- உத்தர பிரதேசத்தில், 49 ஆண்டுகளுக்கு முன் கண்காட்சியில் தொலைந்து போன, தற்போது, புல்மதி என்றழைக்கப்படும் பெண், 8 வயது சிறுமியாக இருக்கும் போது மொராதாபாதில் கண்காட்சி ஒன்றில் காணாமல் போயுள்ளார். அவரை, வயதான நபர் ஒருவர் கூட்டிச்சென்று ராம்பூரில் ஒரு குடும்பத்தினரிடம் விற்றுவிட்டார். அங்கு வளர்ந்த அவர், தற்போது போலீசாரின் முயற்சியால் 57 வயதில் குடும்பத்தினரை சந்தித்து உள்ளார்.
- கர்நாடக மாநிலம் கலபுரகி அப்சல்புராவின் கத்தரகா கிராமத்தில் பாக்யவந்தி கோவில் அமைந்துள்ளது. தன் மாமியார் இறக்க வேண்டும் என ரூபாய் நோட்டில் எழுதி, கோவில் உண்டியலில் போட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
- தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து, 175 பயணிகள், 6 ஊழியர்கள் என 181 பேருடன் தென்கொரியாவுக்கு புறப்பட்ட பயணியர் விமானம், அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து விலகி, கான்கிரீட் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில், 179 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 32 வயதான லீ மற்றும் 25 வயதான குவான் ஆகிய இரு விமானப் பணிப்பெண்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- சான் பிரான்ஸிஸ்கோ: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓபன் ஏ.ஐ., இன்ஜினியர் மர்ம மரணம் குறித்து எப்.பி.ஐ., விசாரணை கோரும் அவரது தாயாருக்கு, முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
- போபால் : மத்திய பிரதேசத்தின் போபாலில் விஷவாயு கசிந்து பேரழிவை ஏற்படுத்திய சம்பவம் நடந்து, 40 ஆண்டுகளாகியுள்ள நிலையில், ஆலையில் உள்ள கழிவுகளை பாதுகாப்புடன் அழிக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன.
- காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் புழங்கும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
- பரேலி, 'புத்தாண்டு கொண்டாட்டங்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்க வேண்டாம்' என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் மவுலானா அமைப்பின் தலைவர் ஷஹாபுதின் ரஸ்வி தெரிவித்துள்ளார்.
- குடும்ப உறுப்பினர்களைப் போலவே வீட்டு வேலைகளைச் செய்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக குரங்கு மாறி உள்ளது. இந்த குரங்கு வீட்டு வேலை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பாத்திரங்களைக் கழுவுதல், சப்பாத்திக்கு மாவு உருட்டி தேய்ப்பது, சுடுவது, மசாலா அரைப்பது போன்ற பணிகளை செய்கிறது. சமைக்கும் போதெல்லாம், ஆர்வத்துடன் உதவி செய்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
========================================================================================
கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் கேள்வியும் பதிலும். குமுதத்தில் சுஜாதாவைக் கேளுங்கள் பகுதியில் இடம்பெற்றவை. வெவ்வேறு சமயங்களில் கேட்கப்பட்ட, கிட்டத்தட்ட ஒரே மாதிரி அர்த்தம் உடைய கேள்விகள்.....
பதில்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி!
கேள்வி : ரேடியோ, டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் இவற்றிற்குப் பிறகு அடுத்ததாக, மனிதர்களுக்கு வரப்போகும் தவிர்க்கமுடியாத அத்தியாவசியப் பொருள் எதுவாக இருக்கும்?
எஸ்.பார்த்தசாரதி, வேலூர் - 632 001.
பதில். : அடுத்ததாக இவை அனைத்தும் ஒரே சாதனத்தில் இப்போதே ஒன்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு செல்போனில் இன்று சினிமா எடுத்து, அதை எடிட் செய்து, வயர்லஸ் இன்டர்நெட் மூலம் உலகத்தின் மறு மூலைக்கும் அனுப்ப முடிகிறது. எல்லாமே ஒருங்கிணைந்து எடை, சைஸ் குறைந்து, திறமை அதிகரித்து பேச்சாணைகளுக்குக் கீழ்ப்படியும். ஆனால் மனித அறிவு தர்க்கத் திறமை பெறுவதில் கொஞ்சம் 'ஸ்லோ'தான். இந்த இயலின் பெருக்கத்தின் ஆதார விதி மூர்ஸ் லா (Moore's Law) இன்னும் செலாவணியில் உள்ளது. அதன்படி ஒரு கைக்கெடிகார சைஸில் உலகளாவிய செய்தித் தொடர்பு, வீடியோ காமிரா, கம்ப்யூட்டர், அனிமேட்டர், ஜி.பி.எஸ். நோட்டுப் புத்தகம், முப்பரிமாண ப்ரொஜக்ஷன் டிஸ்ப்ளே, ஸ்டார் வார்ஸ் சினிமாவில் R2D2 அணிந்திருக்குமே அது நிஜமாகும். அல்லது சில ஜேம்ஸ்பாண்டு படங்களில் கூட பார்த்திருப்பீர்கள். ஆனால், வரும் வருடங்களில் மக்கள் சந்தோஷமாக இருப்பார்களா என்றால், அது வேறு ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
மக்களின் தனிமையும் சுயநலவாதமும் அதிகரிக்கும். சௌகரியங்கள் பல்கிப் பெருகும். கண்ணீர் துடைபடாது.
+++++++++++++++++++++++++++((
கேள்வி. : சினிமா, டி.வி என்ற கற்பனைக் குதிரைகள், உலகம் முழுவதும் ஒரு வாரம் ஓடாமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும்? தமிழ்நாடு எப்படி இருக்கும்?
அமல்ராஜ், பாபநாசம்.
பதில். : இருந்திருக்கிறோமே. உங்கள் தாத்தா பாட்டிகளைக் கேட்டுப் பாருங்கள். தற்காலத்தில், ஒருவாரம் கணவன், மனைவி உறவு நெருக்கமாகும். பிள்ளைகளைக் கடற்கரைக்கும் கோயிலுக்கும் அழைத்துச் செல்வீர்கள். பழைய நண்பர்கள், தூரத்து உறவினர் களைப் போய் சந்திப்பீர்கள். வீட்டில் கேரம்போர்டு, மானோ பொலி, தாயக்கட்டான் ஆடுவீர்கள். சீக்கிரமே படுத்துக் கொண்டு விடுவீர்கள். ஒருவாரம் ஜாலியாகத் தான் இருக்கும். அதற்கப்புறம்தான் பாயைப் பிராண்டுவீர்கள்.
டான் பிரவுனின் 'டாவின்சி கோட் படித்தீர்களா? தமிழில் ஏன் அது மாதிரியான புது நாவல் முயற்சிகள் வருவதில்லை?
-ஜி. ஜோசப்ராஜ், புதுக்கோட்டை
தமிழில் அவ்வகையான நாவல்கள் எழுத உலகப்புகழ் பெற்ற 'லாஸ்ட் சப்பர்' போன்ற சித்திரம் தமிழ்நாட்டில் வேண்டும். ஐகனா கிராஃபி பற்றிய ஆராய்ச்சி தெரிந்தவர்கள் வேண்டும். அவர்களுக்கு ஜெட் வேகத்தில் செல்லக்கூடிய தமிழ் நடை வேண்டும். நிறைய நிறைய ஓய்வும் பண பலமும் வேண்டும். டாவின்சி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் சிப்பாய் கலகத்தை ஆராய்ச்சி செய்து, அதில் ஒரு தமிழன் கலந்து கொள்வதாக 'கருப்பு சிவப்பு வெளுப்பு' என்ற தொடர்கதை ஆரம்பித்தேன். கையை வெட்டுவேன் நிறுத்து என்றார்கள். எனக்கு இடது கையால் ஷேவ் செய்து பழக்கமில்லாததால் நிறுத்தி விட்டேன். என்னதான் 'ரத்தம் ஒரே நிறம்' என்று எழுதினாலும் ஆரம்ப உற்சாகத்தை இழந்துவிட்டேன்.
ஒரு யோசனை தோன்றுகிறது, ராஜாரவிவர்மாவின் லட்சுமி சரஸ்வதி சித்திரங்களுக்கு யார் மாடலாக உட்கார்ந்தார்கள் என்று ஆராய்ந்து ஒரு நாவல் எழுதலாம்.
சுஜாதா.
சுஜாதாவின் இந்த பதில் கொஞ்சம் மாற்றி அல்லது பரந்துபட்டு யோசிக்காமல் கேள்வி "லாஸ்ட் ஸப்பர்" ஓவியத்தை வைத்து டாவின்சி கோட் எழுதப்பட்டதை போல தமிழில்" என்று அப்படியே எடுத்துக் கொண்டு தட்டையாக பதில் அளித்து இருப்பது போல தோன்றவில்லை?
=======================================================================================
பொக்கிஷம் :-
இந்தக் கதை முழுக்கதையாக பைண்ட் செய்யப்பட்டு எங்களிடம் இருந்தது. அப்புறம் யாரோ லவட்டிக்கொண்டு சென்று விட்டார்கள்!
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குபுத்தாண்டு மற்ற தின வாழ்த்துகள், இறப்புகளுக்கு இரங்கல்கள்... ஏதேனும் வித்தியாசம் இருக்கா என்ன? எல்லாமே சம்பிரதாயங்களாகிவிடுகின்றன
பதிலளிநீக்குஅதுதான்... அதேதான்.
நீக்குகுட்டி யானையின் தாய் இறந்தால், அந்தக் கூட்டத்தைத் தலைமை தாங்கும் பெண் யானை (தாயின் சகோதரி போன்ற உறவினர்) தங்கள் கூட்டத்தில் பார்த்துக்கொள்ளும். பிரிந்துவிட்டால் கிட்டத்தட்ட வாழ்வை இழந்தது போலத்தான். பாதை, தண்ணீர் கிடைக்கும் இடம், எங்கு தங்குவது, ஆபத்துகளைச் சமாளிப்பது என்று பலவற்றை குட்டி யானை அறியாது.
பதிலளிநீக்குஅதுதான் சோகம்.
நீக்குஓன்று கதறி அழுதேன்..... மக்கள் அதிர்ச்சி, கோவை மக்கள் ஆரவாரம், தமிழகம் சோகம் என்று பத்திரிகைகள் புருடா விடும். ஆனால் சாமானிய மனிதனோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல், அன்றைக்கு என்ன செய்வது என்ற தன் பிரச்சனையிலேயே இருந்துவிடுவான். இதெல்லாம் தினத்தந்தியின் வலைவீசித் தேடினார்கள், கோவென்று அழுதனர் டைப் வெற்று வாக்கியப் பிரயோகங்கள்.
பதிலளிநீக்குஉண்மைதான். மக்கள் உணர்ச்சிகளை சாதாரணமாக்குகிறார்கள்!
நீக்குஇந்த வாரம் வியாழன் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லாதது போல் இருக்கிறது!!
பதிலளிநீக்குகட்டுரை ரீசைக்கிள். ஆனை கவிதை மடக்கிப்போட்ட புலம்பல் வசனம். புதுமைக்குப் பெயர் பெற்ற ஜெயயகாந்தனோ மரபுக் கவிதை எழுதியது படிக்க நன்றாக இருந்தாலும் மனதில் ஒட்டவில்லை. அந்தக்காலத்தில் கல்யாண வீடுகளில் வாழ்த்து கவிதை எழுதி அச்சடித்து வந்தவர்களுக்கு விநியோகம் செய்வார்கள். அது போன்று உள்ளது.
பிராண்டோ படம் இயற்கையானது என்றால் கிளி படம் AI meta போன்று தோன்றுகிறது. சரியா?
கிசுகிசு வெளியான குமுதத்தின் தேதி குறிப்பிட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்காது. கிசுகிசு என்றால் சினிமா பற்றியது எனது போய் அரசியல் சம்பந்தம் என்றாகி விட்ட மாற்றம் நான் அறிந்திராத காலம்.
நியூஸ் ரூமில் ஒட்டகம் சே புகைப்படங்கள் வந்தது வித்தியாசம். கதைக்கு படங்கள் மெருகூட்டுவது போல அமைந்தது சிறப்பு.
அந்த சீன ஹேக்கர் என் பேரன் மாதிரியே இருக்கிறான். அவ்வவளவு சின்ன வயது.
//சுஜாதாவின் இந்த பதில் கொஞ்சம் மாற்றி அல்லது பரந்துபட்டு யோசிக்காமல் கேள்வி "லாஸ்ட் ஸப்பர்" ஓவியத்தை வைத்து டாவின்சி கோட் எழுதப்பட்டதை போல தமிழில்" என்று அப்படியே எடுத்துக் கொண்டு தட்டையாக பதில் அளித்து இருப்பது போல தோன்றவில்லை?//
சுஜாதாவுக்கு வயதானபின் முடியாமல் தான் கேள்விகளுக்கு பதில் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
பொக்கிஷ ஜோக்குகள் திராபை.
Jayakumar
கிளி படம் செயற்கையாக இருக்கலாம். இணையத்தில் பார்த்தேன். பிடித்திருந்தது.
நீக்குவருடம் சொல்லாமலேயே பொன்மனச்செம்மல், முனு ஆதி, ஈ வி கே சம்பத் குடும்பம் என்று தெரிய வருமே...
அவ்வப்போது நியூஸ் ரூமில் இவ்வகை செய்திகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறேனே... கவனித்ததில்லையா?
சுஜாதா பற்றி நானும் அபப்டிதான் நினைத்தேன்.
கிசுகிசுக்களில் இரண்டுக்கு விடை.... சகாநாயகர் முனு ஆதி. சுவர் இல்லாத சித்திரங்கள். இவருக்கும் ஆட்டோ சங்கர், நடிகை சரிதா... தொடர்புகளுக்கு, ஆட்டோ சங்கர் டயரி படிக்கவும். அதிமுகவில் இணைந்த சுலோசனா சம்பத். (காங்கிரஸ்கார்ர்). இவரது இரண்டாவது மகன் இனியன் சம்பத். முதல் மகன், போதைப் பொருள் உபயோகத்துக்குப் பெயர் போன இவிகே இளங்கோவன்.
பதிலளிநீக்குஅதேதான். தங்கமன தலைவர் எம் ஜி ஆர். பொன்மனச்செம்மல்!
நீக்குஅக்கடைசி கிசுகிசு கருணாநிதி, நெடுமாறன் என்று நினைக்கிறேன்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆம். அதாவது டிசம்பர் 31, 2023
நீக்குஒரு லைன் அடிச்சதுமே கீபோர்ட் கீ வெளியிட்டுவிட்டது அத்தனை வேகம் சுறு சுறுப்பு என் லேப்டாப் கீஸ்!!!!
பதிலளிநீக்குமுதல் பகுதி - சென்ற வருடம் ஃபேஸ்புக்கில் வெளியானதா அதாவது 24 பிறக்கும் முந்தைய தினம். இது இந்த சம்பிரதாயங்கள் எல்லா வருஷத்துக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
நான் ஃபேஸ்புக்கில் இல்லை என்பதால் இப்ப இங்க கொடுத்ததும் நன்று.
நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தையும் டிட்டோ செய்கிறேன். இந்த சம்பிரதாயங்களுக்கு நான் நேர் எதிர். இன்னும் சில சம்பிரதாயங்களுக்கும் சேர்த்து.
யாருக்கேனும் சொல்லிப் பேச வேண்டும் என்று நினைத்தால், அதுவும் அவர்களுக்கு அது சந்தோஷம் அளிக்கும் குறிப்பாகச் சில ஊக்கமான வார்த்தைகள் - என்று உணர்ந்தால் தனிப்பட்ட முறையில் வாழ்த்துவது உண்டு. அவ்வளவுதான்.
நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம் என்றும் தெரியும். புரிதல்.
கீதா
முதல் பகுதிக்கு அது அழிக்கப்பட்ட இடத்திலேயே பதில் சொல்லி விட்டேன்!!
நீக்குஇப்படி இங்கு பகிராமல் நிறைய Face Book ல் அவ்வப்போது பகிர்ந்துள்ளேன்.
பார்த்தேன், ஸ்ரீராம்
நீக்குகீதா
ஆனாலும் என் கருத்தை முழுசும் சொல்லோணுமில்ல?!! அது ஒரு வரிதானே இருந்துச்சு!
நீக்குகீதா
:))
நீக்குசிற்ப்பான தொகுப்பு...
பதிலளிநீக்குகிசுகிசு விரும்பிப் படித்த நாட்களை எண்ணி -
இப்போது மனம் புன்னகை பூக்கின்றது..
ஆமாம். சினிமா கிசுகிசு, அரசியல் கிசுகிசு...
நீக்குகுமுதம் இதற்கு பேமஸ்.
தகப்பன் மரம் - நல்ல கருத்து, ஸ்ரீராம். பாரமில்லை. வலிமையான தகப்பன்.
பதிலளிநீக்குஆனால் பாருங்க, ரொம்ப வீக்கா இருக்கற செடிகளின் மீது இந்தக் கொடிகள் படரும் போது தாய்ச் செடியோ தகப்பன் செடியோ அந்த அழுத்தம் தாங்காமல் வாடும். அல்லது இரண்டுமே வாடிவிடும். இதிலும் தத்துவம் இருக்குங்க!!!!! ஹாஹாஹா! வெளிவரா என் எழுத்தில் எழுதி வைத்த ஒன்று ஹிஹிஹிஹி...
கீதா
சரிதான். ஆனால் தகப்பன் எடுத்து குழந்தையை மேலே போட்டுக் கொள்வதில்லை. கையில்லா தகப்பன்மேல் குழந்தைகள்தான் ஏறும்.
நீக்குஇது கொஞ்சம் யோசிக்க வைக்கிறதே, ஸ்ரீராம்.
நீக்குகீதா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குயானைக் குட்டியின் உணர்வுகள் சூப்பர், ஸ்ரீராம். குட்டி முதலில் சிரமப்பட்டாலும், யானைக்கூட்டத்தின் தலைமையில் இருக்கும் பெண் யானை அதைப் பார்த்துக் கொள்ளும். எவ்வளவு நாள் இந்த trauma அக்குழந்தையின் மனதில் இருக்கும் என்று அறிய ஆசைப்பட்டதுண்டு. மகனின் நண்பர் வன விலங்குகளின் மருத்துவரிடம் கேட்க வேண்டும். ஆனா இப்ப அவர் ரிலையன்ஸ் மிருகக்காட்சி சாலையில் பணிபுரிகிறார்.
பதிலளிநீக்குகீதா
சில சமயங்களில் மற்ற யானைகள் இந்தக் குட்டியை ரிஜெக்ட் செய்து விடும்.
நீக்குஅவ்வளவு ஏன், குழுவைப் பிரிந்து வழிதவறி சில நாட்கள் வெளியே இருந்து, வன ஊழியர்கள் உதவியுடன் தங்களை மீண்டும் வந்து அடையும் குட்டியை அந்தத் தாயே ரிஜெக்ட் செய்யும் சம்பவங்களும் படித்திருக்கிறேன்.
அப்புறம் இவர்களே அதை வளர்ப்பார்கள்.
ஆமாம் உண்மைதான். பிரிந்த யானைக் குட்டியை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட குட்டியை வனத்துறையினர் காப்பாற்றி அது சில நாட்கள் ஆனாதால் கூட்டம் ஏற்கவில்லை என்று வனத்துறையினர் வெளியிட்ட செய்தி ஒன்றும் முன்பு வந்தது.
நீக்குகீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம்.
நீக்குபிரார்த்தனைகளுக்கு நன்றி,
காலை வணக்கத்தை மதியம் சொல்றாங்கன்னா அவ்வளவு பிஸின்னு அர்த்தம் ஹாஹா
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
தங்களின் முதல் பகுதி எண்ணங்களை ரசித்து படித்தேன். எல்லா நாளும் ஒன்றே... ஆனால், முதல் நாளுக்கு அவ்வளவு மரியாதை தருகிறோம். இப்போது கொஞ்ச வருடங்களாகத்தான் இந்தப்பழக்கம் நம்மிடையே உருவாகி உள்ளது. நம் அப்பா, அம்மா காலத்தில் ஆங்கில புத்தாண்டுக்கு இந்தளவு முக்கியத்துவம் தந்ததாக எனக்குப் படவில்லை. இந்த நாளை தவிர்த்து கோவில்களில் மனித தலைகளை எண்ணி விடலாம் என்பதை அந்த இறைவனும் அறிவான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.
நீக்குநீங்கள் சொல்வது சரி. அந்நாட்களில் இதெல்லாம் கிடையாது. ஏன், மதர்ஸ் டே, பாதர்ஸ் டே எல்லாம் கூட கிடையாது. வாலண்டைன் டே கூட அப்படியே.. இப்போதுதான் இவை இவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன!
ஜெயகாந்தனின் மரபுக் கவிதை நன்றாக இருக்கிறது. யதார்த்தம் சொல்லும் கவிதை. இதற்கும் முந்தைய பகுதிக்கும் தொடர்பு கட்டலாம்!
பதிலளிநீக்குகீதா
சகலகலாவல்லவர்!
நீக்குகாட் ஃபாதர் படம் நல்லாருக்கு, பொருத்தமாகவும் இருக்கு எனலாம் அந்த ஷூட்டிங் ஷாட்டிற்கு.
பதிலளிநீக்குஇரண்டாவது படம் செயற்கை என்று தோன்றினாலும் அழகு! இயற்கை எவ்வளவு அழகோ சில செயற்கைகளும் அழகு மனிதனின் கற்பனையை அதில் ரசிக்கலாம்.
கீதா
உண்மை, உண்மை.
நீக்குதங்கமனத் தலைவர் யார் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஆனால் தேர்ந்தெடுக்கப்படும் தொழில் புள்ளி யாரென்று தெரியவில்லை.
கடைசி மு க வா? மற்றவை தெரியவில்லை.
கீதா
சரி.
நீக்குதொழில் தலைவர் யாரென்று எனக்கும் தெரியவில்லை.
தொழில் தலைவர்: ஈசன் குரூப் நிறுவனர் ஈஸ்வர அய்யர்.
நீக்குமகன் : ஹரி ஈஸ்வரன்.
__/\__
நீக்குஇப்ப அப்படித்தானே அசல் போன்று போலிகள் வருவது...நிறைய.
பதிலளிநீக்கு57 வயதில் குடும்பத்தினரை சந்திக்கும் போது, ஆர்வம் இருந்திருக்கலாம் ஆனால், உணர்வுகள் இருந்திருக்குமா? என்று தோன்றுகிறது. அம்மா அப்பா இருக்கிறார்களா என்றும் தெரியவில்லையே...
ஆஃப்கானிஸ்தான் எல்லாம் ஒரு நாடு என்று சொல்லவே முடிவதில்லை.
குரங்கு இப்படி வேலை செய்வதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. பாவமாகவும் இருக்கிறது.
கூடவே அது சுத்தமா கை கழுவுமா என்ற கேள்வியும் எழுகிறதே! (மனுஷனே சுத்தமா இல்லை கை கழுவறது இல்லை கண்ட கண்ட இடத்துல கை வைச்சுட்டு சமையல் செய்வான் இதுல குரங்கைக் கேக்க வந்திட்டியேன்னு உள் மனசுக் குரலும் சொல்கிறது...)
கீதா
சுஜாதா - சீரியஸான கேள்விக்கு சீரியஸாகப் பதில் இல்லையோ ?
பதிலளிநீக்குகீதா
அப்படிதான் எனக்கும் தோன்றியது.
நீக்குபொக்கிஷத்தில் - பான்ட் ஷர்ட் இப்படித் தைக்கப்படுவது அப்ப கற்பனை இப்ப அப்படி வருதே. அது போல ரெடி புடவை - ரவிக்கையும் புடவையும் சேர்ந்தாப்ல இருக்கும் நாம ரவிக்கையை மாட்டிக் கொண்டால் புடவையை அப்படியே போட்டுக் கொண்டு விடலாம். என்ன யாரும் இடுப்புல கை வைக்க முடியாது இடுப்பே தெரியாதே!!!
பதிலளிநீக்குகீதா
ஆமாம். நான் கூட இப்படி வீடியோ பார்த்திருக்கிறேன்.
நீக்குகடைசி ஜோக் வழக்காகச் சொல்லப்படுவதை - அதாவது மனைவிகளை வைத்து ஜோக் அடிப்பது - கொஞ்சம் வித்தியாசமாக பிரசென்ட் செய்திருக்கிறார்!!
பதிலளிநீக்குகீதா
ஆம். புளிச்ச மாவு.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு"மண்ணுக்கு மரம் பாரமா" என்ற பாடல் மிக நன்றாக இருக்கும். உண்மைதான்.. நீங்கள் சொல்வது போல், அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள், லவ்வர்ஸ், கணவன் மனைவி என்ற தினங்கள் பெருகி விட்டதில் இந்த மாதிரி கருத்துள்ள பாடல்கள் இப்போது காணாமல் போய் விட்டன.
தகப்பன் மரம், தாய் பாசம் இரண்டையும் ஒன்றுக்கொன்று நிகரில்லையென நீங்கள் இணைத்தது அருமையாக உள்ளது. முன்னது பாசத்தினால், மனம் கலங்க வைத்தது என்றால், பின்னது வேதனையால் மனம் கதற வைக்கிறது.
குட்டியானையின் கவிதை மனதை என்னவோ செய்கிறது. வேறென்ன சொல்ல...!
தன் இறகு கொண்டு குஞ்சு கிளிகளிடம் தாய் கிளி காட்டும் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் பாசத்தை தந்து விடுகிறான்.
மனித உயிர்களுக்கு சுயநலத்துடன் கூடிய பாசத்தை இரு மடங்காக "அவன்"தந்திருக்கிறான். அதனால்தான் தான் பெற்ற மக்களிடம் பாசத்தை காண்பித்து விட்டு பிரதிபலனாக அவர்களிடமிருந்து வயதான பின்னர் பதிலுக்குப் பதிலாக எதிர்பார்க்கிறோம் . இது ஒரு வகையில் சுயநலந்தானே..! இந்த சுயநலத்தை மற்ற ஜீவன்களுக்கு தராததை போல மனித ஜீவராசிகளுக்கும் "அவன்" தவிர்த்திருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி மற்றதை வாசித்து விட்டு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் யதேச்சையாக போட்டதை நீங்கள் அழகாக கனெக்ட் செய்திருக்கிறீர்கள். நன்றி கமலாக்கா.
நீக்குதாய்மரம்(தாய்ச்சி) தெரியும். தந்தை மரம் புதிது.
பதிலளிநீக்குவருடத்தின் முதல் ஞாயிறில் தாய் யானை மரணம் குறித்த செய்தியை தவிர்த்திருக்கலாம்.
காட் ஃபாதர் படத்தில் பூனையை மடியில் வைத்தபடி அவர் பேசும் அந்த காட்சியின் மெருகு புகைப்படத்தில் தெரியவில்லை.
ஜாக்குவார் ஸோ ஸோ!
கிசுகிசுவில் முதல், கடைசி தெரிந்தது.
ஜாக்குவார் - ஜோக்குகள்
நீக்குபடம் பார்த்தால் அதன் மெருகு புலப்படலாம். நன்றி பானு அக்கா.
நீக்கு*ஜோக்குகள் என்று வர வேண்டியது ஜாக்குவார் ஆகிவிட்டது. நல்ல ஜோக் என்கிறீர்களா?
பதிலளிநீக்குபுரிந்தது. சில சமயங்களில் இப்படி ஆகி விடுவதுண்டு!
நீக்குஜெயகாந்தனின் கவிதை நன்று.
பதிலளிநீக்குகிளிக்கு அத்தனாம் பெரிய சிறகா?
செயற்கையாக இருக்கிறது இல்லை? ஒருவேளை கழுகுடன் க்ராஸ் இனமோ!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குஎன் கடமை சரியாக சொன்னீர்கள். 23 ம வருட பதிவு என்றாலும் எப்போதும் பொருந்தும் கட்டுரை.
பதிலளிநீக்குதகப்பன் மரம் அருமை. கொடி மரத்துக்கு குழந்தையா! நல்ல கற்பனை. புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
நன்றி கோமதி அக்கா.
நீக்குகுட்டி யானை பரிதவிப்பு பார்த்து மனம் கனத்து விட்டது, உங்கள் கவிதை மேலும் மனதை நெகிழ வைத்து விட்டது.
பதிலளிநீக்குஅவ்வப்போது பார்க்கும் வேறு சில யானை சம்பவங்கள் மனதில் பதிந்துள்ளன. நன்றி கோமதி அக்கா.
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு மன நிலைக்கு கொண்டு சென்றன...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஜெயகாந்தன்அவர்களின் கவிதை சந்ததி பற்றி சொல்கிறது.
பதிலளிநீக்குதாய் மடியில் இருக்கும் சிரிக்கும் காட்சியை அவர் எழுதிய விதம் அருமை.
நல்லாதான் இருக்கு. ஆனாலும் ஜெயகாந்தன் கவிதைகளை விட அவர் கட்டுரைகள், கதைகள் நன்றாய் இருக்கும்.
நீக்குமார்லன் பிராண்டோ மடியில் இருக்கும் பூனை வரலாறு தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குதாய்க்கிளி படத்தை பார்த்ததும் நீங்கள் எழுதியதை படிக்கும் போது இந்த பாடல் நினைவுக்கு வந்தது.
//அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்//
என்ன பாட்டு என்று தெரியவில்லையே கோமதி அக்கா.
நீக்குஏசு பாடல். உன்னதமானவரே என்று தொடங்கும்.
நீக்குhttps://www.youtube.com/watch?v=8n6QcnIBYWU
இறைவன் மேல் நம்பிக்கை தரும் பாடல்.
கேட்டுக்கொண்டிருக்கிறேன் அக்கா. நான் இதுவரை கேட்டிருக்கவில்லை.
நீக்குஇன்னும் இரண்டு கருத்துகள் கொடுத்திருந்தேன், காணவில்லை.
பதிலளிநீக்குசென்று பார்த்தால் ஒன்று இருந்தது. தூக்கி வந்து போட்டிருக்கிறேன்.
நீக்குசெய்திகளில் கர்நாடகா மாமியார் சாகவேண்டும் பிரார்த்தனை, ஆந்திரா வில் தாயை பயமுறுத்த மகன் மின்சார கம்பியில் படுத்து இருப்பது, மாற்றும் தாய்லாந்து விமானம் தென் கொரியாவில் விழுந்து நொறுங்கியது எல்லாம் படிக்கும் போது வேதனை தருகிறது.
பதிலளிநீக்குகொஞ்சம் சிரிப்பும் வருகிறது இல்லை?
நீக்குசுஜாதா கேள்வி பதில், மற்றும் பொக்கிஷபகிர்வுகள் அருமை.
பதிலளிநீக்குஏற்கனவே நிறைய ஆண் திருமணம் வேண்டாம் என்று இருக்கிறார்கள்
நகைச்சுவையும் (விருந்துக்கு அழைப்பு) திருமணம் வேண்டாம் என்று சொல்கிறது.
ஹா... ஹா... ஹா... ஆனால் நிறைய ஆண்களுக்கு இப்போது பெண் கிடைக்கவில்லை என்பதால்தான் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்.
நீக்கு