திருப்பம் - ரா. ஆறுமுகம்
எனவே
அவர் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு, அவர் எதிர்பார்த்ததற்கு மேல் பெரிய பந்தலையும்,
சமையல் ஏற்பாடுகளையும், இதர வசதிகளையும் செய்து முடித்திருந்தார்கள். அவரே ஒவ்வொரு
வீடாகப் போய்க் கல்யாணத்துக்கு அழைத்திருந்ததால் அந்தக் கிராமமே திரளாக வந்து பந்தலை
நிரப்பியிருந்தது.
மணவறையில்
மணமக்களுக்கு முன்னால் புரோகிதர் ஹோம குண்டத்தை வளர்த்துக் கொண்டிருந்தார். பந்தலில்
நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையின் தந்தையை ஒருவர் தனியே அழைத்துப் போய் ரகசியமாக ஏதோ
சொன்னார். உடனே அவர் மணவறைக்கு ஓடி, "நிறுத்துங்கள்!" என்று புரோகிதரைப்
பார்த்துக் கத்தி விட்டு. நாகஸ்வரம் வாசிப்பவர்களையும் நிறுத்தும்படி கையை உயர்த்திக்
காட்டினார். பந்தலில் திடீரென அமைதி. ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
பின்பு
அவர் பெண்ணின் தகப்பனாரிடம் ஓடி, "நீங்கள் என்னிடம் சொன்னதென்ன?" என்று கோபமாய்க்
கேட்டார்.
"என்னசொன்னேன்?"
பதறிக்கொண்டே கேட்டார் பெண்ணின் தந்தை.
''பதினைந்து
பவுன் நகைகள் போடுவதாகச் சொன்னீர்களல்லவா? இப்போது பெண்ணின் மேல் இருப்பதெல்லாம் சேர்த்துப்
பதினான்கு பவுன்தானாமே?" அதட்டினார் மாப்பிள்ளையின் தந்தை.
''மன்னித்துக்
கொள்ளுங்கள். உங்களை ஏமாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் நான் வேண்டுமென்றே செய்யவில்லை.
ஆசாரியிடம் பதினைந்து பவுன் கொடுத்தேன். அவர் எல்லாவற்றையும் செய்து முடித்து நிறுத்துப்
பார்க்கையில் பதினான்கு பவுனும் சற்றுக் கூடுதலாகவுமிருந்தது. சேதாரம், அது இது என்று
கணக்குச் சொல்லிவிட்டார். அதற்கப்புறம் ஒன்றும் செய்ய முடியவில்லை..." என்று விளக்கினார்
பெண்ணின் தந்தை.
"அதெல்லாம்
எனக்குத் தெரியாது. இப்போது அந்தக் குறைந்த ஒரு பவுனைக் கொடுத்தால்தான் கல்யாணம் நடக்கும்"
என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் மாப்பிள்ளையின் தந்தை.
"தற்சமயம்
கையிலிருக்கும் பணம் கல்யாணச் செலவுக் குத்தான் சரியாக இருக்கும். இக்காரியம் முடியட்டும்.
இரண்டு நாட்களில் கொடுத்து விடுகிறேன்." கெஞ்சாத குறையாகக் கேட்டார்.
"இதோ
பாருங்கள். உங்களைப் பெரிய மனிதரென்று நினைத்தேன். நீங்கள் என்னை ஏமாந்தவன் என்று நினைத்து
விட்டீர்கள். இப்போதே, பணமோ, பவுனோ, இரண்டில் ஒன்று வராவிட்டால் இந்தக் காரியம் நடக்காது.
"ஏய், சாமிநாதா, எழுந்து வா. நமக்கு இந்த இடம் ஒத்து வராது!'' என்று மாப்பிள்ளைக்குக்
கட்டளையிட்டார். மாப்பிள்ளை உடனே எழுந்து வந்து விட்டார்.
பந்தலில்
உட்கார்ந்திருந்த சில பெரிய மனிதர்கள் வந்து மாப்பிள்ளையின் தந்தையிடம் எவ்வளவோ சமாதானம்
செய்து பார்த்தார்கள். அவர் ஒரே பிடிவாதமாக, "பணம் அல்லது பவுன்" என்பதையே
வற்புறுத்தினார்.
பெண்ணின்
தந்தை கண்ணீர் கலங்கக் கையைப் பிசைந்து கொண்டு நின்றார், பெண்களின் கூட்டம் திகைத்து
நின்றது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த மணப்பெண் மணவறையை விட்டு எழுந்து தன்
தந்தையிடம் வந்து, "அப்பா, நீங்கள் கலங்க வேண்டாம். நானே மாப்பிள்ளையை ஒரு வார்த்தை
கேட்கிறேன்" என்று ஆறுதல் கூறிவிட்டு, மாப்பிள்ளையைப் பார்த்து,
"நீங்கள்
படித்தவர். என்ஜினியர் பட்டம் பெற்றவர். மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்.
என்னோடு வாழப் போகிறவர். உங்கள் அப்பாவின் பிடிவாதத்தை நீங்கள் மாற்ற முடியாதா?"
என்று தயவாகக் கேட்டாள்.
"என்
அப்பாவைத் தட்டிக் கேட்க என்னால் முடியாது. மேலும் நான் சொல்வதை அவர் கேட்கவும் மாட்டார்.
அவர் சொன்னால் சொன்னதுதான்" என்று தலை குனிந்தபடியே சொல்லி விட்டுத் தம் அப்பாவுக்குப்
பின்னால் போய் நின்று விட்டார்.
''ப்பூ!
இவ்வளவுதானா உங்கள் தைரியம்?" என்று அலட்சியமாகச் சொல்லி விட்டு, "நானே உங்கள்
தந்தையிடம் கேட்கிறேன்" என்று மாப்பிள்ளையின் தந்தையை நோக்கி,
"என்
அப்பா உங்களை ஏமாற்ற மாட்டார். இப்போது இந்தக் காரியம் முடியட்டும். இரண்டு நாட்களில்
உங்கள் கணக்கைத் தீர்த்து விடுவார். என்ன சொல்லுகிறீர்கள்?" எனக் கேட்டாள்.
''உங்கள்
காரியம் முடிய வேண்டுமென்று இப்போது நீங்கள் என்னைக் கெஞ்சுகிறீர்கள். முடிந்த பின்பு
நான் உங்களைக் கெஞ்ச வேண்டும். அப்படித்தானே? அதெல்லாம் என்னிடம் நடக்காது ... "சரி,
வாப்பா சாமிநாதா, நாம் போகலாம் ஊருக்கு!" என்று தம் பையனைப் பார்த்து உத்தரவிட்டுப்
பந்தலை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்.
அதைக்
கண்ட பெண்ணின் தந்தை .அவர் கையைப் பிடித்து நிறுத்தி, பரிதாபமாகப் பார்த்தார். அவரோ
கையை உதறி விட்டு மேலே நடந்தார்.
மணப்பெண்
கொதித்து எழுந்தாள். தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி வீசினாள்.
"ஐயா,
மாப்பிள்ளையின் தந்தையாரே, நில்லுங்கள். பந்தலை விட்டு வெளியேறாதீர்கள்!" என்று
சத்தம் போட்டாள்.
அவரும்,
மாப்பிள்ளையும் திகைத்து நின்றார்கள். அவர்கள் முன் வேகமாக வந்து நின்ற அவள்.
"என் அப்பா உங்களிடம் கொடுத்த ஐயாயிரம் ரூபாயை இப்போதே கொடுத்துவிட்டு இந்த இடத்தை
விட்டு நகருங்கள்!'' என்று கர்ஜித்தாள்.
"உங்கப்பா
கொடுத்த பணத்தில்தானே மாப்பிள்ளைக்கு வேண்டிய உடை, கடிகாரம், மோதிரம், மற்ற சாமான்கள்,
நாங்கள் வந்த செலவு எல்லாம் ஆகி விட்டதே? இப்போது நாங்கள் திரும்பிச் செல்லத்தான் பணம்
இருக்கிறது!"
"கல்யாணம்தான்
நின்று விட்டதே. எங்கள் பணம் மட்டும் உங்களிடம் நிற்கலாமா?"
"திடீரென்று
திருப்பிக் கேட்டால் எப்படிக் கொடுக்க முடியும்? ஊருக்குப்போய் அனுப்புகிறேன்!"
"ஒரு
பவுன் - ஒரு ஐந்நூறு ரூபாய்க்கு - நீங்கள் எங்களை நம்பவில்லை. ஐயாயிரத்துக்கு நாங்கள்
உங்களை நம்பவா? முடியாது. இந்த இடத்தைவிட்டு உங்களை நகர விடமாட்டேன்!'' அவளுடைய கண்கள்
விரிந்தன.
"இந்தப்
பெண் சொல்வது சரிதான். நீங்கள் மட்டும் பிடிவாதமாக இருக்கும் போது, இவர்கள் கொடுத்ததையும்
திருப்பிக் கொடுத்து விடுவதுதான் நியாயம்" என்று பந்தலில் இருந்த சிலரும் சொன்னார்கள்.
மாப்பிள்ளையின்
தந்தை திருதிருவென்று விழித்தார் பதில் சொல்ல முடியாமல். அவரைச் சேர்ந்தவர்கள் முன்
வந்து, "ஏதோ தெரியாமல் கோபத்தில் கேட்டு விட்டார். அந்த ஒரு பவுனைப் பெண் வீட்டார்
செளகரியம் போல் கொடுக்கட்டும். இப்போது காரியம் நடக்கட்டும்'' என்று சமாதானம் செய்தார்கள்.
"இவ்வளவு
நேரமும் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? இவரை அப்போதே தட்டிக் கேட்க உங்களால் முடியவில்லையல்லவா?
இனி இந்தப் பந்தலில் இந்த மாப்பிள்ளைக்குக் கல்யாணம் நடக்காது. பணத்தை எண்ணிக் கொடுத்து
விட்டு வெளியே போகச் சொல்லுங்கள்." பெண் தன் பிடிவாதத்தை மேலும் இறுக்கினாள்.
"மாப்பிள்ளைக்கு
இங்கு கல்யாணம் நடக்காவிட்டாலும் வேறு எங்கும் நடந்துவிடும் ஆனால் உன் விஷயம் அப்படியல்லவே?
ஒரு முறை தடைப்பட்டு விட்டால் வேறு யாரும் உன்னைப் பெண் கேட்டு வருவார்களா? அதை நீ
யோசிக்க வேண்டாமா?" என்று மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்கள் கேட்டார்கள்.
"என்னைப்
பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம். ஒரு நியாயத்தைத் தன் தந்தையிடம் எடுத்துச் சொல்லத்
தைரியமில்லாத ஒருவரிடம் நான் எப்படி வாழ முடியும்? மேலும் இவ்வளவு தூரம் காரியம் முற்றிய
பின்பு, நான் இவர்கள் வீட்டுக்குப் போனால் என்னை எப்படி நடத்துவார்கள் என்று நீங்கள்
யோசிக்க வேண்டாமா?... சரி, பேச்சை வளர்க்க வேண்டாம். பணம் வரட்டும்.
"ஏம்மா,
நியாயம், நியாயம் என்கிறாயே? நாங்களோ வெளியூர்க்காரர்கள். இங்கு யாரையும் எங்களுக்குத்
தெரியாது. ஐயாயிரம் ரூபாய் எப்படிப் புரட்ட முடியும்? இந்த நியாயம் உனக்குத் தெரியவில்லையா?"
என்று மடக்கினார்கள், மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்கள். அதோடு, அவர்கள் பந்தலை விட்டு
வெளியே செல்லவும் முயன்றார்கள்.
மணப்பெண்
அவர்களிடம் நின்று பதில் சொல்ல விரும்பாமல், தன் வீட்டுக்குள் ஓடி, தன்னைச் சேர்ந்தவர்களிடம்
இரகசியமாகப் பேசி, பத்து ஆட்களைத் தயார் செய்து மணப் பந்தலின் வாசலில் நிற்க வைத்து
விட்டாள். உடனே வெளியில் வந்து, "இங்கு நடந்ததைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
எல்லோரும் தயவு செய்து இருந்து சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்!" என்று வேண்டிக்
கொண்டாள்.
பெண்ணின்
பிடிவாதத்தைக் கண்ட மாப்பிள்ளையின் தந்தை வேறு வழியில்லாமல் வெளியில் செல்லவும் முடியாமல்,
தன்னோடு வந்திருந்த உறவினர்களிடம் கலந்து பேசி, அவர்களிடமிருந்த நகைகளை வாங்கி, ஒரு
மத்தியஸ்தரை வைத்து அவரிடம் ஒப்படைத்து, "இவை மொத்தம் பதினைந்து பவுன் இருக்கிறது.
மதிப்பு ஐயாயிர ரூபாய்க்கு மேலிருக்கும். இவைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஊருக்குப் போய்ப்
பணம் கொண்டு வந்து மீட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
பெண்ணும்
அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டாள். மாப்பிள்ளை வீட்டார் உடனே தங்கள் ஊருக்குப் புறப்பட
ஆயத்தம் செய்தனர், தாங்கள் தங்கியிருந்த இடம் சென்று.
அதற்குள்
அந்தக் கிராமத்துப் பெரியவர்கள் சிலர் கூடிப் பேசி, அந்தக் கல்யாணத்துக்கு வெளியூரிலிருந்து
வந்திருந்த அப்பெண்ணின் தாய் மாமனைக் கூப்பிட்டு, அவருடைய பையனுக்கு அப்பெண்ணை அதே
மணமேடையில் திருமணம் செய்து விடுவதென்று முடிவு கட்டிவிட்டனர். அந்தப் பையனும் கல்யாணத்துக்கு
வந்திருந்தான். அவனும் பி.ஏ. படித்தவன்.
புரோகிதர்
மளமளவென்று மந்திரம் ஓதி, நாகஸ்வரக்காரர்கள் கெட்டிமேளம் வாசிக்கக் கல்யாணம் சிறப்பாக
நடந்தேறியது!
மணப்பெண்ணின்
மனோ திடத்தை மெச்சிக் கொண்டே கிராமத்து ஜனங்கள் விருந்து சாப்பிட்டு, அவளுக்குத் தங்கள்
வெகுமதிகளையும் கொடுத்துச் சென்றனர்.
எல்லாம் நல்லவிதமாக முடிந்ததில் அனைவரையும்விட மிக மகிழ்ச்சி அடைந்தவர் நகைகள் செய்து கொடுத்த பொற்கொல்லர்.
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅன்பின் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் ஓங்குக...
மீண்டும் குதர்க்கம் செய்கின்றது கைத்தல பேசி..
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குJayakumar
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் தைப் பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி, மற்றும் உத்தராயண புண்ணிய கால நல்வாழ்த்துகள். இந்நன்நாளில் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிலளிநீக்குகதை என்னவோ தாய்மாமனைக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்ணே இந்த நாடகத்தை எல்லாம் செட்டப் செய்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அதற்கு கடைசி வரியில் வரும் கொல்லரும் உடந்தை.
ஆசிரியர் பெண்ணைத் தைரியமான கதாபாத்திரமாகத்தான் படைத்திருக்கிறார் அப்படியிருக்க அவளுக்கு எதுக்கு இந்த செட்டப்? வீட்டிலேயே தைரியமாகப் பேசியிருக்கும்படி ஆசிரியர் செய்திருக்கலாமே அப்ப கதை வேறு வகையில் போக வேண்டியிருக்கும்..
நீக்குகொல்லரின் சந்தோஷம் வேறு. அவர் செய்த நகையாச்சே!!!
கீதா
ஒத்துக்கொள்கிறேன். ஆனால் "ரோஜா" சினிமா எட்டிப்பார்க்கிறது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பொக்கிஷ கதை நன்றாக உள்ளது. அந்த மணப்பெண்ணின் தைரியத்தைப் பாராட்ட வேண்டும்.
தங்கம் ஒரு பவுன் 500ரூபாய் உள்ள காலத்தில் எழுதப்பட்ட கதை. எங்கள் திருமண சமயத்தில் பவுன் ஆயிரத்தையும் தாண்டி விட்டது. இப்போது கேட்கவே வேண்டாம். (அரை லகரத்திற்கும் மேலாக நடை போடுகிறது.)
அந்த கால கதைகளின் முடிவின்படி இறுதியில் சுபமாக முடித்தமை கண்டு மகிழ்ச்சி.இப்படித்தான் நடக்குமென்று கதை படித்து வருகையில் எதிர்பார்த்தேன். கதாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
கதை, எழுதப்பட்ட காலத்தை மனதில் வைத்துப் படிக்கையில் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅரசாங்க உத்தியோகம் என்ற ஒன்று வந்த பிறகுதான் (120 ஆண்டுகளுக்குள்ளாக), வரதட்சனை என்ற ஒன்று ஆரம்பித்திருக்க வேண்டும்.
அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்..
பதிலளிநீக்குஎனது கைத்தலபேசி கடந்த ஒரு வார காலமாக பழுதுற்று இருக்கின்றது..
எனது தஞ்சையம்பதி என்ஞ்ம் தளத்தில் கடந்த மாதத்தில் முடித்து வைத்திருக்கின்றவைகளுக்குப் பின் புதிய பதிவுகள் வெளிவருவதற்குத் தாமதம் ஆகலாம்..
அங்கே வலைத்தளத்தில் இயங்குவது சிரமமாக இருப்பதால் இங்கே இத் தளத்தில் விவரங்களைத் தெரிவித்துள்ளேன்..
வணக்கம்...
பவுன் விலையைப் படிக்கும்போது நான் தவறவிட்ட அந்தக் காலங்கள் (2014 வரை, 1994ல் தொடங்கி) நினைவுக்கு வருகின்றன. என் அம்மாவிடம் மட்டும் பல விஷயங்களைப் பேசித் தெரிந்துகொண்டிருந்தால்...
பதிலளிநீக்குநெல்லை, நான் கல்லூரியில்படிக்கும் காலத்திலேயே தங்கத்தில் முதல்லீடு செய்யும் வீட்டுப் பெண்களைப் பார்க்கலாம். இப்பவும் கூட முதலீடு பற்றிப் பேசும் பல விற்பன்னர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைப் பேசுகிறார்கள். நகைகள் என்றில்லாவிட்டாலும்.
நீக்குஏனோ, அரசு, கோல்ட் பேப்பர் பாண்டை ரத்து செய்துவிட்டது.
நகைகள் என்று இருந்தால் என்னதான் நல்ல முதலீடு என்றாலும் விற்கும் போது சேதாரம் அது இதுன்னு போய் லாபம் கிடைக்குமா? வாங்கும் போது இருந்ததை விட விலை தற்போது கூடியிருந்தாலும்?
கீதா
தங்கம் விலை, வரதட்சணை கேட்பது, (அதனால் கொடுமைகள்) அரசு உத்தியோகம் மிக முக்கியம் என்பதெல்லாம் 70 களில் எழுதப்பட்ட கதையாக இருக்கலாம்.
பதிலளிநீக்குகதை ஒரு நிகழ்வைச் சொல்வது போல் எழுதப்பட்டிருந்தாலும் அந்தக் காலம் என்பதால் நன்றாக இருக்கிறது.
குறிப்பாக அக்காலகட்டத்தில் பெண் தைரியமாகப் பேசும் வசனங்கள் வைத்த கதாசிரியருக்கு சபாஷ் மற்றும் பாராட்டுகள்.
கீதா
80 களிலுமே வரதட்சிணை கேட்பது இருந்ததே! குறிப்பாக ஒரு சமூகத்தில் வைரத்தோடு மிக முக்கியம். ஸ்டேட்டஸ்.
பதிலளிநீக்குஅதைப் போட இயலாத குடும்பங்கள் பட்ட கஷ்டங்கள் அனுபவங்களைப் பார்த்திருக்கிறேன்.
அந்தப் பெண் கதாபாத்திரத்தின் தைரியமான கேள்விகளில் அந்தக் காலகட்ட கீதாவைப் பார்க்கிறேன்.
இப்பவும் எண்ணங்களில் மாற்றமில்லை.
இப்ப இந்தக் காலகட்டத்தில் வரதட்சிணை போன்றவை கேட்கப்படாவிட்டாலும் இன்னும் மறைமுகமாக இருக்கிறது என்பதோடு, பெண் பிள்ளைகளுமே கூட பெற்றோரிடமே டிமான்ட் செய்வதும் பார்க்க முடிகிறது.
கீதா
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குகே. சக்ரபாணி
அந்த காலத்தில் (என் அம்மா காலத்தில்) வைரத்தோடு போடவில்லை என்று நின்ற கல்யாணங்களையும், தலைத்தீபாவளி சீர் சரியாக செய்யவில்லை என்று பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பிய கதையை சொல்லி இருக்கிறார்கள். இந்த மாதிரி தைரியமாக பேசும் பெண்கள் அந்தக் காலத்தில் இருந்து இருந்தால் பெண்கள் நன்றாக வாழ்ந்து இருப்பார்கள்.
பதிலளிநீக்குகதை திருப்பம் நன்றாக இருக்கிறது.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
அனைவருக்கும் தைப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும்பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகதை எழுதப்பட்டிருந்த காலத்தைப் பார்க்கும்போது மணப்பெண் துணிச்சலான கதாபாத்திரம் வரவேற்கத்தக்கது.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குகதை நன்று...