இன்றைய வெள்ளிக்கிழமை வீடியோக்கள் கொஞ்சம் வித்தியாசமாக...
1964 ல் ஜனவரியில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் குந்தி தேவியார் கர்ணனை தன் மகனென்று சொல்லும் காட்சி. கர்ணன் கேரக்டர் நல்லவனா, கெட்டவனா வகைக் கேள்விக்குரியது.
வியாசர் அவனை கெட்ட குணம் அதிகமுள்ளவனாகத்தான் உருவாக்கி இருக்கிறார், சொல்கிறார். ஆனாலும் முற்போக்குவாந்திகள் சிலர் அவனை நல்லவன், வள்ளல் என்று புகழ்ந்து நல்ல இடத்தில வைத்திருக்கிறார்கள்.. அதுசரி.. துரியோதனனையே மிக்க நல்லவன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்களே... இருக்கட்டும், அதுவும் ஒருவகையில் சரிதான் என்றே வைத்துக் கொள்வோம். அதுதான் வியாச பாரதம்.
இன்றைய முதல் காட்சியில் குந்தி தேவியை கர்ணன் தாயாக அறியும் இடம். முதலில் உணர்ச்சி வசப்பட்டாலும், பின்னர் அவள் நோக்கம் அறிந்து , ஆனால் அவளை ஏமாற்றாமல் அவள் கேட்டதைத் தந்து அனுப்புகிறான்.
குந்தி மூன்றாவது வரம் கேட்டதும் சட்டென திரும்புகிறான். சட்டென்று புரிந்து விடுகிறது அவனுக்கு, இவள் தன்மேல் பாசம் கொண்டு வரவில்லை என்று. கடவுள் போன்ற நண்பன் சொல்லி அனுப்பி இருக்கும் சாகசம் என்று சொல்கிறான். அந்த நிலையிலும் குந்தி சுயநலமாகவே இருப்பது மனத்தாங்கலை பார்வையாளர்களிடையே ஏற்படுத்துகிறது.
திருவிளையாடல் படத்தில் சாவித்ரியை தக்ஷன் யாகத்துக்கு செல்லும்போது "போ" என்று சொல்வது போல (சாவித்ரி "போய் வா என்று சொல்லுங்கள்" என்று அனத்துவார்) இந்தக் காட்சியில் மூன்றாவது வரம் தந்ததும் 'சென்று வரவா' என்று கேட்கும் குந்தியை "போங்கள்" என்று நிஷ்டூரமாக சொல்வான் கர்ணன்.
கர்ணன் திரைப்படத்தின் மாறுபட்ட கதைக்களம்தான் 'பட்டாக்கத்தி பைரவன்' படமும் 'தளபதி' படமும். பட்டாக்கத்தி பைரவன் படம் 1979 அக்டோபரில் வெளியானது.
'பட்டாக்கத்தி பைரவனி'ல் அதே சிவாஜி, தாய் சௌகார் ஜானகி. சிவாஜிக்கு இன்னமும் சௌகார்தான் தனது தாய் என்று தெரியாது. காட்சி அமைப்பில் கர்ணனோடு ஒப்பிடும்போது ப க பைரவன் இரண்டு மாத்து கம்மி. படத்தில் ப க பைரவனுக்கு மாற்றுப்பெயர் கர்ணன். சிவாஜி, மேஜர், சௌகார், ஜெய்கணேஷ் யார் நடிப்பிலும் அவ்வளவு 'சுஸ்து' இல்லை!
1991 ல் வெளியானது மணிரத்னத்தின் தளபதி.
ரஜினி தன் தாய்தான் ஸ்ரீவித்யா என்று ஜெய்சங்கர் மூலம் தெரிந்ததும் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினாலும் வெளியில் சொல்லவேண்டாம் என்று ஜெய்சங்கரிடம் சத்தியம் வாங்கி கொள்கிறார்.
மிக மென்மையான கணவராக ஜெய்சங்கர். இப்படி கூட ஒரு கணவன் இருக்க முடியுமா என்பது போல அவ்வளவு நல்ல கணவன்!
கர்ணனில் கர்ணன் இறந்தபிறகு அவன் தாய் யார் என்று தெரிவதாக படம் அமைப்பு. ப க பைரவனில் சுப முடிவுதான் என்று ஞாபகம். தளபதியின் கிளைமேக்ஸ் காட்சி இருவகைப்பட்டது. தமிழ்நாட்டில் ரஜினி உயிரோடு இருப்பார், மம்மூட்டி இறந்து விடுவார். கேரளாவில் மம்மூட்டி உயிரோடு இருப்பார், ரஜினி இறந்து விடுவார்.
என்னுடைய ஒப்பீட்டில் முதலிடம் கர்ணன். மூலமே பிரதானம் இல்லையா... அடுத்து தளபதி. அப்புறம் பட்டாக்கத்தி பைரவன். ஒன்று சொல்ல வேண்டும். மூன்று படங்களிலுமே பாடல்கள் இனிமை.
கர்ணன் முதலில் போட்ட கோடு. மற்றவை அதில் போட்ட ரோடுகள். இம்ப்ரொவைஸ் செய்ய முயன்றிருக்கிறார்கள். இந்தக் காட்சியை நீங்கள் புதிதாக ஒன்று எழுதினால் எப்படி எழுதுவீர்கள்? நவீன பாத்திரங்களை வைத்தோ, இல்லை அதே கர்ணன் பாத்திரத்தையே வைத்தோ...
எழுதி அனுப்புங்களேன்...
காட்சிகள் என்பதால் பொறுமையாக பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கும் ஒரு கட்சி இருக்கும். அபிப்ராயம் இருக்கும்.
சொல்லுங்களேன்....
கர்ணனின் கேரக்டர் மிக ஆழமானது. பெற்றோர் இல்லாம அநாதை. குலத்தால் தாழ்ந்த பெற்றோர். அதனால் திறமை இருந்தும் மாற்றுக் கம்மியான இடம், எப்போதும். தன்னையும் மதித்து தனக்கு ஒரு இடம் கொடுத்து நண்பனாக ஏற்றுக்கொள்கிறான் துரியோதன்ன். இருந்தாலும், அவனிடமும் கெட்ட குணங்கள் இருக்கின்றன. அவை அவன் விதிக்குக் காரணமாகின்றன. கர்ணன் படம், படமாக்கப்பட்ட விதம், பாடல்களும், அதன் வரிகளும், காட்சிகளுக்குச் செலவழித்துத் தரமாகத் தந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. வெளியான சமயத்தில் இது தோல்விப்படம் என்பதைச் சீரணிக்க முடியவில்லை. நடிகர்களின் நடிப்பு அந்தப் படத்தை உயர்த்தியது. எப்போது பார்த்தாலும் எனக்குப் பிடித்தமான படம் இது.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... கர்ணன் தோல்விப்படம் என்பது எனக்கும் வருத்தம்தான். நீங்கள் சொல்லியிருப்பது போல அதன் கதை அமைப்பும், பாத்திரப் படைப்புகளும் சிறப்பானவை.நிஜ வாழ்வில் எதிரெதிர் துருவங்களாக நின்று சண்டையிட்டுக் கொண்ட அசோகனையும், சிவாஜியையும் நண்பர்களாக காட்டி இருப்பதும், அவர்களும் அந்தப் பாத்திரத்துக்கு உண்மையாக நடித்திருப்பதும் சிறப்பு. பாடல்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.. மகா இனிமை.
நீக்குதளபதி படமும் எனக்குப் பிடித்தமானது. ரொம்ப மாடர்னாக எடுத்திருப்பார் மணிரத்னம். இசையும் பாடல்களும் படத்தின் தரத்தை எங்கோ கொண்டுபோய்விட்டன. காணொளிகளை லேப்டாப்பில் பிறகு காண வேண்டும்.
பதிலளிநீக்குகாணொளிகளை பார்த்தால் இன்னும் சில குறிப்புகளும் சேர்த்துப் பகிரத் தோன்றும். தளபதி மிகச்சிறப்பாக பேசப்பட்ட படம். நல்ல வசூலையும் கொடுத்தது.
நீக்குஎன்னதான் க்ளாஸாகப் படமெடுத்தாலும், ரொம்ப மெனெக்கிடாமல், நம்பும்படி கதை இல்லையே என நினைக்காமல், தரம் இல்லாத படம் என நினைத்தாலும், மக்களுக்கு சகலகலாவல்லவன், முரட்டுக்காளை மாதிரியான படங்களையே மிகவும் பிடிக்கிறது. இது மக்களின் கஷ்டமான வாழ்வு காரணமா? (திரைப்படத்தில் ஃபான்டஸி தேடுவது) இல்லை பெரும்பான்மையான மக்களின் தரமே அப்படித்தானா (இடைத்தேர்தல்களில் வாக்களிக்கும் விதம்) என யோசிக்க வைக்கிறது
பதிலளிநீக்குA P நாகராஜன் படங்கள் அப்போது பெரும்பாலும் தோற்றதே இல்லை. மக்கள் அவற்றையும் ரசித்தார்கள். அதைத்தவிர இது மாதிரி படங்களையும் ரசித்தார்கள். ஒரேமாதிரி பார்க்க முடியாது என்பதாலோ வென்னவோ...!
நீக்குநெல்லை, மற்றும் இதுவரை பதிவைப் படித்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
பதிலளிநீக்குபதிவை மறுபடி படிக்க வேண்டுகிறேன். சில மாற்றங்கள் செய்துள்ளேன்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல மாறுபட்ட வெள்ளியாக இன்றைய பதிவு மலர்ந்துள்ளது. பாராட்டுக்கள். கர்ணன் படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. (மஹா பாரதத்தில் கர்ணன் பாத்திரமும்) இந்தப் படம் தோல்வியா ? ஏன் அப்படி? நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு அப்பாத்திரமாகவே மாறி நடித்திருப்பதாலோ இல்லை புராண கதை என்பதால்தான் தோல்வியை தழுவியதா? எனக்கு இந்த செய்தி புதிது.
இந்தப் படம் இரண்டாம் தடவை வண்ணமயமாக்கப்பட்டு புதிதாக்கி வந்த புதிதில் சென்னையில் ஒரு திரையரங்கில் என் கணவருடன் சென்று பார்த்து வந்தேன். நாங்கள் சேர்ந்து பார்த்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. எனக்கு பல நாட்களுக்கு மனதில் அந்த காட்சிகளின் வசனங்களும், நடித்தவர்களின் சிறப்பும் சுற்றி வந்த வண்ணமிருந்தன.நல்ல படம்.
இரண்டாவதாக பகிர்ந்த ப. க. பைரவன். பார்த்த நினைவில்லை தளபதியும் தொலைக் காட்சியில்தான் பார்த்தேன்.
தாய் பாசத்தை காட்டி எத்தனையோ படங்கள் வந்தும், நீங்கள் ஒப்புமையோடு இந்த மூன்று படங்களையும் எடுத்து இங்கு கோர்த்து சிறப்பித்து இருப்பது பாராட்டுக்குரியது.
காணொளிகளை பார்த்து விட்டு வருகிறேன். நேற்றே உங்கள் பதிவுக்கு கருத்துச் சொல்ல தாமதமாக வந்தேன். அதனால்தான் இன்று காணொளிகளை பார்க்காமலேயே இப்போது வந்து விட்டேன். பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வாங்க கமலா அக்கா... தோல்வி என்று இல்லாவிட்டாலும், எதிர்பார்த்த வசூலை படம் கொடுக்கவில்லை. பின்னாட்களில் ஒரு சிறந்த படமாக அறியப்பட்டது கர்ணன்.
நீக்குகாணொளிகளை பார்த்தால்தான் ஒரே காட்சியை எப்படி வெவ்வேறு விதமாக எடுத்துள்ளார்கள் என்பதும் தெரியும். நான் கேட்டிருப்பதை நீங்கள் கூட எழுதி அனுப்பலாம்.
தேர்ந்தெடுத்த காட்சிகள் சிறப்பு ஜி.
பதிலளிநீக்குஒன்று மட்டும் புரிகிறது அன்றிலிருந்து இன்றுவரை அரைத்த மாவைத்தான் அழைக்கிறார்கள்.
மக்கள்தான் புரியாமல் ரசித்துக்கொண்டே ஏழையாக தொடர்கிறார்கள், அவர்கள் செல்வந்தனாக வாழ்கிறார்கள்.
சுஜாதா சொல்வார். ஒரு கதை எழுத ஒரு பரந்த பார்வையில் மொத்தம் ஏழு கருக்கள்தான் உள்ளன என்பார். அது போலதான்!
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்கு