கல்யாணம் கல்யாணம் திருவேங்கடத்தில் நடந்த கல்யாணம் என்று ஒரு பாடல். அது இரண்டு நாட்களுக்குமுன் நினைவுக்கு வந்தது. சூலமங்கலம் சகோதரிகள் பாடி கேட்டிருக்கிறேன்.
அதை தேடு தேடு என்று தேடியும் கிடைக்கவில்லை. எனினும் அதே பாடல் வேறு குரல்களில் கிடைத்ததாலும் இதுவும் இனிமையாகவும் இருப்பதாலும் இதை இங்கு பகிர்கிறேன். பாடல் வரிகள் திரையிலேயே வருகின்றன.
இதே பாடலை சூலமங்கலம் சகோதரிகள் பாடிதான் நான் கேட்டிருக்கிறேன்.
============================================================================
1959 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தெய்வபலம். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம். பாதிப் படம் மட்டும் கலர்ப்படம்! கேவா கலர்!
பாலாஜி ஜெயஸ்ரீ நடித்த படத்துக்கு இசை அஸ்வத்தாமா... இந்த ஜெயஸ்ரீ யார் என்று பார்த்தால் நடிகை ஜெயசித்ராவின் அம்மா. அஸ்வத்தாமா தெலுங்கு இசை அமைப்பாளர். இந்தப் பாடலை எழுதி இருப்பவர் மருதகாசி. PB ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி பாடியுள்ள பாடல்.
தெலுங்கு இசை அமைப்பாளரான அஸ்வத்தாமாவுக்கும் அவர் மனைவி கமலா என்னும் வீணை வித்வானுக்கும் பிறந்த பெண்தான் வீணை காயத்ரி
மருதகாசி (1920 - 1989) முதலில் மந்திரிகுமாரி நாடகத்துக்குதான் எழுதினார். சுமார் 250 படங்களில் 4000 பாடல்கள் எழுதியுள்ளார். 'பெண் என்னும் மாயப் பிசாசு' என்னும் படத்தில் அவர் எழுதிய பாடல் முதலில் இடம்பெற்றது.
பாடல் மிக மெல்லிய விரகத்தை வெளிப்படுத்தும் காதல் பரவசப்பாடல். தென்றலை தூது விடுகிறார்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும் காதலர்கள். என்ன ராகம் என்று தெரியவில்லை. டெம்போவைக் கொஞ்சம் கூட்டினால் ஏதோ ஒரு பாடல் மனதில் நிழலாடுகிறது. அப்படி மனதில் வருவது தேவதாஸ் பாடலோ என்று சந்தேகம் வருகிறது.
காட்சியில் தெலுங்குப் படத்தின் காட்சிதான் நல்ல தெளிவாக இருக்கிறது போலும். பாலாஜியையே பார்க்க முடியவில்லை. எனவே N T ராமராவ்தான் காட்சியில் வருகிறார். தெலுங்கு தமிழ் இரண்டிலும் ஜெயஸ்ரீதான் கதாநாயகி என்பதால் கவலை இல்லை!
'குறும்புகள் ஏனோ என்னிடம்... என் குறையை நீயும் தீராயோ' எனும் வரி பல்லவியிலும், ஒவ்வொரு சரணத்திலும் மறுபடி மறுபடி வந்து மனதை கொள்ளை கொள்கிறது.
ஒரே மாதிரி இன்டர்லூட் என்றாலும் அதுதான் தேவதாஸ் பாடலை அல்லது வேறு எதையோ நினைவு படுத்துகிறது.
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் – தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் – தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
அரும்பைத் தீண்டி அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பைத் தீண்டி அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
இரவில் நிலவை வீண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
இரவில் நிலவை வீண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
விரும்பும் இருவர் மனநிலையை
விளக்கும் தூதன் நீயன்றோ
விரும்பும் இருவர் மனநிலையை
விளக்கும் தூதன் நீயன்றோ
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என்குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
===========================================================================================
எல்லோரா குகைகளுக்குக் கீழே ஒரு நகரமே இருந்திருக்கிறதா என்று ஆராயும் வீடியோ! சாதாரண மனிதர்களை விட அளவில் சிறியதான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்கள் வாழ குகைக்குக் கீழே ஒரு நகரமே இருந்திருக்கிறது. அந்த இடத்துக்குக் காற்றோ, வெளிச்சமோ போக குறுகிய பாதைகளை உடைய வழிகள் இருந்திருக்கின்றன என்று சொல்லும் வீடியோ.
எல்லோரா குகைகளின் கீழ் அப்படி ஒரு பெரிய நகரம் இருக்கிறதா? / இருந்ததா? சுவாரஸ்யமான காணொளி.. பாருங்களேன்..
பதிலளிநீக்குதெரிந்த இடம். தெரியாத செய்திகள்.
குடைவரை சுரங்கப் பாதைகள் புதிதல்ல என்றாலும் அளவில் மனிதன் புக முடியாத அளவிற்கு உள்ளன எனும்போது எப்படி இவை உருவாயின என்ற கேள்வி எழுவதும் அதற்கு பதில் கிடைக்காததும் வியப்பே.
தலைப்பு நான் கொடுத்திருக்கிறேன். அப்படி தெரியாத செய்திகளை ஒரு கிழமையில் பதிக்கலாம்.
Jayakumar
தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது. இந்தத்தலைப்பில் முன்பு விகடனில் ஒரு தொடர் வந்ததது. சேப்பாக்கம் மைதானம், ரேஷன் கடை என்று ஒவ்வொரு இடமாகச் சொல்லி 'தெரிந்த பெயர் தெரியாத விவரம்' என்று வரும். நான் கூட சில எடுத்து வைத்திருந்தேன் பகிர. தொலைந்துபோயிற்று. மறுபடி அந்தப் புத்தகம் கைக்கு வரும்போதுதான் எடுக்கவேண்டும்!
நீக்குநான் இதை தனிப்பதிவாக போட எண்ணியிருந்தேன். ஏன் இதிலேயே சேர்த்தேன் ஏன்று எனக்கே விளங்கவில்லை!!!
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.... வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குமுதல் பாடல் நன்றாக இருக்கிறது. சூலமங்கல சகோதரிகள் பாடி நானும் கேட்டு இருக்கிறேன். இவரும் சூலமங்கல சகோதரிகள் போலவே பாட முயற்சி செய்து பாடி இருக்கிறார்.
பதிலளிநீக்குஅடுத்த பாடல் நிறைய தடவை தொலைக்காட்சியில் தேனும், பாலும் நிகழ்ச்சியிலும், இலங்கை வானொலியிலும் கேட்டு இருக்கிறேன்.
இந்த பாடல் பற்றிய விவரங்கள் புதிது.
அடுத்த காணொளி பார்த்தேன். சுரங்கப்பாதைகள் உள்ளே சிற்பங்கள் வியக்க வைக்கிறது.
சூலமங்கலம் பாடிய அந்த பாடல் எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லை.
நீக்குஇரண்டாவது பாடல் எவ்வளவு ஸ்லோ டெம்போவில் எவ்வளவு இனிமையான பாடல், இல்லை?
வீணை காயத்ரி பற்றி நான் எடுத்து வைத்திருந்த ஒரு புகைப்படமும், தகவலும் இணைக்க விட்டுப் போயிருந்ததை இப்போது சேர்த்திருக்கிறேன். முன்னரே பார்த்ச் சென்றவர்கள் தகவலுக்காக...
பதிலளிநீக்குஸ்ரீராம், முதல் பாடல் கேட்டதும் சூலமங்கலம் பாடிய பாடல் நினைவுக்கு வந்துவிட்டது.
பதிலளிநீக்குபாடல் செஞ்சுருட்டி ராகம் பேஸ்.
நீங்க கொடுத்திருக்கும் காணொளியில் இருவர் பாடியிருக்காங்க ஸ்ரீராம். நான் பார்த்தது வேறு. அதில் சுபாஷினி உமாபதி எனும் பெண் பாடியிருப்பார் அதுவும் நன்றாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=E1Gr3HL1pok
இந்தப் பாடல் முன்பே கேட்டிருக்கிறேன். கல்யாணங்களில் பாடியதுண்டு ஆனால் மனப்பாடமாக இல்லை எழுதி வைத்துக் கொண்டு. என் மாமியின் உபயத்தினால்!
கீதா
சூலமங்கலம் சகோதரிகள் பாடும் இந்தப் பாடல் சற்றே வேகமாக இருக்கும். இன்னும் இனிமையாகவும் இருக்கும்.
நீக்குஇரண்டாவது பாட்டும் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் ரொம்பப் பிடித்த பாடல். ஆனா நேத்து நீங்க இடையில் வரி சொல்லிக் கேட்டதால எனக்கு டக்கென்று என்ன பாட்டுன்னு தெரியலை. ஆனால் பழைய பாடல் என்பது தெரிந்தது.
பதிலளிநீக்குஇப்ப பார்த்ததும் ஓ இந்தப் பாட்டான்னு....அருமையான பாடல்.
மத்தியமாவதி ராகத்தில் அமைந்த பாடல். ஹிந்துஸ்தானி ஆரம்ப இசை. எனவே பாடலும் அந்த டச் இருக்கும். ஆலாபனை செம இல்லையா? ஹிந்துஸ்தானில மேஹ்மல்ஹார்.
கீதா
ஓ... நன்றி கீதா.
நீக்குஇவங்க அதை மத்தியமாவதி இல்லாட்டா ஒன்றியமாவதி, இல்லை மேஹ்மல்ஹார்னு சொன்னா கேள்வி கேட்க இங்க ஆளேயில்லை.
நீக்குநான் ஞாபகத்தில் வைத்திருக்கும் மத்தியமாவதி பாடல்களுடன் டியூன் சிங்க் ஆகிறது. (பூங்கொடியே கைவீசு)
நீக்குஎல்லோரா குகை அடியில் - இந்த வீடியோ பார்த்தப்ப - அடியில் குகை மனிதர்கள் அப்ப வாழ்ந்திருக்கலாம் என்றும் தோன்றியது, ஸ்ரீராம். நகரம் என்றில்லாவிட்டாலும், இப்படி மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஇந்த மாதிரி அதிசயங்கள், அரிய தகவல்கள் நானும் கொஞ்சம் தகவல்கள் லிங்க் எடுத்து வைச்சிருக்கேன் ஸ்ரீராம் சில்லு சில்லாய்ல போடறதுக்குனு. சமீபத்தில் கூட அரிய பறவைன்னு ஒன்று எடுத்து வைத்தேன்.
நான் தான் மீண்டும் எழுதத் தொடங்கவே இல்லையே.
கீதா
நன்றி. நானும் ஒரு கலெக்ஷன் வைத்திருந்தேன் கீதா.
நீக்குஅருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குகடை காணொளி வியப்பு...
நன்றி DD.
நீக்குசூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் கேட்டிருக்கிறேன். இப்பாடல் இப்பொழுதுதான் கேட்டேன்.
பதிலளிநீக்குஇரண்டாவதுபாடல் கேட்டிருக்கிறேன்.
எல்லோரா குகை சுரங்கம் ஆச்சரியம் தருகிறது. உள்ளே சிற்பங்கள் அழகாக உள்ளன.
நன்றி மாதேவி.
நீக்குதெய்வ பலம் 1959ல் வெளியான படம் என்று போட்டிருக்கிறார்கள்! 60 வருடங்களுக்கு முன் வந்த பாடல் என்றாலும் இன்றைக்கு உங்களால் இந்த பாடல் இன்னும் வாழ்கிறது! அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்ட பாடல், மறந்து போன பாடல்! உங்களால் இன்றைக்கு பல வருடங்களுக்குப்பின் ரசித்து கேட்டேன் ஸ்ரீராம்!
பதிலளிநீக்குஅன்பார்ந்த நன்றி!
நன்றி மனோ அக்கா.. வெள்ளிதோறும் பாடல்களை Follow செய்கிறீர்களா? மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல். அந்தந்த வாரம் நான் பகிரும் பாடல்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு என் மனதில் சுற்றிச்சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
நீக்குமலரோடு விளையாடும்.... மிக அருமையான பாடல். தேர்ந்தெடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇது சோக ராகமா?
சோக ராகமா என்பது தெரியவில்லை. ஆனால் படத்தில் இப்பாடல் இன்பமாகவே(Happy) ஒலிக்கும். பின்னர் இன்னும் ஸ்லோ டெம்போவில் துன்பமாகவும்(Pathos) இடம்பெறும் (சுமார் 3 நிமிடம்.)
நீக்குநன்றி நெல்லை. அந்த ரசனையான மனம் எனக்குப் பிடித்திருக்கிறது.
நீக்குநெல்லை & பால் ஜெயசீலன், சோகராகம் கிடையாது மத்யமாவதி. இந்தப் பாடல் விரகம் கலந்த பரவசம். ஸ்லோ டெம்ப்போ. அவ்வளவுதான். பதிவிலேயே சொல்லி இருக்கிறேன்.
இலங்கை வானொலியில் , அறிவிப்பாளர் இராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் இப்பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்.
பதிலளிநீக்குஓ.. அந்த அளவு நினைவு வைத்திருக்கிறீர்கள். நன்றி PJ.. உங்கள் வயதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வருகிறது!
நீக்குஇரண்டு பாடலும் இன்றுதான் கேட்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஇன்றைய பதிவு சிறப்பு..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
// பெண் வீணை வித்வானுக்கும் //
பதிலளிநீக்கு*** வீணை வித்வான்
வீணை வித்தகி..***
பென் பக்தை என்று குறிப்பிடும் தினமலர் மாதி ஆகி விடக்கூடாது..
" தினமலர் மாதிரி.. "
நீக்கு