..
அப்போ நீங்கள் இந்த பாடலை பார்க்கவில்லை என்று தெரிகிறது!! பாடலில்தான் அந்த வரி வரும்.
நீக்குசாமிப் படம்னா எங்க வீட்டுல கண்டிப்பா குட்டீஸ் பட்டாளத்துடன் கூட்டிப் போறவங்களே ஏனோ கலியுகக் கண்ணன் படத்துக்குக் கூட்டிட்டுப் போகலையோன்னு...... வருஷம் பார்த்ததும் தெரிந்து விட்டது அப்ப வள்ளியூர் வாசம்..10 வயசு.... அந்தப் பாட்டி கண்டிப்பா கூட்டிட்டுப் போயிருப்பாங்க...ஆனா நினைவில்லை.
பதிலளிநீக்குசீன் பார்த்தாவது நினைவுக்கு வருதான்னு பார்க்கிறேன்
கீதா
இது சாமி படம் இல்லை. ஆசாமி படம்!
நீக்குநீலு வா அது கிருஷ்ணனாக...அட!!!
பதிலளிநீக்குகாட்சியில் நல்ல விஷயத்துக்காகத்தானே சாம்பு எடுக்கிறார்? அது கிருஷ்ணனுக்குத் தெரியாதா என்ன?
வசனங்கள் நல்லா இருக்கு சௌகார் பேசுவது.
ஆனால் மனைவி கணவனுக்கு அடிமை என்ற வார்த்தை எல்லாம், காலம் காலமாய் சொல்லி வரப்பட்ட அக்காலத்துப் பிரயோகங்கள்.
நான் அட நல்ல விஷயத்துக்குத்தானே எடுக்கிறார் என்று நினைத்த போது சௌகாரும் அதைச் சரி என்பார் என நினைக்கும் போது காட்சி வசனங்கள், இயக்குநர் அல்லது கதாசிரியர் வழக்கமான சாமி படங்களின் நோக்கில் கொண்டு செல்கிறார்.
முழுவதும் பார்த்துவிட்டு வருகிறேன்.
கீதா
சுவாரஸ்யமான வசனங்கள்.
நீக்குஇந்த நீலகண்டனும் அந்த நீலுவும் வேறு வேறு ஆட்கள் என்று நினைக்கிறேன்.
நீலுவின் குரல் இளம் குரல் போல ஆனா அந்த உச்சரிப்பு சில இடங்களில் கொஞ்சம் தெரிகிறதோ?
பதிலளிநீக்குகிருஷ்ணருக்கும் சாம் புவுக்குமான வசனகளையும் ரசித்தேன்...
தரிசனம் பற்றி வரும் வசனம் செம....காட்சியில் பணக்காரனாவதைக் காட்டிய விதம் அக்காலத்து ஐடியா நல்லாருக்கு...
வி கே ராமசாமி - கூட வருபவர் யார்னு தெரியலை, ஜெய்சங்கர் - அந்தக் காட்சியில் வசனங்கள்ல பொருத்தமா அப்ப வந்த தமிழ்ப்படங்களின் பெயர்களை எல்லாம் சொல்வது....சூப்பர்...
வசனங்கள் எல்லாம் செம...என் டி ராமாராவ்!!! போல இருந்தார்...ஹாஹாஹா
தேங்காய் சௌகார் ஜெய், மனோ காட்சியில் நாம அந்த ஹோட்டலை வாங்கலைனா எவனாவது வாங்கி பிரியாணி கடை வைச்சுடுவான்!!!!!!!!!!! முக்காலமும் பொருந்தும் வசனம்...அது சரி இப்ப என்னவோ பிரியாணி கடை ஜாஸ்தி எல்லாரும் சாப்பிடறாங்கன்னு....பாருங்க அப்பவே இந்த வசனம்....சும்மா அந்தக்காலம் இந்தக்காலம்னு நாம பேசிக்கறோம்...எல்லாக் காலமும் ஒன்னுதான்
நீலுவின் குரல் இளம் குரலா இருந்தாலும் போகப் போக அவர் குரலான்னு தோன்றியது. வேறு ஏதோ ஒருவரின் குரல் போலத் தோணுது.
//தவறை உணர்ந்த தேங்காய் சாம்புவின் உருவத்தில் டி எம் எஸ் குரலில் சிவாஜி ஆக்ஷனில் வாலியின் பாடலை V. குமாரின் இசையில் பாடியபடியே உயிரை விடுகிறார்.//
ரசித்தேன்! ஸ்ரீராம், புன்னகையுடன்!
கீதா
நன்றி கீதா.
நீக்குபாலசந்தர் படங்களை வைத்தே பாட்டிற்குப் பதில் நு சொல்லி செமையா ஆராய்ஞ்சிருக்கீங்க ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநீயும் நானுமா பாடல் அப்பாவும் பிள்ளையும் போட்டி....அதிலும் மகன் பெயர் கண்ணன் இல்லையா?
ஆமாம் பாடல் காட்சியில் சிவாஜி மாதிரியே நடிக்கிறார்!!!!!!
எப்படி ஸ்ரீராம் இப்படி எந்தப் பாடலுக்கு இது பதில் போல என்று பி ஹெச் டி!!! பண்ணிருக்கீங்க!
பாடல்வரிகள் சூப்பர்.
கீதா
ஆனால் படம் பெயராக சொல்லும் அந்தக் காட்சி எனக்கு எரிச்சல்தான் தந்தது.
நீக்குமுதலில் சிவாஜியை நடிக்கக் கேட்டதால், அவர் தேங்காயே நல்லா பண்ணிருக்கார்னு சொன்னதால் தேங்காய் சிவாஜி போலவே இதில் செய்திருக்கிறாரோ! சிவாஜி ஸடைல் கண்ணாடி, முடி ஸ்டைல் கூட!
பதிலளிநீக்குகீதா
சாதாரணமாகவே தேங்காய் நிறைய சிவாஜியை இமிடேட் பண்ணுவார். ஆனால் அவர் எம் ஜி ஆர் ஆள்
நீக்குத்த்துவ வசனங்களும் சரி, எள்ளி நகையாடும் வசனங்களும் சரி சூப்பர்.
பதிலளிநீக்குகீதா
ஆமாம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் நல்ல பாடலுடன் காட்சியும் கேட்டு கண்டு ரசித்தேன். இந்தப்பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். படம் கூட எப்போதோ தொலைக்காட்சியில் பார்த்ததாக நினைவு. ஆனால் சரியாக கைகளுடன் கூடிய காட்சிகள் வசனங்கள் நினைவில் இல்லை. படம் பற்றிய விபரங்களை நன்றாக தந்துள்ளீர்கள்.
தேங்காய் ஸ்ரீநிவாசனின் நடிப்பு நன்றாக இருக்கும். சமயங்களில் அவரும் நடிகர் திலகத்தைப் போல உணர்ச்சிவசப்பட்டு நடிப்பார். இந்தபடத்திலும் இந்த பாடல் காட்சியிலும் அப்படித்தான்...!
நீங்கள் சேர்த்து ஒன்றுபடுத்தி பார்த்த பார்த்த பாடல்கள் அருமை. . இதுபோல் நானும் யோசித்திருக்கிறேன். வெள்ளி விழா பாடல்கள் நன்றாக இருக்கும். இதில் மனைவி பாடுவது காதோடு என்றால், அவர் வாழ்வோடு மறுபடி இணைய எண்ணும் அந்த குறும்புகாரப்பெண் சத்தம் போட்டுத்தான் பாடுவார். கே. பாலசந்தரின் மனதில் எழுந்த அந்த மாறுபட்ட கற்பனைகளை ரசிக்காதோர் உண்டா?
இதில் கிருஷ்ணராக வந்த நீலு... பின்னாளைய படங்களில் வந்த நீலு.. அவருக்கும் இது மாறுபட்ட வேடந்தான்...! இன்றைய வித்தியாசமான வெள்ளியில் வந்த பாடலையும், காட்சி பகிர்வையும் ரசித்தேன். தங்களின் இந்த பாடல்களோடு கூடிய அணுகு முறைகளும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள் சகோதரரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்கு....காதோடுதான் நான் பேசுவேன் என்று ஒரு பாடல் பாலச்சந்தர் படத்தில் எல் ஆர் ஈஸ்வரி பாடுவார். அதற்கு பதில் போல இன்னொரு பாலச்சந்தர் படத்தில் சுசீலாம்மா 'நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்' என்று ஒரு பாடல் பாடுவார்......
பதிலளிநீக்குஇன்னொரு படத்தில் அல்ல. அதே படத்தில்.(வெள்ளி விழா)
ஆமாம் பிரென்ட்.. மறந்து விட்டேன். மன்னிக்கவும்.
நீக்குதேங்காய் சீனீவாசன் பாடல் முன்பு ஒரு தடவை வந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த தடவை நிறைய செய்திகளுடன் வந்து இருக்கிறது.
காணொளியும், பாடல் காணொளியும் அருமை.
தேங்காய்சீனீவாசன் நடிப்பு நன்றாக இருக்கும்.
//காதோடுதான் நான் பேசுவேன் என்று ஒரு பாடல் பாலச்சந்தர் படத்தில் எல் ஆர் ஈஸ்வரி பாடுவார். அதற்கு பதில் போல இன்னொரு பாலச்சந்தர் படத்தில் சுசீலாம்மா 'நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்' என்று ஒரு பாடல் பாடுவார்.//
ஒரே படம் தான் இரண்டு பாடலும் ஸ்ரீராம். காதோடு ஜெயந்தி பாடுவார், சத்தம் போட்டு தான் பாடுவேன் வாணிஸ்ரீ பாடுவார் வெள்ளிவிழா படத்தில்.
காட்சி பார்த்து ரசித்தேன், கானத்தை கேட்டு மகிழ்ந்தேன்.
ஆம். முன்பு குறைந்த விவரங்களுடன் பகிர்ந்திருந்தேன். இப்போது நிறைய விவரங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
நீக்குஇரண்டு பாடல்களுமே வெள்ளி விழாதான் என்பதை மறந்து விட்டேன்.
நீக்குபடம் பார்த்தது இல்லை. பாடல் முன்பு கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குகாணொளிகள் கண்டோம் நன்றாக இருந்தது .
நன்றி மாதேவி.
நீக்குஇணையம் இப்போது தான் கிடைத்தது...
பதிலளிநீக்குகாட்சிகளை மிகவும் ரசித்து மகிழ்ந்தேன்..
நன்றி ஸ்ரீராம்
நன்றி செல்வாண்ணா...
நீக்குஅந்தக் காலத்திலேயே பிரியாணியை நினைத்துப் பயந்திருக்கின்றனர் - பாருங்கள்..
பதிலளிநீக்கு:-))
நீக்குஅருமையான பாடல்கள்...
பதிலளிநீக்கு