புதன், 8 ஜனவரி, 2025

பரிட்சை நேர வேண்டுதல்கள் பலவிதம்!

 

சென்ற வார கேள்வி பதில் பகுதியில், நெ த கேட்ட கேள்விகளுக்கான பதில்களில் சிறிய குழப்பம் ஏற்பட்டுவிட்டது. நெ த வின் கேள்வியின் ஒரு பகுதியே, & பதில் போல பதிவாகிவிட்டது. அதனால் மீண்டும் இங்கே நெ த கேள்விகளும், அதற்கு & பதில்களும். 

நெல்லைத்தமிழன் : 

புத்தாண்டை குடி, ஆட்டத்துடன் நள்ளிரவு வரவேற்கும் வழக்கம் எங்கேயிருந்து இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தொடங்கியது?   

& IT கம்பெனிகள் தலை எடுத்தவுடன் இந்தப் பழக்கம் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். IT யில் பணிபுரிபவர்கள்தான் நடுநிசியில் கண் விழித்து ஆட்டம் போடுபவர்கள்! குறிப்பாக bachelors! 

ஆகமத்தில் இல்லாத,  புத்தாண்டு நள்ளிரவில் கோயிலைத் திறந்துவைக்கும் வழக்கம் சரிதானா?   

& எல்லாமே இப்போது rules book படியா நடந்துகொண்டு இருக்கின்றன! காலத்திற்கேற்ற மாற்றங்கள். ஏதோ எப்படியோ மக்கள் பக்தியோடு பரமனைக் கும்பிட்டால் சரி. நேரம் காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். 

அந்தக் காலத்தில் ஆண்டாள், ஆனைச் சாத்தன் பறவை எழுப்பிய ஒலியை அதிகாலை நேரத்தில்  கேட்டு, அதை சிலாகித்து, மார்கழி நோன்பு இருக்கும்போது பாடியிருக்கிறார். ஆங்கிலப் புத்தாண்டும் மார்கழி மாதத்தில்தானே வருகிறது! ஆக - ஆங்கிலப் புத்தாண்டில் அதிகாலைக்கு சில நாழிகைகள் முன்பாக கோவிலில் வழிபாடு செய்வதில் தவறு இல்லை! பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததே நள்ளிரவில்தானே!  

திங்கட்கிழமை, உணவப் பதிவுக்குப் பதிலாக, மாதத்தில் ஒரு தடவையாவது, எந்த உணவு எங்கே சாப்பிட்டது தங்களுக்குப் பிடித்திருந்தது என்பதை வாசகர்கள் எழுதி அனுப்பினால் என்ன? பயணப்படுபவர்களுக்கு உபயோகமாக இருக்குமே? நானே வரும் திங்கட்கிழமைகளில் ஒரு நாள் அப்படி எழுதலாமா என்று நினைத்துள்ளேன்.   

& எழுதுங்கள்; நாங்களும் எழுதுகிறோம்! 

எப்போதும்போல, இந்த வருடத்திற்கு புதிய உறுதிமொழி எடுத்துக்கொள்ள நினைத்துள்ளீர்களா இல்லை போன வருடம் உறுதிமொழி எடுத்து கடைபிடிக்காதவற்றில் ஒன்றைத் திரும்பவும் புதிய உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள நினைத்துள்ளீர்களா?

& உறுதிமொழி போன வருடம் - மொபைல் போனில் சீட்டு ஆடுவது இல்லை (காசு வைத்து ஆடுகின்ற எந்த ஆட்டமும் அல்ல - சும்மா timepass ஆட்டங்கள் - spades, solitaire, hearts போன்றவை) என்று resolution எடுத்து - சற்றேறக்குறைய நான்கு மாதங்கள் காப்பாற்றினேன். அப்புறம் ரொம்ப போர் அடித்த நாட்களில் அவ்வப்போது ஒருமுறை ஆடியது உண்டு. 

இந்த வருட resolution இதுவரை எதுவும் எடுக்கவில்லை. நண்பர் ஒருவர் அனுப்பிய டயரி ஒன்றைப் பார்த்ததும், இந்த வருடமாவது ஒழுங்காக டயரி எழுதவேண்டும் என்று ஓர் ஆசை. பார்ப்போம்! 

வெயில் காலத்தை ஓட்டுவது கஷ்டமா இல்லை குளிர்காலத்தை ஓட்டுவது கஷ்டமா?  தில்லி வெங்கட்டுக்கு சரியாகச் சொல்லத் தெரிந்திருக்குமோ? (தில்லியில் குளிர்னா கடும் குளிர், வெயில்னா கடும் வெயில்)

& சென்னையில் வெயில் காலத்தை ஓட்டுவது கஷ்டம். பெங்களூரில் குளிர்காலத்தை ஓட்டுவது கஷ்டம். (தில்லி வெங்கட் - அவரது தந்தையின் மறைவிற்குப் பிறகு, வலைப் பக்கங்களில் + பேஸ்புக் பக்கம் அதிகம் காணப்படவில்லை )

கறுப்பாக உள்ள பெண்கள் அழகானவர்கள் இல்லை, வெண்மை/சிவப்பாக இருப்பவர்கள்தாம் (பெயிண்ட் அடித்துக்கொண்டு வெள்ளையாக தங்களைக் காண்பிப்பவர்கள் அல்லர்) மிக அழகானவர்கள் என்றொரு பொதுப்புத்தி இருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?   

# அழகு என்பது பார்க்கிறவர் மனப்பாங்கின்படி உண்டென்றோ இல்லையென்றோ அமையும். சீனா மற்றும் ஜப்பான்காரர்கள் சப்பை மூக்குதான்‌அழகு‌ என்று எண்ணக் கூடும். 

என்றாலும் ரோஜாஅழகு  தாமரைப்பூ அழகு என்பது போல கறுப்பு இல்லாத சருமம் அழகு என்று பார்க்கப்படுவது உண்மைதான். இராமன், கிருஷ்ண பரமாத்மா, திரௌபதி எல்லாரும் கருநிற அழகு என்றும் படிக்கிறோம். நமக்கு அப்படி பதிவிடப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் தாக்கம் உண்மை. நியாய அநியாயங்கள் விவாதத்தால் மாறுபவையல்ல.‌

& யோவ் நெல்லை நீங்க என்னை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறீங்களா!


 இது இப்படி இருக்க, ஒரு பிரபல பெண்மணி முன் எப்போதோ எழுதியிருந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. 

அந்தப் பெண்மணி, தன்னுடைய சிஸ்யர்களில் ஒருவரான குஜராத்தி இளைஞர் ஒருவருக்கு, சிவப்பு நிறமும், தமன்னா போல கொடி இடையும் கொண்ட ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, 'இவளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதமா?' என்று கேட்டார்களாம். அந்த குஜராத்தி இளைஞன் " வேண்டாம், விருப்பமில்லை " என்று சொல்லிவிட்டாராம்!   

ஆச்சரியம் அடைந்த அந்தப் பெண்மணி, " ஏன் ?" என்று கேட்டாராம். 

அதற்கு அந்த இளைஞன் " இந்தப் பெண்மணிக்கு எங்கள் குஜராத்தி பெண்கள் போல அழகான வயிறு, பருத்த இடை எல்லாம் இல்லை. ஒடிந்து விழுந்துவிடுபவள் போல இருக்கும் இந்தப் பெண்ணை எனக்குப் பிடிக்கவில்லை " என்று சொன்னதைக் கேட்டு, அந்தப் பெண்மணியும், சுற்றி இருந்தவர்களும் மேலும் ஆச்சரியம் அடைந்தார்களாம்! 

பிறப்பால் ஒருவன் பெருமையோ இல்லை அந்தஸ்தோ பெற முடியுமா?   

#  மகாத்மா காந்தி யின் கொள்ளுப் பேரன் (92) அண்மையில் பார்த்தேன். என்னையுமறியாமல் அவர் மீது ஒரு மரியாதை தோன்றியதை உணர்ந்தேன்.  "உயர் குடிப் பிறந்தோர்" என்று இலக்கியங்களில் சிறப்பித்துச் சொல்லப் படுகிறதே ! சிவாஜி கணேசன் மூக்குக் கண்ணாடி என்றால் விலை மதிப்பு ஏறுகிறதே ! எனவே பிறப்பாலும் சில பெருமைகள் தற்காலிகமாகவேனும் இருக்கும்.

பொதுவாக அரசிளங்குமரர்கள் கதாநாயகியைக் காதலித்துக் கைப்பிடிப்பது போலக் காட்டாமல், ஒரு வீரனையே முக்கியமாக நாவலில் வைத்து காதல் காட்சிகளை எழுதும் கல்கி, சாண்டில்யன்.... போன்ற பல சரித்திரக் கதையாசிரியர்களைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?   

# ராஜகுமாரிகள் சாதாரண வீரர்களின் பால் அன்பு கொள்வது கற்பனைக் கதைகளுக்கு ஒரு கிளுகிளுப்பை உண்டாக்குவது ஒரு காரணம். கதாநாயகர்களின் இடத்தில் வாசகர் தன்னை வைத்துப் படிப்பதாக நம்பப் படுகிறது. எனவே  பெரும்பாலான கதாசிரியர்கள் இந்த உத்தியைக் கையாள்கிறார்கள்.‌

பாண்டிச்சேரி காரணமாக, வருடக் கடைசியில் எழுதும் அந்த வருட எ.பி. புள்ளிவிவரங்களை மறந்துவிட்டீர்களா?   

& நவம்பர் 28 சம்பவமும், அதற்குப்பின், அதனால் வீட்டில் செய்யவேண்டிய வைதீக காரியங்களும், அவற்றால் மனம் எதிலும் நாட்டமில்லாமல் இருந்ததும் ஒரு காரணம். பாண்டிச்சேரி சமாச்சாரம் கடைசி ஒரு வாரம் முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது என்பதும் ஒரு காரணம். 

ஒருவர் இறக்கும்போது அவர் பற்றிய நினைவுகள் மாத்திரமே அவருடன் பழகியவர்களிடத்தில் எஞ்சியிருக்குமா? அதுவும் எத்தனை காலம்?

# ஒருவர் இறந்தபின் அவருடைய நற்பண்புகள் மட்டுமே நினைவில் நிழலாடும் என்பதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.‌ அவ்வளவாக நல்லது இல்லாத சில நிகழ்ச்சிகளைப் பற்றிய நினைவுகள் இருந்தால் கூட அவற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்து ஒரு லேசான நினைவுப்பதிவாக மட்டுமே இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.

இந்த யோகா சொல்லித்தருபவர்கள் வெண்ணிற குர்த்தா,  ஆன்மீக ஆட்கள் காவி, ருத்திராட்சம் என்று யூனிஃபார்ம் வைத்திருக்கிறார்களே. இதுபோல ஒவ்வொரு professionக்கும், திருடர்கள் கொலைகாரர்கள் உட்பட, அரசே யூனிஃபார்ம்  சட்டத்தின் மூலம் கொண்டுவந்துவிட்டால் நல்லதல்லவா?

சட்டங்களை மீறுபவர்கள் நீங்கள் போடும் எந்த சட்டத்தையும் மீறிக் கொண்டுதானே இருப்பார்கள் ? மேலும் இப்பொழுது திருடன் அல்லாத யோக்கியனுக்கு யூனிபார்ம் கொடுத்து விடுவது சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .  அவர்கள் சட்டத்தை மதிப்பார்கள் அல்லவா ?

& என்னது! திருடர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் எல்லோருக்கும் யூனிஃபார்மா !  அப்போ அரசியல்வாதிகளுக்கு, தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு எல்லாம்  தனியாக யூனிஃபார்ம் என்று எதை prescribe செய்வது! 

இந்தக் கேள்வி பொதுவா என் மனசுல எழும். புத்திர சோகம் அளவு ஏன் தந்தை சோகம் (அவருடைய மறைவு) ஒருவரைத் தாக்குவதில்லை? புத்திர சோகத்தையே மிகப் பெரிதாக நம் புராண நூல்கள் பேசுகின்றனவே?

# மூத்தவர் மறைவது இயல்பு. எனவே அதிக சோகம் இருந்தால்கூட நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை.

நமக்கு உறுதுணையாக நாம் சொந்தக் காலில் நிற்க இயலாத‌ வயோதிகத்தில் நமக்கு உதவி நிச்சயம்‌ என்று நினைத்திருக்கும்போது புத்திரன் முந்திக் கொண்டால் வரும் துயரம் அளவிடவியலாததும் ஆறாததுமாக இருப்பது முரண் அல்ல.‌

& ஜென் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. 

எது சந்தோஷம்?

தாத்தா இறக்கிறார்;

மகன் இறக்கிறான்;

பேரன் இறக்கிறான். 

இதுதான் சந்தோஷம் என்கிறார், ஜென் குரு. (எப்படி என்று தெரிகிறதா?) 

ஒருவர் மறைந்த உடன் நமக்கு எழும் எண்ணம், இனி நம் நிலை என்னாகுமோ என்பதால் வரும் சோகமா?  இல்லை... அப்பாடா..இனியாவது சுதந்திரமாக இருக்கலாம் என்ற நிம்மதியா?

& இரண்டும் இல்லை. அதது அவரவர்கள் விதிப் பலன். ரயில் பயணத்தில் அவரவர்கள் இறங்கிச் செல்லவேண்டிய இடம் வந்ததும், இறங்கிச் செல்ல வேண்டியதுதான். இதில் சோகப்படவோ அல்லது நிம்மதி அடையவோ எதுவும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.   

லவ் ஜிஹாத் என்றால் என்ன?  அதைக்கண்டு ஏன் பலர் பயப்படுகின்றனர்?  

# திருமண விஷயத்தில் மத அடிப்படையிலான தீவிரவாதம் என்று சொல்லலாமா ? 

தாம் அங்கீகரிக்காத மண உறவினை கொலை செய்தேனும் முடித்து வைத்தால் பயம் வராமலிருக்குமா ?

= = = = = = = = 

KGG பக்கம்: 

பழசும், புதுசும் ! 

பழசு : 

சென்ற வியாழக்கிழமை நியூஸ் ரூம் பகுதியில் வந்த செய்தி இது: 

-  கர்நாடக மாநிலம் கலபுரகி அப்சல்புராவின் கத்தரகா கிராமத்தில் பாக்யவந்தி கோவில் அமைந்துள்ளது.  தன் மாமியார் இறக்க வேண்டும் என ரூபாய் நோட்டில் எழுதி, கோவில் உண்டியலில் போட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதைப் படித்ததும் எனக்கு பழைய நிகழ்வுகள் சில ஞாபகம் வந்தன. 

ஆரம்பப் பள்ளி படித்த காலத்தில், சில பரிட்சைகளுக்கு சிலேட்டு + குச்சிதான் விடை எழுத உபயோகிப்போம். என்னதான் பரிட்சைக்கு பிரமாதமாக தயார் செய்திருந்தாலும், பரிட்சை காலத்தில் ஒரு நடுக்கம் இருக்கும். அந்த நடுக்கத்தைப் போக்க என்னுடைய இரண்டாவது அக்கா ஓர் உபாயம் சொல்லிக்கொடுத்தார். 

நாகையில் தெருவுக்குத் தெரு, ஒரு கோவில் இருக்கும். கோவில் வாசலில், ' சாமிக்கு வேண்டிக்கொண்டு, - (கடவுளே பரிட்சையில் எல்லா கேள்விகளும் சுலபமாக விடை அளிக்கும் வகையில் வரவேண்டும்!) - ஒரு சிலேட்டுக் குச்சியைப் புதைத்துவிட வேண்டும். அப்போ பரிட்சையில் கேள்விகள் எல்லாம் சுலபமான கேள்விகளாக வரும்' என்பதுதான் அந்த உபாயம்.  

நானும் அப்படி செய்தேன். அதாவது ஓர் அங்குல நீளம் இருக்கும் சிலேட்டுக் குச்சியை பக்தி சிரத்தையோடு புதைத்து, ' கடவுளே ! இன்றைய பரிட்சையில் பத்துக்குப் பத்து மார்க் வருவதற்கு வழி செய் ! ' என்று வேண்டிக்கொண்டேன். 

அன்றைய பரிட்சையில், பத்துக்கு எட்டு மார்க் கிடைத்தது. திரும்பப் போகும்போது அந்தக் கோவில் வாசலில் நான் புதைத்த சிலேட்டுக் குச்சி பத்திரமாக இருக்கிறதா என்று நோட்டம் விட்டேன். ஆனால் - அங்கே ஒரு குழி மட்டும்தான் இருந்தது. நான் குச்சி புதைப்பதைப் பார்த்த பையன் யாரோ அதை லவட்டிச் சென்றுவிட்டான்! 

ஐந்தாம் கிளாஸ் வந்தவுடன் சற்று அட்வான்ஸ்டு டெக்னாலஜி - பென்சில் புதைப்பது இல்லை - நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில், சுவற்றில் பென்சிலால் " நான் பாசாக வேண்டும் " என்று எழுதி, அதன் கீழே பெயர், வகுப்பு ஆகியவற்றை எழுதுவது! இது தேர்முட்டி பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பரிட்சை காலத்தில் முக்கியமான நேர்த்திக்கடன். 

இந்த நேர்த்திக்கடன் பற்றி எனக்குச் சொல்லி, என்னை அழைத்துச் சென்றான் என் நண்பன் பரமசிவம். 

பென்சிலை சீவி, கூராக வைத்துக்கொண்டு உள்ளே சென்றோம். 

பிரகார சுவற்றில் ஏற்கெனவே நேர்த்திக்கடன் செலுத்தியிருந்தவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். 


பாவம் லல்லி! 'S' என்பதை நேராக எழுதத் தெரிந்திருந்தால் ஆங்கிலப் பரிட்சையில் தேர்ச்சி அடைந்திருப்பாள்! 

அப்புறம் --- ஆ இது என்ன ! 

ஆண்கள் எல்லோரும் தற்கொலைப் படையை சேர்ந்தவர்களா !! எல்லோரும் ஒருமித்த குரலில்(!) " நான் சாக வேண்டும்" என்று எழுதியுள்ளார்களே! 

ஓஹோ ! 'பாசாக வேண்டும்' என்று பக்தி சிரத்தையோடு எழுதிய பையன்களின்  வேண்டுதல் எழுத்துகளில் இருந்த 'பா'வை அழித்த பாவி யார்? அந்தப் பாவி, லல்லியின் வேண்டுதலை மட்டும் தீண்டாமல் விட்டது ஏன்? 

இந்தக் கேள்விக்கு, கீழேயே விடை இருந்தது! 


அடேய் ரவுடி சங்கர்! 

உன்னுடைய வேலைதானா 'பா'வை அழித்தது எல்லாம்! 

அப்படி உனக்கு கல்யாணத்திற்கு என்னடா அவசரம்? 

கல்யாணம் என்பதை கால்கட்டு போடுவது என்று சொல்வார்கள். ஆனால் நீ கல்யாணத்தின் காலை 'ஒடித்து' கல்யணம் ஆக்கி விட்டாயே!   ஒடித்த காலுக்குக் கட்டுப் போட்டாயா இல்லையா?  

நிற்க! 

கர்நாடகா செய்தி விஷயத்தில் ஒரு பெண்மணி, தன்னுடைய மாமியார் சமஸ்க்ரிதம் அல்லது இந்திப் பரிட்சையில் பாசாக வேண்டும் என்று எழுத நினைத்து, ' மாமியார் (பா)சாக வேண்டும்' என்று எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன்!    

= = = = = = = = = =

  புதுசு : 

அதிக இடம் இல்லை என்பதால், பெங்களூர் to பாண்டி பயணம் சென்ற டிசம்பர் 29 (2024) அன்று எடுக்கப்பட்ட சில படங்கள் மட்டும் இன்றைய பதிவில். 


எல்லோரும் புறப்படுவதற்குத் தயார் ஆகிக்கொண்டிருந்தபோது பேரன் கொடுத்த போஸ் !


7.15 க்குப் புறப்பட்ட நாங்கள் கிருஷ்ணகிரி முருகன் இட்லி கடையில் முதல் ஸ்டாப். அங்கு நிறைய நேரம் வராந்தாவில் காத்திருந்து, பிறகு இடம் பிடித்தோம். சாப்பிட்ட எல்லா விஷயங்களும், + காபியும் மிகவும் நன்றாக இருந்தன. 

கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் கண்ட சில காட்சிகள், கீழே !






 


இது நாங்கள் பயணம் செய்த கார் அன்று. பக்கத்தில் இருந்த கார். 


 தூரத்தில் தெரிவது திருவண்ணாமலை என்று நினைக்கிறேன். 

(தொடரும்) 

= = = = = = = = = = =

43 கருத்துகள்:

  1. பாசாக வேண்டும் என மாணவர்கள் கோயில் சுவற்றில் எழுதும் பகுதி நன்றாக இருந்தது. ரசனையாக எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. கோயில் கோபுரம் இல்லாமல் ஒரு மலையைப் போட்டு, திருவண்ணாமலையாக இருக்கும் என எழுதுவது, செல்லாது செல்லாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைபாஸ் ரோடில் இருந்து பார்க்கையில் இதுதான் தெரிந்தது.

      நீக்கு
  3. 'பேரன் போஸ்' படத்தைப் பார்த்ததும் எனக்கு பஹ்ரைன் நினைவு நிழலாடியது. ஆபீஸ் ப்ரொஜக்டரைக்்கொண்டுவந்து வீட்டுச் சுவற்றில் பெரிதாக திரைப்படங்கள் போட்டு, பசங்க மற்றும் என் அம்மாவைப் பார்க்க வைத்தது நினைவுக்கு வருது (எப்போதும்போல் என்னிடம் புகைப்படங்கள் உண்டு). அப்படி ஒரு தடவை லயன் கிங் படத்தை பையனுக்காகப் போட்டுவிட்டு ஹாலுக்குச் சென்றிருந்தோம். (எல் கேஜி என நினைவு). ஒரே அழுகைச் சத்தம் .. என்னவோ ஏதோ என்று வந்து பார்த்தால், அப்பா லயன் இறப்பது அவனை அவ்வளவு பாதித்துவிட்டது. அவனைச் சமாதானப்படுத்தினாலும் அதன் பின் அந்தப் படத்தை அவன் பார்க்கவில்லை. அவனின் சென்டிமென்ட் குணத்தை அப்போது அறிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. //இந்தப் பெண்ணுக்கு எங்கள் குஜராத்திப் பெண்கள் போல//- ஹாஹாஹா... பொதுவெளியில் எழுதுவது தவறு. இருந்தாலும் குஜராத்தி, சிந்தி, மார்வாரி பெண்கள் (சரி சரி கேரளப் பெண்களும்கூட) திருமணத்துக்கு முன்பு வரை மிக அழகு, தமன்னா பாணி... அதற்குப் பின்பு, அதுவரை வாயைக் கட்டிய அவர்கள், சந்தோஷத்தில் தடைகளை மீறிவிடுவதால், கணவன் எப்படி ஒல்லியா அழகா இருக்கான் அவனுக்குப்போய் இப்படி.... என்று பெரும்பாலானவர்கள் நினைக்கும்படியாக ஆகிவிடும்.

    பதிலளிநீக்கு
  5. இந்திய பொதுப்புத்தி கருப்பை அழகு என ஏற்றுக்கொள்வதில்லை. இதிஹாசங்களில் நிறங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், ராம, கிருஷ்ணர்களையே வெண்மை நிறத்தோடு வரைந்து வைக்கிறோமே...

    பதிலளிநீக்கு
  6. எபி சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருக்கும் காலையில் எழும் பழக்கம் போய்விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் அப்படி கேட்கிறீர்கள்? நான் தினமும் காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். ஆனால் எ பி பக்கம் வருவதற்கு 7 மணி ஆகிவிடும்.

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை இதைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன்.

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காலைல எழுந்தாலும் வேலை இல்லையா வீட்டுல!!! ஒவ்வொரு நாள் காலை சாப்பாடு வேலைகல் பொருத்து இருக்கும் நேரம் இங்கு வர. இடையில் சில ஃபோன் கால்கள்... என் வேலை என்று. அப்படி ஒவ்வொருத்தருக்கும் இருக்கும்!

      நீங்க 10 ஆயிரம் அடிகள் போகலையா இன்னிக்கு!!??

      கீதா

      நீக்கு
    3. காலையில் முதல் வேலை 10,000 அடிகள் நடப்பது. வேலையைப் பொறுத்து தொடர்ந்து ஒரு மணி நேரம் ஜிம் செல்வேன்

      நீக்கு
  7. வருங்காலத்திய தழ்நாட்டு முதல்வர்களில் ஒருவர் பதவி ஏற்பது காதில் விழுகிறதே: ’ரவி 5C ஆகிய நாண்... ‘

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார் ! நீங்க மீண்டும் எ பி யில் எழுதப்போவதாக ஓர் அறிவிப்பு பல வாரங்களுக்கு முன்பு பார்த்தேனே - என்ன ஆயிற்று?

      நீக்கு
  8. இந்த வார கேள்வி கேட்கும் உரிமையை டெண்டர் விட்டு ஹோல் சேல் ஆக நெல்லைக்கு கொடுரது விட்டீர்களா? பா வெ யையும் காணோம்.
    கருப்பு சிவப்பு கேள்வியம், பதிலும் நன்றாக இருந்தது.

    முருகன் இட்லி கடை கொஞ்சம் விலை கூடுதல் என்பது எனது கணிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது! எங்களை நம்பி நெல்லை மட்டும்தான் கேள்வி கேட்கிறார். மு இ கடை - விலை அதிகம் இருந்தாலும், தரம் நன்றாக உள்ளது.

      நீக்கு
    2. மருகன் இட்லி கடை தரம் நன்றுதான். ஆனால் வார இறுதியில் சென்னை to பெங்களூர் வரும்போது இடையில் இருக்கும் முருகன் இட்லி கடையில் எதையெதையோ தோசை என்ற பெயரில் கொடுத்து கல்லா கட்டுவதும் கஸ்டமர்கள், இவ்வளவு கூட்டத்தில் இனி வேறு எந்த ரெஸ்டாரென்டைத் தேடுவது, நமக்கு உண்ண ஏதேனும் வந்தால் சரிதான் என்று சாப்பிட்டுச் செல்வதும் வழக்கமாகிவிட்டது. சாய் சங்கீத்தில் ரவா தோசை ஆர்டர் பண்ணினால் டிஷ்யூ பேப்பர் ரவா தோசை போட்டு நம்மைக் கொல்கிறான். என்ன செய்ய?

      நீக்கு
  9. இந்த வாரத்தின் கேள்வி பதில்கள் நன்று. மொத்தமும் நெ.த. கேள்விகள்! ஆஹா... என்னையும் குறிப்பிட்டு இருப்பது கண்டேன் - மகிழ்ச்சி.

    தில்லியைப் பொறுத்தவரை இரண்டுமே - வெய்யில், குளிர் - அதிகம். எனக்குப் பழகி விட்டது என்பதால் இரண்டுமே அதிகம் பாதிப்பதில்லை. என்னதான் குளிர் பிடித்த சீதோஷ்ணம் என்றாலும் சமீப நாட்களில் குளிர் அதிகம் தெரிகிறது - வயது ஏறிக்கொண்டு போவது காரணமாக இருக்கக்கூடும்! :)

    பா(சாக) வேண்டும் - ஹாஹா.... ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. கேள்வி பதில்கள் நன்று.

    கோவில் சுவற்றில் வேண்டுதல் எழுதுவது படிக்கும்போது சிரிப்பை வரவழைத்தது.

    எனது பேரனும் லயன்ஸ் படம் பார்த்து அப்பா லயன் இறந்தபோது கவலை கொண்டார். இது படம்தானே என தேற்றினோம்.சிறுவர்களுக்கு படங்களில் வில்லனைத் தவிர்த்து மற்றையவர்கள் இறப்பது கவலையை தருகிறது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. நெல்லையின் இரண்டாவது கேள்விக்கான பதிலைக் கைதட்டி சூப்பர் என்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நெல்லை நீங்க சாப்பிட்ட உணவகத்தின் உணவு பற்றிச் சொல்வீங்க.

    ஆனால் அது ஒவ்வொருவரது டேஸ்டும் ஒவ்வொரு மாதிரி இல்லையா? எனக்குப் பிடிச்சது மத்தவங்களுக்குப் பிடிக்கும்னு சொல்ல முடியாது. அது போல உங்களுக்குப் பிடிச்சது மத்தவங்களுக்கு..இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குப் பிடிச்சது உங்களுக்குப் பிடிக்கும்னு இதையும் அதோடு சேர்த்துக்கணும்!!! ஹாஹாஹஹா

      கீதா

      நீக்கு
    2. முருங்கைக்காய் மசியல், வெங்காய குருமா, பூண்டு ஊறுகாய் போன்ற பதிவுகளையும், வாழ்க்கையில் இதைச் செய்யமாட்டோம் என்றாலும் படிப்பதில்லையா? உணவின் சுவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இருந்தாலும் சிலருக்குப் பயன்படும்

      நீக்கு
  13. பாண்டிச்சேரி காரணமாக, வருடக் கடைசியில் எழுதும் அந்த வருட எ.பி. புள்ளிவிவரங்களை மறந்துவிட்டீர்களா? //

    பாண்டிச்சேரி காரணமாக//
    கௌ அண்ணா இதுக்கு ஸ்கூல் பையன் மாதிரி ரொம்ப சின்சியரா பதில் சொல்லியிருக்கீங்களே...வழக்கமான உங்க நகைச்சுவை மிஸ்ஸிங்க் இதில்!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பென்சிலால் எழுத்து வேண்டுதலும், லல்லியின் சம்பவமும் செம சுவாரசியம். அதை இப்போதைய செய்தியோடு லிங்க் செய்து சொன்னது செம கற்பனை கௌ அண்ணா. ரொம்ப ரசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அதிக இடம் இல்லை என்பதால், பெங்களூர் to பாண்டி பயணம்//

    இதை வாசித்ததும், காரில் இடம் இல்லையா அதனால் பயணம் ரயிலிலா ஆனால் கார் என்று சொன்ன நினைவாச்சேன்னு சட்டுனு நினைச்சு அடுத்து தொடர்ந்து வாசித்த போது புரிந்துவிட்டது!

    படங்கள் நன்றாக இருக்கின்றன.

    கிருஷ்ணகிரி, தருமபுரி எல்லாம் சாலையில் செல்லும்ம் போது காணும் காட்சிகளை விட ரயிலில் செல்லும் போது செமையா இருக்கும்.

    ஆனால் உங்கள் பாதையில் தருமபுரி பக்க ம் வந்திருக்காது. கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை நேராக.

    முன்பு இருந்த பழைய ஹைவே ரோட்டில் போனால் காட்சிகள் நன்றாகத் தெரியும்.... இப்ப ரோடு எல்லாம் வேகமான பயணத்திற்காக மேம்பாலங்கள் பல வழிச்சாலைகள் கட்டியிருப்பதால் கடைகளும் இடையிடையே வந்திருப்பதால் காட்சிகள் பல மிஸ் ஆகுது.

    நான் நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் ரயிலில் வந்தப்ப தருமபுரி வந்த பின் காட்சிகள் செமையா இருந்தன. மலைப் பகுதிகள் தொடர்ந்து. ஓசூர் வரும் முன் வரை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சாலைகளும் சாலை சார்ந்த பகுதிகளும் வேகமாக முன்னேறி வருகின்றன.

      நீக்கு
  16. இன்று யாருக்குமே 'சாவே வரக்கூடாது ' என்ற வரம் வாங்கியவன் பற்றிய ஜோக் நினைவுக்கு வரலையா?

    பதிலளிநீக்கு
  17. கேள்வி பதில்கள் அருமை...

    ஒவ்வொன்றும் சிந்திக்க வைத்தது...

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்விகளும், பதில்களும் மிக சுவாரசியமாக இருந்தது. தமன்னாவின் புகைப்படங்கள் எப்படித்தான் வித்தியாசமாக அதுவும் சகோதரர் நெல்லைத்தமிழரின் கேள்வி, பதில்களுக்கு பொருத்தமாக உங்களுக்கு கிடைக்கிறது என ஆச்சரிய படுகிறேன். உங்களின் இந்த தேடுதல் உழைப்பிற்கு பாராட்டுக்கள்.

    பரீட்சை வேண்டுதல்களில் சாவை கொண்டு வந்த அந்த அறிவுபூர்வமான அந்த பாவிக்கும் பாராட்டுக்கள். அதையே வைத்து , மாமியாரின் சாவுக்கு இறைவனிடம் வேண்டிக் கொண்ட மருமகள் பெண்ணை தாங்கள் குற்றமற்றவர் என்று வாதாடிய திறமைக்கும் பாராட்டுக்கள்.:))

    தங்களின் பயணங்களின் போது எடுக்கப்பட்டபடங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. நானும் என் பயணங்களில் இந்த மாதிரி மலைகளை படமெடுத்து வைத்திருக்கிறேன். மலைகளை, மரங்களை அதன் அழகை படமெடுப்பது எனக்கும் மிகப் பிடிக்கும். என்ன.. காரில் செல்லும் போது உண்டாகும் அசைவில் சரியான கோணங்கள் அமையாது போய் விடும். உங்கள் படங்கள் அழகாக வந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    இன்று தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!