திங்கள், 27 ஜனவரி, 2025

"திங்க" க்கிழமை   : தேங்காய் பால் கூட்டு - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

தேங்காய் பால் கூட்டு
ஃஃ ஃஃ ஃஃ ஃஃ 

தேவையானவை:
நடுத்தரமான
உருளைக்கிழங்கு  300 gr 
சாம்பார்  வெங்காயம் 15 
முந்திரிப் பருப்பு 15
தேங்காய் ஒருமூடி
பச்சை மிளகாய் 2
 மஞ்சள் தூள் 1  tsp 
மிளகு 1  tsp 
சீரகம் 1⁄2   tsp 
ஓமம் 1⁄2   tsp 
பட்டை ஒரு துணுக்கு
கிராம்பு 3
கல் உப்பு தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு :-
கடலெண்ணெய் தேவைக்கு
கடுகு 1⁄2   tsp 
உளுத்தம்பருப்பு 1⁄2  tsp 
கறிவேப்பிலை ஒரு இணுக்கு


செய்முறை:-

உருளைக் கிழங்குகளைத்
தோல் சீவி  நாலாக நறுக்கிக் கொள்ளவும்.. வெங்காயத்தையும்  சுத்தம் செய்து ஒன்றிரண்டாக
நறுக்கிக் கொள்ளவும்.. 

மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவி தண்ணீர் விடாமல் 
மிக்ஸியில் அரைத்து 
முதல் நிலைப் பாலாக 200 ml
 பிழிந்து  -

இந்தப் பாலுடன் முந்திரிப் பருப்பு மிளகு ஓமம் சேர்த்து மிக்ஸியில் அடித்துத் தனியே வைக்கவும்.. ..

முதல் முறை அரைக்கப்பட்ட தேங்காய்த் துருவலுடன் மேலும் சிறிது தண்ணீர் விட்டு
இரண்டாம் நிலைப் பாலாக 150 ml  பிழிந்து -
இதனுடன் உருளைக் கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம், பட்டை கிராம்பு மிளகாய் தாளித்து மஞ்சள் பொடியுடன் வெங்காய  துண்டுகளையும் சேர்த்து சற்று வதக்கி வெந்து கொண்டிருக்கும்  உருளைக் கிழங்குடன் சேர்க்கவும்..

நன்றாக வெந்த கிழங்குகளை
ஒன்றிரண்டாக மசித்த 
நிலையில் முதலில் பிழிந்தெடுத்த பாலையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்...

உருளைக் கிழங்கு துண்டுகள் மசிந்தும் மசியாமலும்  இருப்பது நல்லது..

தேங்காய்ப் பால் சற்று சுண்டியதும் இறக்கவும்.

இதில் இரண்டே இரண்டு பச்சை மிளகாய் மட்டுமே... எவ்வித மசாலாத் தூளும் சேர்க்கப்படவில்லை..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

19 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  3. அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இக்குறிப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. தேங்காய் பால் கூட்டு நன்றாக இருக்கிறது.

    நாங்களும் தேங்காய் பால் எடுத்து இம்முறையில் பால்கறிகள் செய்வோம்.
    நாமும் காரத்துக்கு இரண்டு பச்சை மிளகாய்தான் சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மாதேவு அங்கு செய்யப்படும் பல கறிகள் பால் கறிகள் என்று உண்டே. நன்றாகச் சுவையாக இருக்கும்

      கீதா

      நீக்கு
    2. மாதேவு - மாதேவி என்று வர வேண்டும்.....தட்டச்சுப் பிழையாகிடுச்சு.

      கீதா

      நீக்கு

    3. இரண்டு பச்சை மிளகாய் தான் சரியான அளவு

      அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும்
      மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  6. தேங்காய்ப்பால் கூட்டு செய்முறை நல்லாருக்கு துரை அண்ணா.

    ஓமம் சேர்த்துச் செய்ததில்லை.

    கிட்டத்தட்ட தமிழ்நாட்டு சொதி போன்று சேர்க்கப்படும் மசாலா. இலங்கை சொதியும் தேங்காய் பால் உண்டு ஆனால் கொஞ்சம் வித்தியாசம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயத்தில் உருளைக் கிழங்கு சேர்த்து செய்தால் வாயு தொல்லை இல்லாமல் இருக்கத்தான் ஓமம்..

      அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும்
      மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
    2. சமயத்தில் உருளைக் கிழங்கு சேர்த்து செய்தால் வாயு தொல்லை இல்லாமல் இருக்கத்தான் ஓமம்..

      அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும்
      மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  7. தேங்காய் பால் கூட்டு செய்முறை குறிப்பும் படமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும்
      மகிழ்ச்சி..

      நன்றியம்மா..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரடி

    இன்றைய திங்களில் தங்களது செய்முறையான உ. கி, தேங்காய் பால் கூட்டு நன்றாக அருமையாக உள்ளது. நான் உ. கி யுடன் கொஞ்சம் வேக வைத்த பா. பருப்பு சேர்த்துக் கொண்டு, வத்தல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்து விட்டு கூட்டு செய்வேன். தங்களது செய்முறை போல தேங்காய் பால் எடுத்து நீங்கள் சொன்ன மசாலா சாமன்களுடன் இனி ஒரு நாள் செய்து பார்க்கிறேன். சப்பாத்திக்கு பொருத்தமாக நன்றாக இருக்குமென தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பு வருகையும்
      கருத்திற்கும்
      மகிழ்ச்சி..

      நன்றியம்மா..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!