திங்கள், 13 ஜனவரி, 2025

"திங்க" க்கிழமை  : வறுத்து அரைத்த பருப்புக் குழம்பு - துரை செல்வராஜூ ரெஸிப்பி

 வறுத்து அரைத்த பருப்புக் குழம்பு

ஃஃ ஃஃ ஃஃ ஃஃ
 
தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம் கையளவு (15)
நடுத்தர தக்காளிப் பழம் 2 
கறிவேப்பிலை 3 இணுக்கு
பூண்டு  15 பல்
இஞ்சி விரலளவு
துவரம் பருப்பு  2 Tbsp 
கடலைப் பருப்பு  2 Tbsp
நல்லெண்ணெய் 100 ml
வீட்டில் தயாரிக்கப்பட்ட
சாம்பார் பொடி 2 tsp 
மஞ்சள் தூள் சிறிதளவு 
வறுத்த வெந்தயப் பொடி  ஒரு tsp
பால் பெருங்காயத்தூள் சிறிது
கல் உப்பு  தேவையான அளவு

தாளிப்பதற்கு :-
கடுகு ஒரு tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு 

செய்முறை:
முதலில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம் தக்காளிப் பழங்களை சுத்தம் செய்து கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இட்டு  .  விழுதாக அரைத்துக்  கொள்ளவும்.
 
வாணலியில் மிதமான சூட்டில் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு,  இரண்டையும் சிவக்க வறுத்து ஆறியதும் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

அடுத்து வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, -
கடுகு கறிவேப்பிலை  தாளித்த பின் இரண்டு வகையாக அரைத்தெடுத்த விழுதுகளையும் போட்டு வதக்கவும். 

எண்ணெய் பிரிந்து வருகின்ற  போது.  அதில் மஞ்சள் தூள் சாம்பார் பொடி, பெருங்காயத் தூள், வெந்தயப் பொடி, உப்பு எல்லாம் சேர்த்து சிறிதளவு வெதுவெதுப்பான நீரையும் சேர்க்கவும். 

குழம்பில் நீர் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.. 

குழம்பு நன்றாகக் கொதித்து
இறுகி  வருகின்ற போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும். 

வறுத்து அரைத்த பருப்புக் குழம்பு தயார். 

இந்த குழம்பில் நல்லெண்ணெய் சேர்ந்திருப்பதால் தோல் அழற்சி ஒவ்வாமை உடையவர்களுக்கு ஒத்து வராது.. 
இந்நிலையில் தரமான சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்தலாம்..

நமது சமையல்
நமது நலம்....

5 கருத்துகள்:

  1. பருப்புக் குழம்பில் இஞ்சி பூண்டா?

    நான் கேள்விப்பட்டதில்லை. அவற்றைத் தவிர்த்தால் குழம்பு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பு நன்று. கேஜிஜி கோபத்தில் லீவு எடுத்துக்கொண்டுவிட்டாரா? படங்களைக் காணோமே...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களுடன் போகிப் பண்டிகை, மற்றும் திருவாதிரை நல்வாழ்த்துக்கள்.

    இன்றைய திங்கள் பகிர்வு நன்றாக உள்ளது. இது போல் எல்லாவற்றையும் அரைத்து செய்ததில்லை. ஒரு முறை இவ்விதம் செய்து பார்க்கிறேன்.

    இன்று கொஞ்சம் அதிகப்படியான வேலைகள். அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள். பிறகு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிச் செய்துவிட்டு, உங்களுக்கு என்ன ஆச்சு, எப்போதும் பண்ணுவதுபோலச் செய்யாமல் சாம்பாரில் இஞ்சி பூண்டு போட்டு எங்களைப் பழிவாங்குகிறீர்கள், என கமலா ஹரிஹரன் மேடத்துக்கு அவர் வீட்டாரிடம் அர்ச்சனை கிடைக்கக் கூடாது என்பதையும் ப்ரார்த்தனையில் சேர்த்துக்கொள்வோம்.

      நீக்கு
  3. துரை அண்ணா, செய்முறை நல்லாருக்கு.

    பருப்பு வேக வைத்து சேர்க்காமல், இப்படி அரைத்துவிட்டுச் செய்வதை (இஞ்சி போட்டதில்லை மற்றபடி எல்லாம்) அரைத்துவிட்ட வெறும் குழம்பு.....புளிசேர்த்து இப்படி அரைத்துவிட்டால் அரைத்துவிட்ட புளிக்குழம்பு என்று செய்வதுண்டு.

    ஆனால் பருப்பு வேக வைத்துச் சேர்த்து அரைத்துவிட்டுச் செய்யும் சாம்பாருக்கும் இஞ்சி சேர்த்தது இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நல்ல செய்முறை. எங்களுக்கு இது புதிது.

    காய்கள் இல்லாதபோது இந்தமுறையில் பருப்புக் குழம்பு செய்யலாம்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!