செவ்வாய், 5 டிசம்பர், 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை : மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - ஏஞ்சலின் -சீதை 30




இந்த வாரம் ஏஞ்சலின் கற்பனை...





மயங்கினேன் சொல்ல தயங்கினேன் 

ஏஞ்சலின்



மருத்துவமனையின் சீஃப்  டாக்டர்  இருக்கை முன் படபடப்புடனும் முகமெல்லாம் கவலை ரேகையுடனும் அமர்ந்திருந்தான்  ஜானகி ராமன் .


 சிறிது நேரத்தில் வெள்ளை கோட் அணிந்து உடல் பாரத்தையெல்லாம் சுமந்தவாறு நடந்து வந்து இருக்கையில் அமர்ந்தார் அந்த ஜெர்மானிய  மருத்துவர் ..  அமர்ந்தவர் ஜானகி ராமனை ஏறிட்டும்  பார்க்காமல் தீவிரமாக வைதேகியின்  மெடிக்கல் ரிப்போர்ட்ஸை வாசித்துக்கொண்டிருந்தார் .  பிறகு குரலை செருமிக்கொண்டு மிஸ்டர் யனாகிராமன் ..  (அது ஒன்றுமில்லை J  ஜே உச்சரிப்பெல்லாம் ஜெர்மானியர்கள் ய ,யா என்றே கூறுவார்கள் வைதேகியின் பெயரையும் குதறிப்போடுவார் அந்த ஜேர்மனிய மருத்துவர்.  அடுத்த வரியில்  ஏனென்றால்  அவர்கள் உச்சரிப்பில் என்று வரும் )


"மிஸ்டர் யானாக்கி ராமன் உங்களுக்கும் ஃபைதேகிக்கும் திருமணமாகி எத்தனை காலம் ஆகிறது ?இதுவரை நீங்கள்  முன்பு வசித்த இடத்தில் குழந்தை மருத்துவரிடம் எவ்வித ஆலோசனைக்கும் செல்லவில்லையா ?"  என வினவினார்.

 வைதேகியின் பெயரை தவறாக  ஜெர்மன் நாட்டினர் உச்சரிப்பது  கேட்டு எப்போதும் குபீரென சிரிப்பு வரும்   ஆனால் இன்று அவள் பேரைக்கேட்டதும் துக்கம் அதிகரித்தது   உடலெங்கும் டியூப் மாட்டி மயக்கத்தில் படுத்திருக்கும் உயிர்மனைவியைப் பார்க்கவும் மனம் வரவில்லை .  டாக்டர் கேட்ட கேள்வியில் சுயநிலைக்கு வந்து  "ஆம் டாக்டர் ஒரு மருத்துவர் இடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றோம்" என்றான் .  

" ம்ம்ம்..." என்ற மருத்துவர்,  "யனாக்கி ராமன் உங்க மனைவியின் கருமுட்டைக்குழாயில் அடைப்பு இருந்ததால்தான் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது  .  அவரது உயிரை காப்பாற்ற  ஒரு டியூபை இப்போது நீக்கிவிட்டோம். அடுத்த குழாயும் லேசாக பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே அவருக்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை" என்றார் .


அதை கேட்ட ஜானகிராமனுக்கு நெஞ்சே வெடித்துவிடும்போலிருந்து.

ஏனென்றால் வைதேகிக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம் . இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன முதல் இரண்டு வருடங்கள்  வெளி நாடுகளுக்கு ஊர் சுற்றுவதிலும் நண்பர்கள் உடன்  பயணம் செய்வதிலும் காலம் போனதே தெரியவில்லை அவர்களுடன் திருமணமான பிற நண்பர்களுக்கு உடனே குழந்தை பேறு கிடைத்து அவரவர்கள் பிசியாகி விட்டார்கள். 


பிறகுதான்   தனிமை வாட்ட அவர்களுக்கு குழந்தைப்பற்றிய யோசனை உதித்து மருத்துவரை சந்தித்தார்கள் .  சில பல சிகிச்சைக்குப்பின்  வெளிநாட்டுக்கு மாற்றலாகி  வந்தனர் .  இங்கே திடீரென வயிற்று வலிஏற்பட்டு மருத்துவமனை வந்ததும்தான் அந்த ஜெர்மானிய டாக்டர் இப்படி ஒரு குண்டை ஜானகிராமனின் தலையில் தூக்கிப்போட்டார்.  


போன வாரம் கூட வைதேகி தனது அறை முழுதும் குழந்தை படங்களாக வாங்கி அலங்கரித்து வைத்திருந்தாள்   அதுமட்டுமில்லை எந்த சூப்பர்மார்க்கெட் சென்றாலும் கரடி பொம்மையும் பஞ்சு போன்ற மென்மையான பொம்மைகளும் டிராலியில் நிறைந்திருக்கும் .  கொள்ளை ஆசை குழந்தைகள் என்றால் .  'இதை கேட்டால் அவள் மனம் துடிதுடித்துப்போய்விடும்' என கலங்கிய ஜானகிராமன் மருத்துவரிடம் "டாக்டர்!  இந்த விஷயம் தயவுசெய்து எனது மனைவிக்கு தெரிய வேண்டாம்"  என கெஞ்சி கேட்டுக்கொண்டான்.


ஒருவகையில் லண்டனில் வேலை கிடைத்தும் ஜெர்மனியை தேர்ந்தெடுத்ததும் மொழியில் இன்னும் வைதேகி புலமையடையாததும் ஜானகிராமனுக்கு வசதியாகிப்போனது.  இவர்கள் பேசுவது அடுத்த அறையில் மயக்கத்தில் இருப்பவளுக்கு கேட்டாலும் புரிய வாய்ப்பில்லை .

ஜானகிராமனின் வேண்டுகோளுக்கு டாக்டர் செவிமடுத்தாலும் கவனமுடன் இருக்கச்சொன்னார்   சிலநேரம் தனக்கு குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை என தெரியவரும்போது அது மோசமான விளைவுகளை தரக்கூடும் எனவும் எச்சரித்தார்.  


கனத்த மனதுடன் மனைவியை மருத்துவனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துவந்தான்.  காலங்கள் ஓடியது.  தன்னைப்பற்றி மருத்துவர் கூறியது எதுவும் தெரியாமல்  வைதேகியும் பக்கத்துக்கு வீட்டுக்கு குடிவந்த துருக்கி நாட்டினர் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துவந்து பாட்டுபாவாடை உடுத்தி கண்ணுக்கு  மையிட்டு தொட்டியில் பூத்த  குட்டி பட்டன் ரோஜாக்களை அணிவித்து துருக்கி பிள்ளையை மயிலாப்பூர் மஞ்சுளாவாக உருமாற்றி  சந்தோஷப்படுவாள் .


மூன்றாவது மாடியில் வசிக்கும் கோமர்  எனும் குர்டிஷ் சிறுவனை நம்ம வாயில் நுழையும் பெயராக குமார் என நாமகரணமிட்டு மகிழ்வாள். 


அடிக்கடி 'ஊருக்கு போவோம்' என நச்சரிப்பாள் ஆனால் ஜானகிராமன் அவளது கோரிக்கைகளை 'விடுமுறை இல்லை' என கூறி  தவிர்த்தான் .


காரணம் ஊரில் இவர்களுடன் திருமணமான மற்ற உறவுக்காரர்களுக்கு நண்டும் சிண்டுமாக இரண்டு மூன்று குழந்தைகள் .  தேவையற்ற கேள்விகள் அம்பாய் பாயும் .  


ஆகவே ஜெர்மனி வந்தும் உடன் வேலை செய்யும்  நட்புக்களின் பிள்ளைகளின்  பிறந்த நாள் விழாக்களை கூட தவிர்த்தான் .  ஆனால் ஆபரேஷனுக்கு பிறகு வைதேகி பழையபடி இயல்பு  வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாள்  .  இப்பொது ஜெர்மன் மொழி வகுப்புக்கும் செல்வதால் நன்கு தேர்ச்சியடைந்துவிட்டாள் .  


அன்று ஒருநாள் வீட்டுக்கு வந்து பார்த்தால்  கிருஷ்ணஜெயந்திக்கு பால்கனி எங்கும்  குட்டி மா பாதங்கள் :)  


புதிதாக பிளாட்டில் குடிவந்த இலங்கை தமிழரின் குழந்தையை வைத்து பாதத்தை செய்திருக்கிறாள்.  அவ்வப்போது ஜானகிராமன் உண்மையை மறைக்கிறோமேயென்ற குற்றஉணர்வில் தவிப்பான்.  எதை ஜானகிராமன் தவிர்க்க நினைக்கிறானோ அதையே வைதேகி சுற்றி வந்து செய்து கொண்டிருந்தாள் .  அப்படிதான் அன்று  வேலை முடிந்து வந்தபோது டிவியில் எஜமான் படம் ஓடிக்கொண்டிருந்தது   சோபாவில் சாய்ந்து லயித்து இருந்தாள் வைதேகி .


வேகமாக வந்த ஜானகிராமன்  அவசரமாக டிவிப்பெட்டியை ரிமோட்டால் அணைத்தான்.  "நான்  டிவி பார்த்திட்டிருக்கேனில்லை எதுக்கு அணைத்தீங்க டிவியை?" என்று கோபத்துடன் எழுந்த வைதேகி அப்படியே மயங்கி சரிய, அரக்கப்பரக்க அவளை தூக்கில் காரில் போட்டு மருத்துவமனைக்கு ஓடினான் ஜானகிராமன் .  


வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு மனதில் மன்னித்துவிடு வைதேகி என பிரார்த்தனையுடன் மருகிக்கொண்டிருந்தான் .   இப்போதும் அதே மலை உச்சி  மருத்துவமனை   அதே மருத்துவர்  அதே அறை   அதே படபடப்பு   ஆனால் படபடப்பு ஜானகிராமனிடம் மட்டும் .   புன்சிரிப்புடன்  உள்நுழைந்த மருத்துவர் சொன்னார்  "யானகிராமன்!  வாழ்த்துக்கள் உங்கள் மனைவி இப்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறார் .."  அதைக்கேட்ட ஜானகிராமனுக்கு தலை சுற்றியது   


"எப்படி சான்ஸே இல்லைஎன்றீர்களே டாக்டர்?" என்று குழப்பத்துடன் கேட்டான் .


அதற்கு மருத்துவர் "நான் 100% குழந்தை பிறக்காது என்றா கூறினேன்?  5 சதவீதம் சான்ஸ் இருக்கு   ஏதேனும் மிரக்கிள் நடந்து பிறக்கக்கூடும்  நமக்கும் மேலே இறைவன் இருக்கிறார் என்று சொன்னேனில்லையா? அது உங்கள் விஷயத்தில் நடந்துள்ளது .  நீங்கள் முதலில் குழந்தை வேண்டுமென்று அதே யோசனையாக இருந்தீர்கள் .  அதனால் உங்களுக்கு வேறு யோசனையே வரவில்லை   பிறகு உங்கள் மனைவி  கவனத்தை பிற விஷயங்களில் செலுத்தியதால் ஏற்பட்ட மன மாற்றமும்  இதற்கு ஒரு காரணி .  சந்தோஷமாக சென்று ரெகுலர் செக்கப்புக்கு ஃபைதேகியை அழைத்து வாருங்கள்"  என்றார் ..


இவை அனைத்தையும் அடுத்த அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த வைதேகி   இன்னும் படத்தை முழுதாக பார்க்க விடாத கோபம்  சில காலமாக சிடுமூஞ்சித்தனமாக நடந்துகொண்டது மற்றும் மருத்துவர் சொன்னவற்றை மறைத்தது என ஜானகிராமன் மீது  பயங்கர கோபத்துடன்  அடிக்க  தயாராக இருந்தாள் .  


மெதுவாக உள்ளே நுழைந்த ஜானகிராமன் "ஃபைதேகி ப்ளீஸ்  என்னை மன்னித்து விடு"  என்றதும்  அந்த ஜெர்மன் உச்சரிப்பில் தனது பேரைக்கேட்ட வைதேகிக்கு குபீரென சிரிப்பு வந்தது.  அடிக்க எடுத்த பிளாஸ்கை வைத்துவிட்டு,  மன்னித்துவிட்டு,   சிரித்துக்கொண்டே ஜானகிராமனின் தோளில் சாய்ந்தாள் .




========================================================

பின்குறிப்பு 
============


இதே கதைகருவை  குழந்தைவரம் என்ற தலைப்பில் போன வருடம் எழுதி டிராப்டில் வைத்து தெரியாமல் அழித்துவிட்டேன் ,இப்போ சற்று மாற்றி சீதை ராமனை மன்னித்தாளுக்கு அனுப்பி வைத்தேன் ..

முதலில் போன வருடம் எழுதியபோது pcos  சின்ரோம் /கருக்குழாய் அடைப்பு என குழந்தையின்மை பிரச்சினைகள் அதனால் தம்பதிகள் படும் மனவருத்தம் திருமணமானவுடன் குழந்தை எப்போ எனக்கேட்டு  துளைக்கும் நமது நாட்டு வழக்கம் எல்லாம் அதில் இருந்தது . எனக்கு வெளிநாட்டு மக்களில் மிகவும் பிடித்த குணமே நமது பெர்சனல் விஷயங்களை ஆராய மாட்டார்கள் .


இவ்வளவு ஏன்  கல்யாணம் ஆச்சான்னு கூட கேட்க மாட்டாங்க .ஆனா இதே நம் ஊராக இருந்தால் திருமணமான இரண்டாம் மாதம் எனி குட் நியூஸ் இல் ஆரம்பித்து  அலோபதி டாக்டர் கமலா செல்வராஜ் முதல் சித்தா டாக்டர் ஜமுனா வரை அட்வைஸ் நீட்டி முழக்குவார்கள் .அது எத்தனை மன உளைச்சலை தம்பதிகளுக்கு தரும் என்பது அனுபவித்தவர்களுக்கே புரியும் இப்படி அடுத்தவர் விஷயத்தில் இலவச அட்வைஸ் தருவோர் மூக்கை நுழைப்போர் எப்போ திருந்துவார்கள் என்றேதெரியவில்லை .இக்கதையில் கதாநாயகனும் நாயகியும் ஜெர்மனியில் வசித்ததால் தப்பித்தார்கள் .எது எப்போ கிடைக்கணுமோ அது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும் . ஒரு விஷயம் நமக்கு கிடைக்கணும்னு இருந்தா அதை யாராலும் தடுக்க முடியாது காலமும் நேரமும் கூடிவரும்போது அது கிடைத்தே தீரும் .
நன்றி வணக்கம் :)



================================================================




106 கருத்துகள்:

  1. மயிலிறகால் வருடியதைப் போல
    இனிய கதை..

    அழகு.. அருமை.. சுபம்..

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம்....துரை சகோ அண்ட் ஸ்ரீராம்.

    ஹை!! இன்று ஏஞ்சலின் கதை!!! ஏஞ்சலின் கதை உங்களைப் போலவே மென்மையாக நகர்கின்றது. பாதிதான் வாசித்துள்ளேன். வைதேகிக்கித் தெரிய வேண்டாம் என்று ஜா ரா சொல்லும் வரை வந்துள்ளேன். மீதியை இதோ கண்ணழகியின் டிமாண்டை முடித்துவிட்டு வந்து வாசிக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஏஞ்சல் கதை மனதை நெகிழ்த்தியது. நான் என்ன சொல்ல நினைத்து வந்தேனோ அதை அப்படியே அப்படியே அப்படியே (வேண்டுமென்றேதான் 3 அப்படியே!!) பின் குறிப்பில் சொல்லிட்டீங்க!! யெஸ் உங்கள் கருத்துடன் ஹைஃபைவ்!!!

    இங்கு கல்யாணம் ஆனதுமே முதல் மாசமே என்ன உங்க மக/மருமக குளிக்காம இருக்காளானு கேள்விகள் வந்துரும்...இந்த ஹைடெக் காலத்தில் கூட இன்னும் இந்தச் சிந்தனைகள் மாறவில்லை. கிடைக்கும் என்றால் கிடைக்கும். எப்போது கிடைக்கணுமோ அப்போது கிடைக்கும். அதே சமயம் வைதேகி போன்று மன நிலையை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் வேண்டும் இது போன்ற சமயத்தில் குடுமப்த்தினர் எத்துணை ஆதரவாக இருக்க வேண்டும் இல்லையா...நம் கோமதிக்காவின் கதையும் நினைவுக்கு வந்தது. அதில் குடும்பத்தினர் அத்தனை அன்பாக இருப்பார்கள்.

    மீண்டும் வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய கதை .
    ஸ்ரீராம் அவர்கள் கவனத்திற்கு:
    உங்கள் ப்ளாக்! எங்கள் விருப்பம் !! பகுதியில் திரு பசுபதியின் தளத்தையும் இணைக்கவும். நல்ல தகவல்களை தந்து வருகிறார்
    http://s-pasupathy.blogspot.com/
    நன்றி - பாபு

    பதிலளிநீக்கு
  6. நான் குடியிருக்கும் பகுதியில் அதாவது ஏரியாவில் இதெல்லாம் மிகவும் சகஜம். இரு நாட்கள் முன் எங்கள் தெருவில் நடந்த மஞ்சள் நீராட்டு விழா எங்கள் ஊரில் சடங்கு என்பார்கள்...அதற்கு அழைப்பு வரவே சென்றிருந்தேன். அங்கு வந்திருந்தவர்களில் பெண்கள் (என் வயதை ஒத்தவர்களும் கொஞ்சம் சிறியவர்களும் பலரையும் பார்த்தால் படித்தவர்கள் போலும்,. நல்ல வசதி படைத்தவர்களாகவும் தான் தெரிந்தார்கள். என்னை அழைத்தவர் எங்கள் தெருவில் பெட்டிக்கடை வைத்திருப்பவர். அவர்கள் மகள் என்ன படிக்கிறாள் என்று கேட்டேன் 8 ஆம் வகுப்பு என்றார்கள். வந்தக் கூட்டத்தில் சொன்னது பொண்ணு வயசுக்கு வந்துருச்சு இனி அடுத்தது கல்யாணம்...உங்க பொண்ணு வயசுக்கு வந்துருச்சா? என்று அம்மாக்களிடமும் சிலர் அங்கு இருந்த சின்னப் பெண்களிடமே கேள்வியும் வைத்தனர். வயசுக்கு வந்துட்டியா...என்று...குதிக்காத...ஓடி ஆடாத....அப்புறம் உங்க பொண்ணு வயசுக்கு வந்துருவானு தோனுது...உடம்ப பாக்கும் போது என்று இப்படியானப் பேச்சுக்கள். விழாவோ ஏதோ கல்யாணம் போல் பெண்ணை மேடையில் ஏற்றி மொய் அல்லது கிஃப்ட்ஸ் கொடுத்து வீடியோ என்று நடந்தது..இது போன்ற ஒன்றை அட்டெண்ட் செய்தது இதுதான் முதல் முறை.

    பெண்களின் பேச்சுகள் ஏன் இப்படி என்று தோன்றியது. ஆனால் நான் எதுவும் சொல்லவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கிடைக்க வேண்டியது அதற்கான நேரத்தில் கிடைக்கும் உண்மையான வார்த்தை.
    வாழ்க நலம்!

    பதிலளிநீக்கு
  8. அதே போன்று என் நெருங்கிய உறவினர் பெண்ணிற்கு 30 வயதாகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை. பெண் படித்து வேலையிலும் இருக்கிறாள். அவளது சித்த்தப்பா பெண்ணிற்குக் கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்தாச்சு. அவளை ஒத்த் வயது சிறியவர்கள் என்று குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகள் திருமணம் ஆகி, அப்புறம் சில குழந்தையுடன் அப்புறம் சிலருக்கு நிச்சயம் ஆகி என்று அழைப்புகள் வரும் போது கேட்கப்படும் கேள்விகள், அதைச்செய் இதைச் செய் என்று பெண்ணின் அம்மாவிடமும், பெண்ணிடமுமே பேசுவது இப்போது அப்பெண் அப்படிக் கேட்கும் உறவினரையே விலக்கி வைக்கும் அளவிற்கு வந்து கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு காரணம் அடுத்த தலைமுறைகள் தங்கள் உறவுகளிடமிருந்து விலகுவதரற்கு....நீங்கள் சொல்லியிருப்பது போல் பெர்சனல் மெட்டரில்..சரி தலையிடுவதில் அக்கறையுடன் செய்து நல்ல விஷயமாகப் பேசி நிஜமான அன்புடன் அழகான பரிந்துரைகள், செய்தால் நலல்து அதுவும் தனிப்பட்ட முறையில் பொதுவாகப் பேசாமல். அப்படியும் இல்லை...

    என் மகனுக்குக் கூட இப்படியானக் கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. 25 லிருந்தே வருகின்றது...இப்பொது 29.... என் மகன் இன்னும் செட்டிலே ஆகவில்லை..எனக்கு அவர்களின் கேள்விகளை எதிர்க்கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதே போன்று அவர்கள் அப்புறம் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை... நான் யாரையும் தவறாக எடுத்துக் கொள்ளாததால் எனக்கு எந்த மன உளைச்சலும் இல்லை. ஏனென்றால் எப்போது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும்..நடக்கவில்லையா அதுவும் ஓகே தான் என்ற இறைவன் மீதான முழு நம்பிக்கையுடன் நகர்வதால் மனம் அலட்டிக் கொள்வதில்லை... ஆனால் சிலருக்கு நம்பிக்கை இருந்தாலும் இப்படியானக் கேள்விகளால் மன உளைச்சலுக்கு உட்படுகிறார்கள்தான்.என்னைச் சுற்றியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது....எல்லோரும் ஒரே மாதிரி கிடையாதே. ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு மாதிரி. பாவம் அவர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மகிழ்ச்சி தந்த கதை. நல்ல முடிவு.

    பாராட்டுகள் ஏஞ்சலின்.

    ஸ்ரீராம்: கற்பனையா? இல்லை கற்ப்பனையா?

    பதிலளிநீக்கு

  10. மேலைநாடுகளில் குழந்தை இல்லையென்றால் யாரும் கேளி கிண்டல் எல்லாம் மறைமுகமாக் சொல்லி குத்திக்காட்டுவதில்லை குழந்தை இல்லாதவர்கள் அவர்களுக்கு வேண்டுமானல் குழந்தைகளை தத்துஎடுத்து வளர்க்கிறார்கள் அதன் மேல் நம்மைவிட மிக அக்க்ரை காட்டுகிறார்கள் பல ஏதும் எதிர்பார்க்காமல் என்பதுதான் உண்மை... குழந்தை இல்லாதவர்களை பார்த்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள் நினைத்தை செய்யலாம் ஆனால் நாங்கள்தான் மணியை பார்த்து கொண்டே ஒட வேண்டும் என்று சொல்லுவார்கள்.

    பதிலளிநீக்கு
  11. மாஸ்டர் செஃப் மாதிரி ஏஞ்சலும் டாப் எழுத்தாளர் என்று பெயர் மாற்றிக் கொண்டாலும் அதியசப்படுவதில்லை... கதையை டிங்க்ரின் பண்ணி வெளியிடும் ஆளுக்கு கிச்சன் உள் சென்று சமையலை டிங்க்ரிங்க் பண்ண தெரியவில்லையே

    பதிலளிநீக்கு
  12. இதமான கதை அஞ்சு...

    மிக மகிழ்வான முடிவு....வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  13. கதைப் போக்கு எல்லாம் நன்றாக இருந்தும் 'சீதை ராமனை மன்னித்தாள்' என்பதற்காக முடிவின் பத்தி வலிந்து திணிக்கப்பட்டது மாதிரி தெரிகிறது. வித்தியாசமான களம் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நம்ம நாட்டு வழக்கப்படி, ஒருத்தரை அறிமுகம் செய்தால், அவர் திருமணமானவரா, எங்கு வேலை பார்க்கிறார் என்று எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ளத் துடிக்கும் இயல்பு உண்டு. இதில் சாதகமான விஷயங்கள் இருந்தாலும், பாதகமான விஷயங்கள் கொஞ்சம் அதிகம்தான். (பெண்ணியவாதிகள் சண்டைக்கு வராதீங்க. இந்த மாதிரி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டு gossip செய்ய பெண்களுக்கு உபயோகமாக இருக்கிறது. எப்போவாவது ஆண்கள், அவங்க வீட்டுல என்ன குடுத்தாங்க-நவராத்திரி கொலுவுக்கு, இவங்க என்ன கொடுத்தாங்கன்னு கேட்கறதைப் பார்த்திருக்கீங்களா? இந்த gossip 'புறம் பேசுதல்' பெண்களுக்கே உரித்தான குணம்)

    அதேசமயம், மேல் நாட்டில் உள்ளதுபோல், தாமரை இலைத் தண்ணீராக நம்ம நாட்டில் நண்பர்களுக்கிடையே உறவு இருக்காது. நாம கொஞ்சம் சீரியஸ் நட்பாக இருப்போம்னு நினைக்கறேன். நம்ம கிட்ட, அடுத்தவருக்கு அட்வைஸ் செய்வது என்ற மோசமான குணம், நம் இயல்பான நல்ல எண்ணத்தின் விளைவாக, நிறைய இருக்கு.

    பெண்களுக்கிடையே comparison, சண்டை வரும்போதுதான், இந்த மாதிரி தெரிந்துகொண்ட விஷயங்களினால், அதனை உபயோகப்படுத்தி வருத்தத்தை ஏற்படுத்துவார்கள்.

    படிப்பு அதிகமாகி, அவரவர்களுக்கு வேலை ஜாஸ்தியாகும்போது (பெண்களும் வேலைக்குச் சென்று), இந்த 'புறம் பேசுதல்' குறையும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீங்க அஞ்சு. நல்ல கதைகரு. வாழ்த்துக்கள். கடைசி பன்ச் சூப்பரா சொல்லியிருக்கிறீங்க.
    மிஸ்டர் யானாக்கி ராமன் உங்களுக்கும் ஃபைதேகிக்கும்// இது வாசித்தபோது எங்க பெயர் படும்பாடு இவர்கள் வாயில்..சிரிப்புடன் சிலநேரம் எங்க பெயர்தானா என டவுட் வரும்.. எங்களுக்கு பிரச்சனையே குடும்பபெயர் இல்லாததும், கொஞ்ச நீளமான பெயருமே..

    பதிலளிநீக்கு
  16. கதை நல்லபடியாக முடிந்தது. நம்நாட்டு வம்பென்பது இப்போது குறைந்துதான் வருகிறது. பெற்ற,பிள்ளை,நாட்டுப்பெண்களே ஒரே வீட்டிலிருந்தாலும் செய்திப் பறிமாற்றமில்லாமல் ரிஸர்வ்டாக இருக்கும் காலமும் வந்து விட்டது. அவரவர்கள் பார்த்தது,கேட்டதைக் கொண்டு சொல்கிறோம். நாகரீகம் அளவோடு பேச்சில் வேண்டும். பட்டால்தான் தெரியும் என்பதை அனுபவத்தினால்தான் கற்றுக் கொள்வார்கள். இதெல்லாம் போகட்டும். ஸந்தோஷமான முடிவு. ஆராரோ பாடிடலாம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. பாபு அவர்களுக்கு ஆம் பசுபதி அவர்கள் மிக மிக நல்ல தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறாஅர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. செவ்வாய் ஃப்ளைட்டில் வந்து இறங்கிவிட்டது, ஏஞ்சலினிடமிருந்தும் ஒரு கதை .

    இந்தக்கதை இந்தியாவில் நிகழ்ந்திருந்தால் ஹீரோயின் அக்கம்பக்கத்தின் அனாவசியக் குடைச்சலில், நொந்து நூலாயிருப்பாள். அவளை ஃப்ரெஷாக வைத்திருக்க, ஜெர்மனிக்குத் தள்ளிக் காப்பாற்றிப் புண்ணியம் தேடிக்கொண்டீர்கள். ஜெர்மன் உச்சரிப்புகள் வாசகர்களுக்குப் பரிச்சயம் ஆனது ஒரு சின்ன போனஸ்.

    பதிலளிநீக்கு
  19. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் வழி விடுங்கோ வழி விடுங்கோ.. அஞ்சு கதை எழுதியிருக்கிறாவாமே.. நான் படிக்கோணும் குறுக்கே ஆர் நிக்கிறது கர்ர்ர்ர்:))... கீரைவடை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு.. சாப்பிட்டுச் சாப்பிட்டுப் படிங்கோவன் கதையை:).. சரி வாணாம் முறைக்காதீங்க:)).. ஃபைதேகி மன்னிச்சுட்டா...

    ஒரு கலக்குக் கலக்கலாம் என் ஓடிவந்தேன் ஆனா கதை மனதை மிகவும் டச்சுப் பண்ணி விட்டது.. மிக அருமையாக, எந்த போறிங்கும் இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கும்.. “மாஸ்டர் செஃப் அதிராவின் நண்பி அஞ்சுவுக்கு” வாழ்த்துக்கள்:))..

    பதிலளிநீக்கு
  20. உண்மைதானே, அனைத்தையும் தாண்டி, உடம்பின் நலத்துக்கு முக்கிய காரணம் மனம்தானே.... அதுவும் முக்கியமாக பெண்களைப் பொறுத்தவரை மனதில் அதிக டென்சன், கவலை, அடுத்தவர்களால் பிரசர் ஏற்படும்போது.. பெண்களின் menstrual cycle கூட நிலை குலைந்து விடுகிறதே.. அப்போ குழந்தை இல்லை என ஆராவது நச்சரித்தால், அப்பெண் நல்ல நோர்மலாக இருப்பினும் குழந்தை தங்குவது கஸ்டமெல்லோ.

    அஞ்சுவின் கதையிலே ஃபைதேகி:) ஜேர்மன் பாசையில் பேசுறேன் நான்:).. வெளிநாட்டில் இருந்தமையாலேதான், டொக்டர் கஸ்டம் எனச் சொன்ன பின்பும் குழந்தை கிடைத்தது.. இதே கதையை நம் நாட்டுப் பெண்ணுக்கு எழுதியிருந்தால்.. ஹையோ கதையை எப்படி முடிச்சிருக்க முடியும்?:).. ராமனை எப்பூடி மன்னிச்சிருக்க முடியும்:))

    பதிலளிநீக்கு
  21. பாசை அதிகம் தெரியாமல் இருப்பதும்கூட சில நேரங்களில் நல்லதுதான்.. அதனால்தான் நான், கிந்தி, கேரளா, தெலுங்கு, சமஸ்கிருதம் இவற்றோடு நிறுத்தி விட்டேன்:)..

    இங்கு ராமனை சீதை மன்னிக்க தேவையில்லையே, இக்கதையில் வரும் ராமன் சீதைக்காகத்தானே மறைத்தார், உண்மையில், உள்ளதைச் சொல்கிறேன் பேர்வழி என அந்த ராமன் வைதேகியிடம்.. அந்தக் குண்டு டொக்டர் சொன்ன கதையைச் சொல்லியிருந்தால்.. மன உழைச்சலாலேயே குழந்தை தங்காமல் போயிருக்குமெல்லோ... எதுவாயினும் கதை சுகமாக முடிந்ததில் மகிழ்ச்சியே...

    ஆனா ஏன் இங்கின எல்லோரும் ஒருவித சோகம்போல இருக்கினம்:).. கீரைவடை மயக்கம் இன்னும் போகல்லியோ?:)

    பதிலளிநீக்கு
  22. @ நெல்லைத்தமிழன்....
    ////படிப்பு அதிகமாகி, அவரவர்களுக்கு வேலை ஜாஸ்தியாகும்போது (பெண்களும் வேலைக்குச் சென்று), இந்த 'புறம் பேசுதல்' குறையும் என நினைக்கிறேன்.///

    100 வீதம் நெல்லைத்தமிழன்.. பெண்கள் புறம்பேசுகிறார்கள் எனப் பெயரெடுப்பதற்கு முக்கிய காரணமே.. பொழுதுபோக்கின்மைதான்.... வேலைக்குப் போய், இப்படி ஏதும் பொது விசயங்களிலும் ஈடிபட்டால் மிகுதி நேரம் குடும்பத்தைப் பார்க்கவே மட்டுமட்டாகிடும் இதில் எங்கே அடுத்தவர் பற்றிப் பேசுவது..

    உண்மையில் எனக்கு, அடுத்தவரின் விடுப்ஸ் கேட்கோணும் எனும் விருப்பமே இல்லை, சொன்னால் கேட்பேன் அவ்வளவுதான், மற்றும்படி நமக்கெதுக்கு எனத்தான் எண்ணுவேன்ன்.. சிலர் முகம் தெரியாவிட்டாலும்.. மெயிலில் கொல்லுவார்கள்.. குடும்பம் என்ன, குழந்தை இருக்கா, என்ன வேலை.. ஹையோ எதுக்கு இதெல்லாம்.. கல்வெட்டில் பொறிக்கவோ... சொல்லத் தொடங்கினால் நிறையச் சொல்லலாம்ம்ம்.. சரி நல்லதையே பேசுவோம்ம். பல விசயங்களில் நாம் வெள்ளையர்களைப் பார்த்து நடப்பது நல்லதென்றே தோணும்.

    பதிலளிநீக்கு
  23. //Avargal Unmaigal said...

    மேலைநாடுகளில் குழந்தை இல்லையென்றால் யாரும் கேளி கிண்டல்///

    அஞ்சூஊஊஊஉ.. கீதா உடனடியாக மேடைக்கு வரவும்.. எனக்கு ரைம் ஆகுது வெயிட் பண்ண முடியாது:).. இன்றிலிருந்து ட்றுத் ட பெயரை மாத்தோணும் ஜொள்ளிட்டென்ன்ன்ன்ன்ன்ன்:).. எனக்குத் தமிழ்ல டி ஆக்கும்:).. டமிலில் ஆரும் பிழை விட்டால் மீ பொயிங்குவேன் எனச் சொல்லி வையுங்கோ எல்லோருக்கும்:))

    ஹையோ எங்கே என் முருங்கி மரம்.. உச்சியில் ஏறிட வேண்டியதுதேன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  24. சகோதரி ஏஞ்சலின், இப்போதுதான் கதையை வாசிக்க முடிந்தது. ரொம்ப நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். ஆம்! குழந்தை இல்லை என்றால் உடனே பல கேள்விகள் கேட்கப்படும் போது ஆணை விடப் பெண்களுக்கு அது மிகவும் மனதைப் பாதிக்கும் விஷயமாகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாய்மை அடைவதை மிகவும் உயர்வாகக் கருதுபவர்கள். அப்படியானத் தாய்மை இல்லை எனும் போது பெண்ணின் மன நிலை எப்படித் துன்பப்படும், அதைக் களைய அடுத்திருக்கும் குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளைப் போல பாவித்தல் என்று அவர்கள் பாவம்!!! நீங்கள் வாழ்ந்த/வாழும் ஊர்கள் இல்லையா? அதையும் கதையின் ஊடே சொல்லி அழகாக முடித்திருக்கின்றீர்கள். நல்ல பாஸிட்டிவ் முடிவு!

    வாழ்த்துகள், பாராட்டுகள்!!

    பதிலளிநீக்கு
  25. எங்கட குண்டுக்:) கீதாக்காவை கடந்த 15 மணி நேரமாகக் காணவில்லை.. கடசியாக அதிரா பார்த்தபோது, நீலச் சாறியும் மஞ்சள் பிளவுஸ் உம் போட்டு.. அழகாக சிரிச்ச முகத்தோடுதான் இருந்தா:).. அவரை யாராவது பார்த்தால்.. அதிரா.. மன்னிக்கவும் மாஸ்டர்செஃப் அதிரா மட்டுமே தேடியதாகவும்.. அவவின் உள்பெட்டியில் இருக்கும் கொமெண்ட்ஸ் ஐ பப்ளிஸ் பண்ணும்படியும் கேட்டதாகச் சொல்லவும்:)... மீ ஊரில் இல்லை:) முருங்கியில் ஏறிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)).

    பதிலளிநீக்கு
  26. (பெண்ணியவாதிகள் சண்டைக்கு வராதீங்க. இந்த மாதிரி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டு gossip செய்ய பெண்களுக்கு உபயோகமாக இருக்கிறது. எப்போவாவது ஆண்கள், அவங்க வீட்டுல என்ன குடுத்தாங்க-நவராத்திரி கொலுவுக்கு, இவங்க என்ன கொடுத்தாங்கன்னு கேட்கறதைப் பார்த்திருக்கீங்களா? இந்த gossip 'புறம் பேசுதல்' பெண்களுக்கே உரித்தான குணம்)//

    உண்மைதான் நெல்லை. இதில் தவறு இல்லையே. நீங்கள் சொல்லியிருப்பது போல் நாம் நலல்து என்று நினைத்து, நம் நல்ல எண்ணத்தை வெளிப்படுத்தி உறவை மேம்படுத்திக் கொள்ள அட்வைஸ் வழங்குவது பல சமயங்களில் தவறான புரிதலாகவும் முடிந்துவிடுகிறதுதான்.

    வேலைக்குப் போனால் கொஞ்சம் குறையும் என்று சொல்லியிருக்கீங்க இல்லையா...அது சரிதான் ஆனால் அது வீட்டுத் திண்ணையிலோ, பைப்படியிலோ அலல்து சந்திக்கும் இடத்திலோ அல்லது கோயிலோ இல்லாமல் ஆஃபீஸில் தொடரும் அவ்வளவே...கொஞ்சம் பாலிஷ்டாக, ஆங்கிலம் தமிழ், ஹிந்தி கலந்து!!!நுனி நாக்கில்!!!.என் கஸின்கள் (பெண்கள்) எல்லோரும் வேலைக்குச் செல்பவர்கள். அவர்களே சொல்லியதிலிருந்து அறிந்து கொண்டது. இந்தத் தலைமுறைப் பெண்களிடமும் இருக்கிறதாம் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. என்ன அதிரா!! ஓ ஸாரி!! மாஸ்டர் செஃப் அதிரா தேம்ஸ் மாத்திட்டீங்களா...முருங்கை மரத்தில் இப்போது வாசமா...வேதாளம்?!!! ஹையோ பயமா இருக்கே!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஹலோ மாஸ்டர் செஃப் அதிரா...நீங்க மதுரையைக் கேள்வி கேட்க முடியாதே!!!!!!!! பாருங்கோஓஓஓஓஓஓஓ அவர் உங்களை மாட்டிவிடுவார்...

    //மன உழைச்சலாலேயே// மன உளைச்சல் என்று வந்திருக்கோணும்!!!! போய் தேம்ஸ் க்குள்ளயோ, கட்டிலுக்கடியிலேயோ ஒளிஞ்சுக்கோங்க...முருங்கை மரம் னா தெரிஞ்சுரும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. சூப்பர் ஏஞ்சலின், அருமையான நடை, சுபமான முடிவு.
    'கிடைக்கிறது கிடைக்காம போகாது ,கிடைக்காம இருக்கிறது கிடைக்கவே கிடைக்காது' என்ற ரஜினி வசனம் போல்
    பின்குறிப்பில் சொல்லியது மிகவும் சரி மற்றவங்க விஷயத்தில் இங்கே மூக்கை நுழைக்கலைனா மண்டை வெடிச்சிடும் அப்படினும் வரம் வாங்கி இருக்கோம்

    பதிலளிநீக்கு
  30. மற்றொரு விஷயம் மனதை வருத்தும் விஷயம் இங்கு சில ரிச்சுவல்ஸில் குழந்தை இல்லாத பெண்களை சேர்த்துக் கொள்வதில்லை. எனக்குத் தெரிந்த வயதான மாமிகள் இருவர் இதைப் பற்றிச் சொல்லி மிகவும் வருந்தியிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே என்னை அவர்களது பெண்ணாகவே பாவித்து வந்தவர்கள். மனது மிகவும் வேதனப்பட்டத் தருணங்கள் அவை..அதனால் எங்கள் வீட்டுக்கு விசேஷங்களில் அவர்கள் இருவருக்கும் நான் முதல் மரியாதை செலுத்துவதுண்டு. வலுக்கட்டாயமாக அவர்களை முன் வரவழைத்து வாழ்த்தச் சொல்லுவேன்.

    ஒரு சில ரிச்சுவல்ஸில் குழந்தைப் பேறு இல்லாதவர்களை அழைத்து இதைச் செய் ஒரு வேளை அப்படியாவது குழந்தை பிறக்கிறதா என்று சொல்லியதையும் பார்த்திருக்கேன். பாவம் அப்படியானப் பெண்கள்...கண்ணில் நீர் வரும் அவர்களுக்கு. பெண்களே பெண்களுக்கு எதிரி!! நாம் அப்படி இருக்கக் கூடாது என்பது எனக்கு ஆழமாகப் பதிந்த கருத்தாகிப் போனது எனது சிறு வயது முதலே.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. “மாஸ்டர் செஃப் அதிராவின் நண்பி அஞ்சுவுக்கு” வாழ்த்துக்கள்:))..//

    ஹப்பா ஹப்பா ஹப்பா....ஊசி நுழையும் இடைத்தில் கூட தன்னை நுழைத்துக் கொண்டு !!! ஹா ஹா ஹா கேட்க ஆளில்லையா....ஏஞ்சல்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. அந்த மாஸ்டர் செஃப் வேணுமின்னு தான் பேச்சுத் வழக்கைப் போட்டு தாளிக்கிறாங்கள்..ந்னு நினைக்கிறேன்..

    பழைய அடுப்படி அலமேலு..ந்னா நெய் கேசரி மாதிரி தமிழ் தளதளக்கும்...

    இப்போ மாஸ்டர் செஃப் மரைன் லிண்டா அல்லவோ...

    அதுதான் -
    Margerine னோடு கலந்த மைதா மாதிரி!..

    பதிலளிநீக்கு
  33. MasterChef:) athira said...

    >>> அஞ்சுவின் கதையிலே ஃபைதேகி:) ஜேர்மன் பாசையில் பேசுறேன் நான்:).. <<<

    இன்னும் தமிழே தத்திங்கணா!.. இதுல ஜேர்மன் வேறயா!..

    பதிலளிநீக்கு
  34. MasterChef:) athira said...

    >>> பாசை அதிகம் தெரியாமல் இருப்பதும்கூட சில நேரங்களில் நல்லதுதான்.. அதனால்தான் நான், கிந்தி, கேரளா, தெலுங்கு, சமஸ்கிருதம் இவற்றோடு நிறுத்தி விட்டேன்:).. <<<

    மாஸ்டர் செஃப் மரைன் லிண்டா பேரைக் கேட்டதுமே
    மத்த பாசை எல்லாம் ஊரை விட்டு ஓடிப் போனதாக் கேள்வி!..

    பதிலளிநீக்கு
  35. @ MasterChef:) athira :

    //..ஏன் இங்கின எல்லோரும் ஒருவித சோகம்போல இருக்கினம்:).. கீரைவடை மயக்கம் இன்னும் போகல்லியோ?:)

    அது வந்து…கீரைவடையை மென்றுகொண்டே யானாக்கிராமன், ஃபைதேகி என்டெல்லாம் படிக்கிறது கஷ்டமல்லோ ?

    பதிலளிநீக்கு
  36. ஒவ்வொருவர் பாணியிலும் ஒவ்வொரு மாதிரியாக அமையும் விதம் அருமையாக உள்ளது. கதாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. @ கீதா //ஊசி நுழையும் இடைத்தில் கூட தன்னை நுழைத்துக் கொண்டு !!! ஹா ஹா ஹா கேட்க ஆளில்லையா....ஏஞ்சல்!!//
    ஹா ஹா நானும் நினைத்தேன் கீதா சிஸ் இதை :))))))செம் பின்ச்

    பதிலளிநீக்கு
  38. மிக்க நன்றி ஸ்ரீராம் :) அண்ட் எங்கள் பிளாக் ..
    மற்றும் தனிதனியாக பின்னூட்டம் அளிக்குமுன்னே அனைவருக்கும் ஒரு பொதுவான பின்னூட்டம் .
    நான் நலம் மற்றும் பசுமைவிடியலில் முன்பு நிறைய விழிப்புணர்வு செய்திகள் அறிவியல் ,உணவு மனநலம் குழந்தை வளர்ப்பு என நிறைய விஷயங்கள் பற்றி நெட்டில் ஆராய்ந்து தேடி எழுதுவேன் ..அப்படி எழுத்த நினைத்து சேகரித்த விஷயங்களை சில பல பத்திரிக்கை புத்தக செய்திகளை இணைத்து மானே தேனே சேர்த்து :) எனக்கு மிகவும் பிடித்த ஜெர்மனி நாட்டின் இயற்கை சூழலை அடிக்ஷன் செஞ்சு எழுதினேன் ..நாம் பார்க்கும் நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்கள் நமக்கு ஒரு சிறு புள்ளியை தரக்கூடும் .
    அப்படிதான் Sophie edward ..இவர் பிரித்தானிய இளவரசர் எட்வர்டின் மனைவி ..அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும்
    // Doctors discovered she had a life-threatening ectopic pregnancy, where the baby develops outside the womb.
    Royal gynaecologist Marcus Setchell performed an immediate operation lasting nearly three hours. Sophie, who had been some six weeks pregnant, was said to be tearful and 'unbelievably sad' last night. Her 37-year-old husband was at her bedside in the King Edward VII Hospital for Officers in London.
    The Royal Family was stunned by the news, because the couple had told no one about the pregnancy. Now Edward and Sophie, who have often told of their longing to start a family, face the possibility that she may never be able to conceive again.///இணைத்தேன் இந்த எக்ட்டோபிக் ப்ரெக்னென்சியால் அவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது ..ஆனால் அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்து உள்ளன :).

    எனக்கு ஒரு விஷயம் எழுத துவங்கினால் கட்டுபாடில்லாமல் நீண்ட நெடுங்கட்டுரையாகி விடும் :) இது எனது குட்டி நெகட்டிவ் :)

    உண்மையில் குங்குமம் தோழி அப்புறம் நிறைய தமிழ் புத்தகங்களில் இருந்தும் பல விஷயங்களை சேகரித்தேன் அனால் முதல் முறை எதேச்சையாக அழிந்ததால் ஒரு உள்ளுணர்வு சொல்லிச்சி இந்த விஷயம் யாருக்கும் பயம் ஏற்படுத்திவிடக்கூடாதது என்பதாலும் மருத்துவ குறிப்புக்களை நீக்கிட்டேன் .

    பதிலளிநீக்கு
  39. இது நமது கோபு சார் மெயிலில் அனுப்பிய பின்னூட்டம்
    -----------------------------------------------------------------
    =================================================================

    மேற்படி கதையைப் பொறுமையாகப் படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். பாஸிடிவ் ஆகவும் முடித்துள்ளீர்கள். பின் குறிப்பும் மிகவும் அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  40. மற்ற பின்னூட்டங்களுக்கு கொஞ்சம் நேரத்தில் வருகிறேன் :)
    அது ஒண்ணுமில்லை கண்ணு சுத்தி சுத்தி அடிக்குது நேத்து கீரை வடை பார்த்த effect

    பதிலளிநீக்கு
  41. ////மன உழைச்சலாலேயே// மன உளைச்சல் என்று வந்திருக்கோணும்!!!! போய் தேம்ஸ் க்குள்ளயோ, கட்டிலுக்கடியிலேயோ ஒளிஞ்சுக்கோங்க...முருங்கை மரம் னா தெரிஞ்சுரும்!!!

    கீதா///

    ஹா ஹா ஹா ஹையோ ழ திரும்பவும் காலை வாரிடிச்சோ?:))... இல்ல கீதா இது வந்து, ஸ்ரீராமின் மாமி வீட்டு முற்றத்து முருங்கி மரம்:) இங்கு ஆரும் வரமாட்டினம்ம்ம்ம்ம்ம்:))

    பதிலளிநீக்கு
  42. ஹா ஹா ஹா.. எங்கட அப்பா அவரும் அப்படித்தான், எங்களுக்கும் அதையே சொல்லுவார் அதாவது எதையும் பொஸிடிவ்வாகவே எடுத்திடோணும் என..

    ஒருவர் நம்மைத் திட்டிட்டால்ல்..
    1.நமக்குத் தெரிஞ்சவர்தானே திட்டினால் திட்டட்டுமே..
    2. நம் நன்மைக்காகத்தான் திட்டியிருப்பார் இல்ல ஏதும் நகைச்சுவையாகவும் திட்டியிருக்கலாமே, நமக்கு அது திட்டுவதுபோல தோணுது போலும்..
    3. அவருக்கு என்ன மனப் பிரச்சனையொ.. அதைக் கொட்ட இன்று நான் அகப்பட்டேன் போலும் சரி சரி அதனாலென்ன:))..

    ஹா ஹா ஹா இப்பூடி எடுத்திட்டால்{(90 வீதமும்] நம் மனம் இலேசாகிடும்.. மாத்தி நெகடிவ்வா யோசிக்க வெளிக்கிட்டால் அன்றைய நாளே முடிஞ்சிடும்... சரி சரி இனிமேல் ஆரும் அதிரா திட்டினால்.. மேலே இருக்கும் முதல் இரண்டில் ஒன்றை மட்டும் நினைக்கவும் ஓகே:))..

    இப்போ மட்டருக்கு வாறேன்ன்:))

    //Thulasidharan V Thillaiakathu said...
    “மாஸ்டர் செஃப் அதிராவின் நண்பி அஞ்சுவுக்கு” வாழ்த்துக்கள்:))..//

    ஹப்பா ஹப்பா ஹப்பா....ஊசி நுழையும் இடைத்தில் கூட தன்னை நுழைத்துக் கொண்டு ///

    ஹா ஹா ஹா நான் அவ்ளோ மெல்லிசாக இருக்கிறேன் எனச் சொன்ன கீதாவுக்கு ஒரு பென்னாம் பெரிய ரோஸ் பொக்கேயை.. என் செக்:), இப்போ, தன் காசில் வாங்கி வந்து தருவா:))..

    அதிராவை இப்பூடி ஆரும் புகழ்ந்தால்.. நெ.தமிழனோ அஞ்சுவோ ட்றுத் ஓ ஆரும் திரும்பியும் பார்க்க மாட்டினம் கர்:)).. ஆனா ஆரவது அதிராவை அடிக்கிறாங்க என தெரிஞ்சாலோ.. கீல்ஸ் ஐக் கழட்டிப்போட்டு, பலைவனத்தில உருண்டு பிரண்டாவது ஓடிவருவினம் முதல் ஆளா:)) ஹையோ ஹையோ:))

    பதிலளிநீக்கு
  43. //துரை செல்வராஜூ said...
    அந்த மாஸ்டர் செஃப் வேணுமின்னு தான் பேச்சுத் வழக்கைப் போட்டு தாளிக்கிறாங்கள்..ந்னு நினைக்கிறேன்..///

    ஹா ஹா ஹா பின்னூட்டம் நீழுதே..

    துரை அண்ணன், என்னில நீங்க எந்த எழுத்துப் பிழையும் பிடிக்கவே முடியாது இது அந்த தேம்ஸ் மேல் இருக்கும் பாசியில் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்:).. அதை மீறி வரும் எழுத்துப் பிழைகள் கவலையீனம்.. அவசர ரைப்பிங்:)).. ஆனாப் பாருங்கோ இந்த ழ, வும் ள வும் இருக்கே:)) ஹையோ என் மானத்தைக் கப்பல் ஏத்தவெண்டே கண்டு பிடிச்சிருக்கினம்... அது சின்ன வயதிலிருந்தே பழகிட்டேன்ன்.. இப்போ அதை நினைச்சு டபிள் செக் பண்ணினா மட்டுமே கரெக்ட்டா எழுதிடுறேன், மெய்ய்ய்ய்ய் மறந்து எழுதும்போது காலை வாரி விட்டிடுது:))..

    துரை அண்ணன் .. நீங்கள் ஏன் மோடி அங்கிளுக்கு ஒரு அவசர மெயில் அனுப்பி.. தமிழ் அகராதியில் இருந்தே.. ழ, ள இவை இரண்டையும் நீக்கச் சொல்லிக் கேய்க்கப்பூடாது?:)).. வேணுமெண்டால்ல். என் மஸ்டர்செஃப் எனும் பட்டத்தை ஊஸ் பண்ணிக்கூட கேளுங்கோ.. நா ஒண்ணும் வாணாம் சொல்ல மாட்டேன்ன்:))

    பதிலளிநீக்கு
  44. ///துரை செல்வராஜூ said...
    MasterChef:) athira said...

    >>> அஞ்சுவின் கதையிலே ஃபைதேகி:) ஜேர்மன் பாசையில் பேசுறேன் நான்:).. <<<

    இன்னும் தமிழே தத்திங்கணா!.. இதுல ஜேர்மன் வேறயா!.///

    ஹா ஹா ஹா துரை அண்ணன் நேக்கு ஃபிரெஞ் உம் தெரியுமாக்கும்:) ஆனா எனக்குப் பாருங்கோ பெருமை பேசுவது புய்க்காது... மெர்ஸி:).. ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  45. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ MasterChef:) athira :

    //

    அது வந்து…கீரைவடையை மென்றுகொண்டே யானாக்கிராமன், ஃபைதேகி என்டெல்லாம் படிக்கிறது கஷ்டமல்லோ ?///

    ஹா ஹா ஹா பார்த்தீங்களோ என் கீரை வடை எபெக்ட் ல இருந்து ஏகாந்தன் அண்ணனாலயே இன்னும் வெளியே வர முடியல்ல:))... இந்த தெக்கினிக்கு எனக்கு இதுவரை தெரியாமல் போச்சேஎ:)).. இப்பூடியே டக்குப் பக்கென இன்னும் பல ரெசிப்பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அனுப்பி.. எல்லோரையும் தொடர்ந்து மயக்க நிலையில் வைத்திருப்பது.. இந்த வலையுலகுக்கு நான் செய்யும் நன்மைகளில் ஒன்றாக இருக்குமென நினைக்கிறென்ன்ன்ன்ன்:))..

    இது பற்றி நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க?:)).. ஹையோ இப்போ எதுக்கு கலைக்கிறீங்க?:).. இந்த ஹாங்:) ல இப்போ பூவிழி யும் இணைஞ்சிருப்பதாக பிபிசில சொல்லிச்சினம் கர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  46. @துரை செல்வராஜ் அண்ணா

    அழகான ரசிப்புக்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி அண்ணா .
    நான் அதிகாலையில் எங்கூர்ல நள்ளிரவு அப்போ ஓடி வந்து உங்களுக்கு காலை வணக்கம் சொல்ல நினைச்சேன் அது நேத்து எங்கள் ப்லாகில் பார்த்த வடை என் பார்வையை மங்கலாக்கி என்னென்னமோ செஞ்சிருச்சி அண்ணா .

    பதிலளிநீக்கு
  47. ///Angelin said...
    .
    மற்றும் தனிதனியாக பின்னூட்டம் அளிக்குமுன்னே அனைவருக்கும் ஒரு பொதுவான பின்னூட்டம் .
    நான் நலம்///

    ஹையோ இப்போ இவவை ஆரு நலம் கேட்டாக?:)).. ஹா ஹா ஹா இதுவும் என் கீரை வடை எபெக்ட்டாகத்தான் இருக்கும்போல:)) ஹையோ இண்டைக்குப் பட்டினிதேன்:) முருங்கியிலயே இருந்திடுவதுதான் நேக்கு சேஃப்ஃப்ஃப்ஃப்:))...

    பதிலளிநீக்கு
  48. ////Angelin said...
    @துரை செல்வராஜ் அண்ணா

    அழகான ரசிப்புக்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி அண்ணா .
    நான் அதிகாலையில் எங்கூர்ல நள்ளிரவு அப்போ ஓடி வந்து உங்களுக்கு காலை வணக்கம் சொல்ல நினைச்சேன்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கும்பகர்ணனின் அன்பு அக்கா:) போல நித்திரையைக் கொண்டுபோட்டு விடிய எழும்பி வந்து கீஈஈறை:) வடையாம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    ஹா ஹா ஹா மீயும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், துரை அண்ணன் எதிர்பார்க்காத நேரம் பர்த்து ஜம்ப்பண்ணி.. மீ த 1ஸ்ட்டா வருவேன் இங்கு:)).. ஹா ஹா ஹா துரை அண்ணனுக்கு இதனாலேயே பிபி ஏறப்போகுது:).. சத்தியமா அதுக்கு என் கீறை:) வடை பொறுப்பல்ல:))

    பதிலளிநீக்கு
  49. @ கீதா அன்ட் துளசி அண்ணா மிக்க நன்றி :) கதையை ரசித்து என் எண்ணங்களையும் ரசித்து நானா நினைத்ததை சொல்லிட்டீங்க :)

    இந்த திருமணம் மற்றும் குழந்தை மற்றும் சொந்த விஷயங்களில் ரொம்பவே நம் நாட்டில் இப்படி மனக்கசப்பை ஏற்படுத்திடறாங்க .
    முகப்புத்தகத்தில் ஒரு ஆண் எழுதியிருந்த பின்னூட்டம் //என் மனைவி இப்போதெல்லாம் பெயர்சூட்டுவிழா சீமந்தம் குழந்தைகளின் பெர்த்டேஸ் இவற்றை தவிர்க்கிறார் ..நானாவது துபாயில் இருக்கேன் பாவந் என் மனைவி அன்றாடம் சந்திக்கும் கேள்விக்கணைகளை தினமும் தலையணையில் கண்ணீராக அர்பணிக்கிறார் // அதை படிச்சப்போ பாவமா யிருந்தது ..
    இப்படி பல விஷயங்கள் நான் பார்த்தவை கேட்டவை படித்தவை என எல்லாவற்றையும் சேர்த்து எழுதினேன்

    பதிலளிநீக்கு
  50. @ ஸ்ரீராம் ..அன்ட் எல்லாரும் இப்போ எனக்கு நெஞ்சு வலி வந்தா பிபி எகிறினா //அதுக்கு இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் கீறை அதை எழுதினவங்க தான் காரணம்னு லெட்டர் எழுதி வைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  51. @கரந்தை ஜெயக்குமார் அண்ணா

    வருகைக்கும் பாராட்டுக்களும் மிக்க நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  52. @பாபு

    மிக்க நன்றிங்க வருகைக்கு பின்னூட்டத்திற்கும் .
    பசுபதி ஐயா அவர்களின் தளம் சுட்டியை முன்பு கோமதி அக்கா அவர்கள் தந்திருந்தாங்க ..மிகவும் அற்புதமான தகவல்கள் .
    நான் தொடர்கிறேன் இன்றுமுதல் .மிக நன்றிங்க

    பதிலளிநீக்கு
  53. ///Angelin said...
    @ ஸ்ரீராம் ..அன்ட் எல்லாரும் இப்போ எனக்கு நெஞ்சு வலி வந்தா பிபி எகிறினா //அதுக்கு இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் கீறை ///

    ஹா ஹா ஹா கர்ர்:) இது வேணுமெண்டே எழுதுவது:))..

    ///Angelin said...

    பசுபதி ஐயா அவர்களின் தளம் ..
    நான் தொடர்கிறேன் இன்றுமுதல் ///

    பேச்சுப் பேச்சா இருக்கோணும்:).. நான் அஞ்சுவை வோச் பண்ணிக்கொண்டே இருப்பேன் ஜொள்ளிட்டேன்ன்:) முருங்கியில் இருந்தாவது:)

    பதிலளிநீக்கு
  54. @ கீதா
    //பெண்களின் பேச்சுகள் ஏன் இப்படி என்று தோன்றியது. ஆனால் நான் எதுவும் சொல்லவில்லை.

    கீதா//

    அதுதான் எனக்கும் புரியாத விஷயம் கீதா ..வேலைக்கு போனாலும் பேசறாங்க வீட்டில் சும்மா இருந்தாலும் பேசறாங்க :)
    இங்கே நிறையபேருக்கு நான் தமிழ் என்பது தெரியாதது :)
    சூப்பர்மார்கெட்டில் ஒரு பெண் போனை வைத்துக்கொண்டு உரக்க கத்தி பேசிட்டிருந்தார் முழு குடும்ப விவரமும் எனக்கு கேட்டுடுச்சி :)
    இப்படித்தான் லைப்ரரி போனா கூட்டமா பேசுவாங்க :) ஷெல்ப் பின்னாடி இருந்தா எல்லாம் கேக்கும் :)
    இவர்களை பொறுத்தவரை பெண் இப்படித்தான் இருக்கணும் 12 வயசான வயதுக்கு வரணும் வந்தா மூலையில் உக்கார்த்தி சடங்கு செஞ்சி அடக்கி வைக்கணும் ..கல்யாணம் ஆனதும் குழந்தை பிறக்கணும்
    அதுவும் ஒன்றாக இருந்தா அதுக்கும் கேள்வி வரும் ஏன் ஒண்ணோட நிறுத்திட்டீங்க :)
    இந்த சின்ன பொண்ணு பற்றி சொன்னிங்களே .ஒரு பெண்மணி இன்னொருவரின் பெண் குழந்தை ஓடி விளையாடும்போது சொல்லுது ..என்னே இவ்ளோ வேர்க்குது ஹார்மோன்ஸ் வேகமா வேலை செய்யுது சீக்கிரம் பெரியவளாகிடுவா ..எனக்கு அதை பார்த்து அந்த எருமைமாடு மேலே எருமைமாட்டு கொட்டகையில் எச்ச மிச்சத்தை எடுத்து அடிக்கணும் போலிருந்தது இது சில வருட முன் ஒரு குடும்பத்து கெட் டு கேத்தரில் நடந்தது ..இதெல்லாம் பொதுவில் பேசணுமா :(
    கடவுளே :)) எத்தனை கோடி மனிதர்களை படைத்தாய் ..

    பதிலளிநீக்கு
  55. மற்ற பின்னூட்டங்களுக்கு மற்றும் மாஸ்டர் செஃப் மியாவை ஓடிஏ ஓடிஏ விரட்டவும் மீண்டும் கொஞ்சம் நேரத்தில் வரீஎன் :)

    பதிலளிநீக்கு
  56. @கில்லர்ஜி
    மிக்க நன்றிங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் .

    பதிலளிநீக்கு
  57. @ கீதா .
    விரிவான பின்னூட்டங்கள் ..இவ்வுலகில் எத்தனை வகை மனிதர்கள் சம்பவங்கள் ஆகியவற்றை நமக்கு புரிய வைக்குது ..
    //நான் யாரையும் தவறாக எடுத்துக் கொள்ளாததால் எனக்கு எந்த மன உளைச்சலும் இல்லை. ஏனென்றால் எப்போது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும்..நடக்கவில்லையா அதுவும் ஓகே தான் என்ற இறைவன் மீதான முழு நம்பிக்கையுடன் நகர்வதால் மனம் அலட்டிக் கொள்வதில்லை... //

    அது கீதா சிலருக்கு இறைவன் நீடித்த பொறுமையை கொடுத்திருக்கார் அவர்கள் நிச்சயம் ஆஸீர்வதிக்கப்பட்டவர்கள் :)
    எல்லாருக்கும் மனநிலை ஒரே மாதிரி இருப்பதில்லையே ப்ரெஷர் டென்சன் கூடும்போது இயலாமையை வெடிக்குது உடல்நலத்தையும் பாதிக்குதே .

    பதிலளிநீக்கு
  58. @வெங்கட் நாகராஜ் ..
    மிக்க நன்றிங்க வருகைக்கும் கதையை ரசித்து பாராட்டியதற்கும் ..
    ஸ்ரீராம் காணோம் :) அந்த கீரை வடை தான் காரணம் ..வந்து சொல்வார் :)

    பதிலளிநீக்கு
  59. @மிகிமா aka மிடில் க்ளாஸ் மாதவி :)
    வருகைக்கும் கதையை ரசித்து பாராட்டியதற்கும் மிக்க நன்றிங்க ..

    பதிலளிநீக்கு
  60. @அவர்கள் உண்மைகள் aka ட்ரூத் நண்பரே ..
    மிக சரியா சொன்னிங்க ..வெளிநாட்டினர் கிட்ட நாம கற்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கு ..அவர்கள் எல்லாவற்றையும் பாசிட்டிவ் ஆட்டிட்யூடோடு எடுத்துப்பாங்க ..

    பதிலளிநீக்கு
  61. December 5, 2017 at 8:51 AM
    Avargal Unmaigal said...
    மாஸ்டர் செஃப் மாதிரி ஏஞ்சலும் டாப் எழுத்தாளர் என்று பெயர் மாற்றிக் கொண்டாலும் அதியசப்படுவதில்லை... கதையை டிங்க்ரின் பண்ணி வெளியிடும் ஆளுக்கு கிச்சன் உள் சென்று சமையலை டிங்க்ரிங்க் பண்ண தெரியவில்லையே//



    நோவ் எனக்கு நானே வச்சுக்கிட்டா நல்லா இருக்காது :) அப்படீன்லாம் சொல்ல மாட்டேன் :) நானும் சில நேம்ஸ் தேடி ரெடி பண்ணி வச்சேன் ..அது பிரச்சினை என்னனா எனக்கு இங்கிலிஷ் பிளாகிலும் புது பெயர் மாறிடும் அதில் நிறைய ரஷ்ய டேனிஷ் சீன பாலோயர்ஸ் இருக்காங்க :) அவங்களுக்கு கஷ்டமாயிருக்கும்னு மாற்றலை :)
    இங்கே பாருங்க கல்யாணமான புதுசில் நானா சப்பாத்தி சுடரே போட்டோ ஒன்னை என் கணவர் எடுத்தார் :) அதை தேடி பிடிச்சி ப்லாகில் போடுவேன் அதோட யாரம் என் சமையலை பத்தி மூச் விட மாட்டாங்க :)

    பதிலளிநீக்கு
  62. @ அனுராதா பிரேம் .

    மிக்க நன்றிப்பா கதையை ரசித்து பாராட்டியதற்கு ..

    //

    பதிலளிநீக்கு
  63. @நெல்லை தமிழன் :)
    வாங்க மிக சரியான அனுமானம் ..
    நான் கதை கருவான மன்னிப்பை அதாவது சீதையின் ராமாயண மன்னிப்பை கொஞ்சம் சீரியஸாகவே எடுத்துக்கொண்டேன் .
    அது எனக்கு ஒரு விஷயம் எப்பவும் தோன்றும் சீதை லக்ஷ்மணன் கோட்டை தாண்டா திருந்தால் மாயமான்மீது ஆசைபடாதிருந்தா இப்படி ..அதனால் ராமன் மீது எப்பவும் உயர்ந்த மரியாதையை வைத்திருக்கேன் அதனால் தானோ என்னமோ மன்னிக்கும் கதைக்குல் என்னால் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியாமல் :) எப்படியோ திணிச்சிட்டேன் :)

    உண்மையாக நாலு கால் செல்லம்ஸ் பற்றி எழுதுவதில் இருக்கும் இன்வால்வ்மென்ட் இதில் குறைவே எனக்கு :)

    பதிலளிநீக்கு
  64. அருமையான எழுத்து ஏஞ்சல்.
    யானகி ராமனும் ,ஃபைதேகியும் அப்பா அம்மா ஆகப் போகீறார்கள் என்பதே நல்ல செய்தி. வைத்தியர் சொன்ன மாதிரி பிரச்சினையிலிருந்து விலகினால் தானே தீர்ந்து விடுகிறது
    . வாழ்க்கையில் பாடம் இது. மிக அழகாக் கதையை நடத்திச் சென்றிருக்கிறீர்கள்.

    நம் ஊரில் இப்போது எவ்வளவோ தேவலை.
    நிறையப் பார்த்தாச்சு. மனம் நிறை வாழ்த்துகள் ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  65. @நெல்லைத்தமிழன் :)

    //இந்த gossip 'புறம் பேசுதல்' பெண்களுக்கே உரித்தான குணம்)//
    கீரை வடை செய்த மயக்கத்தில் பூஸார் உருண்டு பிரண்டுகொண்டிருப்பதால் இதை கவனிக்கலையோ :)
    பெண்களும் காசிப் செய்வாங்க அதேசமயம் ஆண்களும் செய்றாங்க :) குறிப்பா ஒரே சமூகத்தினர் ஒரே மொழி பேசுவோர் இருக்கும் வேலையிடத்தில் இப்படி காஸிப் நடக்குது வெளிநாடுகளில் :)
    .போன வாரம் கேட்ட காஸிப் //தன்வீர் மனைவி அவனை வீட்டுக்கு வெளியே விட்டு சாத்திவிட்டாராம் :) போனில் யாரோ ஒரு பெண் பேசினதை கேட்டதால் //
    இது டெஸ்க்கோவில் கேட்டது இரண்டு ஆண்கள் .
    பெண்கள் எண்ணிக்கை அதிகம் ஆனால் ஆண்களும் பேசுகிறார்கள் :)
    படிச்சாலும் படிக்காட்டியும் வேலை பிசியில் இருந்தாலும் சிலர் gossip குறையாது :)

    பதிலளிநீக்கு
  66. இன்னொன்று இங்கே வெள்ளைக்காரர் எல்லாவற்றையும் பொதுவில் சொல்வாங்க ..லிவிங் இன் ரிலேஷன் .திருமணம் லவ் பிரேக்கப் எல்லாவற்றையும் சொல்லிடுவதால் யாருக்கும் ஆராய்ச்சி செய்ய அவசியமில்லை :)
    நம்ம வேர்ல்ட் நாயகன்னின் துணைவி கூட பிரிவின்போது சொல்லிட்டே பிரிஞ்சாங்க அதுபோல தான் ..ஆனா நம் மக்கள் அவர் சொன்ன ஒரு வார்த்தையை பிடிச்சி நாயகனை வதக்கியது வேறு விஷயம் :)

    பதிலளிநீக்கு
  67. @பிரியசகி அம்முலு ..
    வாங்க ப்ரியா கதையை ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி ..
    கடைசி பன்ச் நிறைய இடங்களில் பார்த்து கேட்டு வந்த அனுபவம் ..:)
    ஹாஹாஹா :) நாங்க ஜெர்மனியில் வசித்தபோது எங்களுக்கு பிரச்சினை குறைவு இந்த கிறிஸ்டியன் குடும்ப பெயர் இருந்ததால் :)
    frau /herr ---- என்று அழைப்பார்கள் .நிறைய இலங்கை தமிழர்களின் அழகான பெயர்களை ஜெர்மன்காரர் வாய் வழியா வரும்போது சிரிச்சி தொல்லைக்கக்கூடாதுன்னு கட்டுப்பாடா இருப்பேன் ..
    ஆனா என் பேரையும் வித்யாசமாதான சொல்லுவாங்க .இங்கே ஏஞ்சல் ஜி உச்சரிப்பு அங்கே க ..அங்கலின் :)))
    ஒரு இலங்கை தமிழ் நண்பி பெயர் விஜயலக்ஷ்மி .அவரை ஃபியாய லாக் ஸ்மி னு கூப்பிடுவாங்க :)
    கதை எழுதும்போது இந்த பெயர் காமெடியையும் இணைத்தேன் :)
    ஒருமுறை இன்னொரு நண்பருக்கு ட்ரான்ஸ்லேஷன் ஹெல்ப்புக்கு போனப்போ ஜெர்மன் லேடி கேட்டாங்க ஏன் இலங்கை தமிழர் பெயர் இவ்ளோ பெரிசா இருக்கு :) அப்போ சொன்னேன் ஜெர்மன் எழுத்துக்கள் 30 தான் ஆனா தமிழில் உயிர் உயிர்மெய் மெய் ஆய்த எழுத்து னு எவ்ளோ இருக்கு :) அதான் பெயரும் பெரிசா இருக்குன்னு

    பதிலளிநீக்கு
  68. @//காமாட்சி said...
    கதை நல்லபடியாக முடிந்தது. நம்நாட்டு வம்பென்பது இப்போது குறைந்துதான் வருகிறது. பெற்ற,பிள்ளை,நாட்டுப்பெண்களே ஒரே வீட்டிலிருந்தாலும் செய்திப் பறிமாற்றமில்லாமல் ரிஸர்வ்டாக இருக்கும் //

    வாங்க காமாட்சி அம்மா .உண்மையில் கேட்கவே சந்தோஷமா இருக்கு காஸிப் குறைந்ததால் :)

    முன்பு போல அனைவரும் ஒட்டி உறவாடுவதில்லை என்பதும் வருத்தமான விஷயமே :(

    வருகைக்கும் கதையை ரசித்து பாராட்டியதற்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா .

    பதிலளிநீக்கு
  69. @ஏகாந்தன் சார் :)
    வாங்க கதையை பாராட்டியதற்கு மிக்க நன்றி ஸார் ..
    சின்ன சின்ன சம்பவங்கள் எங்கே பார்த்தாலும் இப்போல்லாம் எனக்கு உடனே அதை கதையாய் வடிக்க தோன்றுகிறது :)
    ஒரு நாளில் எத்தனை மனிதர்கள் அவர்கள் பற்பல குணாதிசியங்கள் நிறைய பார்க்கிறேன் ..
    ஜெர்மனி எனக்கு மிகவும் பிடித்த நாடு அங்கிருந்து மகளை ஆங்கில வழியில் படிக்கவே இங்கே மைக்ரேட் செஞ்சோம் :)
    மலை உச்சி மீது எங்கள் வீடு அது மிகவும் ரம்மியமான சூழல் இங்கே வந்தாலும் மனசு ஜெர்மனியில் தான இன்னும் இருக்கு :) இங்கே பிரிட்டிஸ்காரருக்கு ஜெர்மன் புகழ் பாடின கோபம் வரும் :)
    தேம்ஸ் கரையோரம் எதோ காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகிற மாதிரி எனக்கு தெரியுது :) எட்டு காலா பாய்ச்சலில் ஒருவர் வருவார் ப்ருங்க இப்போ :)

    ஜெர்மானியர் உச்சரிப்பு சிரிப்பை வரவழைக்கும் உங்க பெயர் அவர்களுக்கு சுலபம் ஆனா v ,j ரொம்ப வித்யாசம் ஜெயலலிதா
    யெயலாலி டாஹ் ,
    நெல்லைத்தமிழன் நெல்லை ட்டமில் ஹான் ,அதிரா அட் ஹீரா ,
    கீதா கெ டா ஹ் ..இப்படி வரும் :)
    ஆங்கிலேயர் u வை அ என்று சொல்வர் அதாவது சுந்தர் சண்டர் ஆனா ஜெர்மானியர் சுண்டர் என்பார் :)
    இப்படி நிறைய இருக்கு ..

    பதிலளிநீக்கு
  70. @ மாஸ்டர் செஃப் :))மியாவ்

    முதலில் ஊசி நுழையும் இடைவெளியில் னு கீதாவின் பின்னூட்டம் பார்த்தப்போ புரியலை :)
    கர்ர்ர்ர் :) எப்போ சான்ஸ் கிடைக்கும் அந்த கொஞ்சூண்டு கேப்பில் பட்டப்பெயரை வாசகர் மனசில் பதிச்சிட்டு போலாம்னு எவ்ளோ பெரிய ஐடியா :)
    ஆமா நான் உங்க செக் னுதானே சொல்விங்க இப்பிடி திடீர்னு நண்பியாகிட்டீங்க :) சரி வாங்க மெட்றாசை சுத்தி பார்க்க கூட்டிப்போறேன் உடன்பிறவாதோழி :) ஒரு சிறு இருமல் வந்தாலும் ஹாஸ்ப்பிட்டலில் அதுவும் உங்களுக்கு பிடிச்ச அ வில் துவங்கும் ஆஸ்ப்பிட்டடலில் வச்சி கவனிக்கிறேன் :))

    பதிலளிநீக்கு
  71. /MasterChef:) athira said...
    உண்மைதானே, அனைத்தையும் தாண்டி, உடம்பின் நலத்துக்கு முக்கிய காரணம் மனம்தானே.... //

    அதேதான் அதிரா ,இங்கே ஒரு தாத்தா சர்ச்சில் இருக்கார் .அவர் சொல்றார் அன்னிக்கு மனைவிக்கு போன் வந்ததாம்
    ஹவ் ஆர் யூ என்று எதிர்புறம் கேட்க இவர் மனைவி கால் தலை உடல் வலி எல்லாத்தையும் சொல்லி முடித்தாராம் .அப்போ இவர் சொல்றார் அந்த அழைப்பை எடுத்தவர் மிகுந்த உளைச்சல் உடல் நோவில் உனக்கு போன் எடுத்திருப்பார் நீ இன்னும் அவரது வலியை கூட்டியிருப்பாய் என்றாராம் ..சொல்லிட்டு என்கிட்டே சொன்னார் :) இது சைக்கலாஜிக்கல் சம்பந்தப்பட்ட விஷயம்
    மனசை சந்தோஷமாக்கு உனது செய்ககைளால் பிறர் மனசையும் அது சந்தோஷமாக்கும்னு ..

    நம்ம ஊர் மக்கள் பேச்சாலேயே மனுஷரை முடக்கி போட்டுடுவாங்க :)

    ஓஒஹ்ஹ பூனைக்கு ஜெர்மன் தெரியுமோ :))
    danke für dein kompliment :) fette Katze

    பதிலளிநீக்கு
  72. ஆனா ஏன் இங்கின எல்லோரும் ஒருவித சோகம்போல இருக்கினம்:).. கீரைவடை மயக்கம் இன்னும் போகல்லியோ?:)

    December 5, 2017 at 1:35 PM//

    ஆமா நிறையபேருக்கு தலைவலி உடல்வலி டிப்ரெஷன் எல்லாம் வந்திடுச்சாம் அந்த கீரை வடை பார்த்திட்டு

    பதிலளிநீக்கு
  73. @துளசி அண்ணா ..வாங்க வருகைக்கும் கதையை ரசித்து பாராட்டியதற்கும் மிக நன்றி ..
    ஆம் ..இயலாமையின்போதுதான் எல்லா பிரச்சினைகளும் ஒன்னு சேர்ந்து உடல்நலத்தையும் பாதிச்சிடும் ,இதுதான் பல பெண்களுக்குநடக்குது ..ஆனால் இங்கே வெளிநாட்டினர் வாழ்க்கையை துவங்குவதே 40 களில்தான் :) அவர்களுக்கும் குழந்தை பிறக்கும் அனால் அப்படி பிறக்காது போனாலும் மதுரை தமிழன் சொன்னதுபோல தத்தெடுத்தாவது வளர்ப்பார்கள் எதிலும் சோர்வை காட்டமாட்டார்கள் .
    ஆமாம் ஜெர்மனி நாங்கள் வாழ்ந்த ஊர் மகள் அங்கேதான் கிண்டர்கார்டன் வரை படிச்சா ..எல்லாருக்கும் வாழ்க்கையில் பிடித்த ஊர்னு இருக்குமில்லையா அதுமாதிரி ஜெர்மனி எனக்கு ரொம்ப பிடிக்கும் :) அதான் அந்த சூழல் ஆக்ஸன்ட் எல்லாத்தையும் இணைச்சேன்

    பதிலளிநீக்கு
  74. ஹலோ மியாவ் :) எதோ அவர் ஒரு மிஸ்டேக் அதுவும் ல /ள டைப்பிங் error விட்டார்னு குதிக்கிறீங்களே :) நீங்க எத்தனை இடத்தில ழ வுக்கு ள போட்டிருப்பிங்க ர வுக்கு ற போட்டிருப்பிங்க இதெல்லாம் விட கம்ப பாரதத்தை எழுதி வச்சிருக்கீங்க :) இதெல்லாம் கேட்டா என்னாவது :)

    பதிலளிநீக்கு
  75. @//Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...//

    வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஐயா ..

    பதிலளிநீக்கு
  76. இப்படி ஒரு கணவன் அமைய மனைவியும், மனைவி அமைய கணவனும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நல்ல சரிஜோடி. கதையினூடே ஒரு சிறு மருத்துவக் குறிப்பையும் தந்திருப்பதும் சிறப்பு. பதறாத காரியம் சிதறாது.

    பதிலளிநீக்கு
  77. @ பூவிழி ..
    /December 5, 2017 at 2:02 PM
    பூ விழி said...
    சூப்பர் ஏஞ்சலின், அருமையான நடை, சுபமான முடிவு//
    வாங்க பூவிழி .இந்த பூனை குறுக்கும் நெடுக்கும் ஓடியதில் நானே தடுமாறிட்டேன் ..இப்போதான் உங்க பின்னூட்டம் வந்தேன் :)

    ஹாஹ் ஹா ஊசி இடைவெளியில்னு சொன்னா உடனே தான் இளைச்சிட்டதா பூனை நினைச்சி சந்தோஷப்படுவார் :)

    ஆமாம்பா நம்ம மக்கள் காஸிப்பை வெளிநாடு வரைக்கும் கொண்டு வந்திட்டாங்க :( வேதனையான உண்மை ..எவ்ளோ பணம் புகழ் இருந்தாலும் சிலர் குணம் மாறலை .

    மிக நன்றிப்பா வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்

    பதிலளிநீக்கு
  78. //ஸ்ரீராம் அவர்கள் கவனத்திற்கு:
    உங்கள் ப்ளாக்! எங்கள் விருப்பம் !! பகுதியில் திரு பசுபதியின் தளத்தையும் இணைக்கவும். நல்ல தகவல்களை தந்து வருகிறார் //

    நன்றி நண்பர் பாபு.

    இணைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  79. @கீதா .அபவுட் rituals //.உண்மையில் வேதனை தரும் விஷயம் தான் :( சிலர் செய்கைகள் நமக்கு சில பாடங்களை நாமஅறியாமலேயே கற்றுக்கொடுத்துவிடுகின்றன ..

    பதிலளிநீக்கு
  80. @வை.கோபாலகிருஷ்ணன் //

    கோபு அண்ணா மெயில் மூலம் வாசித்து பின்னூட்டமளித்ததற்கு மிக்க நன்றி .
    பாசிட்டிவ் முடிவு சந்தோஷ ஹாப்பி எண்டிங் எல்லாம் உங்கள் கதைகளை வாசித்து உள்வாங்கி கொண்டதில் உருவானவை ,

    பதிலளிநீக்கு
  81. @ஸ்ரீராம் உடனே இங்கே வாங்க :)
    //December 5, 2017 at 4:10 PM
    MasterChef:) athira said...
    ஹா ஹா ஹா.. எங்கட அப்பா அவரும் அப்படித்தான், எங்களுக்கும் அதையே சொல்லுவார் அதாவது எதையும் பொஸிடிவ்வாகவே எடுத்திடோணும் என..

    ஒருவர் நம்மைத் திட்டிட்டால்ல்..
    1.நமக்குத் தெரிஞ்சவர்தானே திட்டினால் திட்டட்டுமே..
    2. நம் நன்மைக்காகத்தான் திட்டியிருப்பார் //

    எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நாமளும் பூஸை திட்டுவோம் இதான் சான்ஸ் :)

    பதிலளிநீக்கு
  82. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  83. @ ஸ்ரீராம் //பதறாத காரியம் சிதறாது // அதேதான் மிக சரியா சொன்னிங்க ..
    ஆனால் சில நேரம் காரியங்களை பதறவைச்சிடறாங்க சுற்றம் சூழல் எல்லாமே ..
    மிக்க நன்றி ஸ்ரீராம் .:) கதையை பாராட்டி வாழ்த்தியதற்கு ..எண்ணெய் அன்புக்கு தயார் ஆகிறேன் :)

    பதிலளிநீக்கு
  84. @ Geethaa sambasivam akkaa :)

    கமெண்ட்ஸில் உங்களை பூனை சொன்னதை நல்லா கவனிச்சு படிங்க :) விடாதீங்க :) ஒரு குரல் குடுங்க நானும் கீதாவும் பூவிழியும் துணைக்கு இருக்கோம் :)

    பதிலளிநீக்கு
  85. @வல்லிம்மா ..
    //வல்லிசிம்ஹன் said...
    அருமையான எழுத்து ஏஞ்சல். //
    வாங்க வல்லிம்மா வருகைக்கும் அழகாய் சொன்னமைக்கும் மிக்க நன்றிகள் .
    நம்ம ஊர் மாறி வருகிறது என்பதில் சந்தோஷமே ....
    முன்பு அம்மா சொல்வாங்க ..அவங்ககிட்ட எல்லாரும் கேப்பாங்களாம் //பொண்ணு வெளிநாட்டில் ..வீடு வாங்கிட்டாளா இங்கும் ப்லாட்ஸ் வாங்கிப்போட்டு சொல்லு எத்தினி ரூம் எவ்ளோ விலை கணவர் சாலரி எவ்ளோ :)) அப்பப்ப :)மிக்க நன்றிமா .

    பதிலளிநீக்கு
  86. @ //Asokan Kuppusamy said...
    நன்று பாராட்டுகள்//

    மிக்க நன்றிங்க வருகைக்கும் பாராட்டுக்கும் .

    பதிலளிநீக்கு
  87. அருமையான கதை.
    பின் குறிப்பு சொன்ன உண்மை அருமை.
    //எது எப்போ கிடைக்கணுமோ அது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும் . ஒரு விஷயம் நமக்கு கிடைக்கணும்னு இருந்தா அதை யாராலும் தடுக்க முடியாது காலமும் நேரமும் கூடிவரும்போது அது கிடைத்தே தீரும் .//

    உண்மை, உண்மை மறுக்க முடியாத உண்மை.
    குழந்தை வேண்டும் என்பவர்கள் அக்கம் பக்கத்து குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்த்தால் குழந்தை கண்டிப்பாய் கிடைக்கும் என்று பெரியவர்கள் அந்த காலத்தில் சொல்வார்கள். அது இந்த கதையில் உண்மையாகி விட்டது.
    நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
  88. @ கோமதி அக்கா ..
    அக்கா ..வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி .
    மனதை நல்ல விஷயங்களில் சந்தோஷம் தரும் விஷயங்களில் திசை திருப்பினால் எல்லாம் நல்லபடியா நடக்கும் அதைத்தான் பெரியவங்க அக்காலத்தில் சொன்னாங்க ..

    பதிலளிநீக்கு
  89. முடிஞ்சிடுச்சா? எல்லாம் முடிஞ்சிடுச்சா?:) ஆவ்வ்வ்வ்வ் எல்லோரும் கலைஞ்சிட்டாங்க:) இனி இறங்கிட வேண்டியதுதேன் கீழே:) எவ்ளோ நேரம்தான் மேலேயே இருப்பதாம்:)..

    பதிலளிநீக்கு
  90. @ Angelin:

    அழகான ஜெர்மன் நகரை விட்டுவிட்டு குழந்தைக்காக லண்டன் வந்துவிட்டீர்கள். இங்கிலீஷ் வேண்டுமென்றால் வந்துவிடவேண்டியதுதான் இங்கிலாந்துக்கு. அதுவும் ஒருவகைக்கு நல்லதே. ஆனால், உங்கள் மனசை விட்டு ஜெர்மனி நகராது! அது அங்கே போய் உட்கார்ந்துவிட்டது என்று தோன்றுகிறது.

    ஜெனீவாவில் 3 வருடங்கள் வாழ்ந்தபோது ஸ்விஸ் மக்களின் ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, இத்தாலிய கலாச்சாரங்களைக் கொஞ்சம் கிட்டக்க இருந்து கவனித்திருக்கிறேன். இந்த மூன்று மொழிபேசும் பிரதேசங்களடங்கியதுதானே ஸ்விட்ஸர்லாந்து. அதனைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை – சாதாரண பயணக்கட்டுரையாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக எழுதியிருக்கிறேன் ‘சொல்வனம் இணைய இதழில்- ‘ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்’. நேரமிருக்கையில் வாசிக்கவும்: http://solvanam.com/?p=47138

    பதிலளிநீக்கு
  91. அழகான நடையில் அருமையான கதை.

    குழந்தையே பிறக்காது என சொல்லப்பட்ட பலருக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்த பின் குழந்தை பிறந்திருக்கிறது. இறையருளோடு மன இறுக்கம், அழுத்தம் மறைந்து போவதாலும் இந்த அதிசயங்கள் நிகழுகின்றன. அந்த வகையில் ஜானகிராமன் உண்மையை மறைத்து மனைவிக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதும் , வைதேகி அதே சிந்தனையோடு குழந்தைகளை நேசித்துச் சீராட்டியதும் இதை சாத்தியமாக்கியிருக்கிறது. ஜெர்மன் பின்னணியில் கதையை நகர்த்திச் சென்றிருப்பதும் ரசிக்க வைத்தது. பாராட்டுகள் ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு

  92. @ஏகாந்தன் ஸார் ...
    //உங்கள் மனசை விட்டு ஜெர்மனி நகராது! அது அங்கே போய் உட்கார்ந்துவிட்டது என்று தோன்றுகிறது. //

    100 %உண்மை மிக சரியாக கணித்து விட்டீர்கள் .
    அந்த அழகான ஜெர்மன் நகரம் மனதைவிட்டு அகலப்போவதில்லை .இது எனக்கு மட்டுமில்லை அங்கிருந்து எத்தனையோ பேர் ஆங்கில வழி கல்விக்காக குடும்பங்களாக இங்கே வந்தார்கள் அவங்க அனைவருக்குமே ஜெர்மனி சொர்க்கபூமி :)
    சிலர் வேண்டாம் லண்டன் என்று வந்த வேகத்திலேயே ஜெர்மனிக்கு ஓடிட்டாங்க ....
    இன்னொன்று எல்லாருக்குமே அவங்க முதன்முதலா காலடி எடுத்து வைக்கும் இடம் ரொம்ப சென்டிமென்டல் அதுமட்டகிரி கல்யாணமானவுடனே கணவர் ஜெர்மனியில் தான இருந்தார் நான் உடனே மெட்ராஸ் டு ஜெர்மனி அவருடன் பறந்தேன் ,முதல் நாள்லயே கொட்டும் பனி என்னை வெல்கம் பண்ணுச்சே :) .இப்படி நிறைய இருக்கு
    எங்கள் நகரம் பிரான்ஸ் பார்டர் அரைமணிநேரத்தில் காரில் செல்வோம் மிகவும் அருமையான இடம் .
    நிச்சயம் சென்று அங்கே சொல்வனத்தில் வாசிக்கிறேன் .மிக்க நன்றி ஸார்

    பதிலளிநீக்கு
  93. @ராமலக்ஷ்மி அக்கா ..வருகைக்கும் விரிவான பின்னூட்ட்டத்துக்கும் மிக்க நன்றிக்கா .
    ஆமாம் டாக்டர்ஸ் வேர்ட் என்பதை விட இறையருள் மற்றும் மனிதர்களும் பாசிட்டிவ் சிந்தனையோடு இருக்கும்போது நல்லதே நடக்கும் . எனக்கும் நீங்க சொன்னதுபோன்ற குடும்பங்கள் தெரியும் ஒரு குடும்பத்துக்கு 15 வருடம் கழித்தும் இன்னிக்கும் ஒரு தம்பதிக்கு 5 வருடம் கழித்தும் குழந்தை பிறந்திருக்கு .ஜெர்மனி எனக்கு மிகவும் பிடித்த இடம்கா :) அதான் அந்த சீன்ஸை இணைத்துவிட்டேன் ..மிக நன்றிக்கா

    பதிலளிநீக்கு
  94. நம்நாட்டில் வங்காளிகளுக்கும் v வராது b தான் வைத்தியநாதன் பைத்தியநாதான் ஆவார் அதுசரி உங்கள் அஞ்சல் முகவரி தேடினேனே கிடைக்கவில்லையே சொல்லலாம் என்றால் சொல்லலாம்தானே

    பதிலளிநீக்கு
  95. எனக்கு தெரிந்த டாக்டர் நண்பி ஒருவருக்கு திருமண்மாகி 15 வருடங்கள் வரை குழந்தைபிறக்க வில்லை இப்போது ஒரு சூட்டிகையான பெண்குழந்தைக்குத் தாயார்

    பதிலளிநீக்கு
  96. @ஏகாந்தன் சார் ..நான் படிச்சு பின்னூட்டம் போட்டேன் .. காலைல இருந்தது இப்போ காணோமே !!!
    அதுவும் என்னோட கணக்கு அறிவை எவ்ளோ தரம் டெஸ்ட் பண்ணுச்சி தெரியுமா?? அந்த CAPTCHA ..
    அவ்வ்வ் ..டிராப்டில் கூட இல்லை இப்போ நான் எழுதி போட்டதை காணோமே :(

    பதிலளிநீக்கு
  97. வாங்க GMB சார் .15 வருடத்திற்குப்பின் அந்த டாக்டருக்கு எவ்ளோ சந்தோஷமாயிருந்திருக்கும்ல ..வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

    பதிலளிநீக்கு
  98. கிட்டத்தட்ட இதே பின்னணியில் நானும் ஓர் கதை எழுதினேன். ஆனால் அனுப்பவில்லை :) இம்மாதிரிக் குழந்தையே பிறக்காதவர்களை நாம் சகஜமாக நடத்தினாலே போதும். இல்லை எனில் அவர்களுக்கு பயங்கர மன அழுத்தம் வந்து விடும். கதையைக் கவனமுடன் கையாண்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  99. @ கீதாக்கா ..ஏன் அனுப்பலை ?? நீங்க உங்க கதையையும் இங்கே ப்லாகில் போடுங்க .படிக்க ஆசையா இருக்கு ..இனொரு விஷயமும் இருக்குக்கா யாரவது ஒன்றிரண்டு பேராச்சும் இப்படிப்பட்ட கதைகளை படிச்சி மனம் திருந்தி யாரையும் புண்படுத்தாம இருப்பங்களே அதுவே நமக்கொரு பெரிய வெற்றி சந்தோஷம் .மிக்க நன்றி கீதாக்கா ..இதை போன வருஷம் குழந்தை வரம் தலைப்பில் எழுதி வச்சிருந்தேன் ஆனால் அதில் உரையாடல் பாணியில் இருந்தது எழுதி முடிக்கும்போதே யார் மனசும் கஷ்டப்படக்கூடாதது என்ற ஒரு உறுத்தல் இருந்தது அதுக்கேற்றாற்போல் எனக்கு தெரியாம டிராஃப்டை அழிச்சி வச்சிட்டேன் .அதனால் உள்ளுணர்வு சொல்லிச்சி இதை வேறு விதமா மாற்றி இப்போ அனுப்பி வச்சேன் ,

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!