வெள்ளி, 21 செப்டம்பர், 2018

வெள்ளி வீடியோ 180921 : வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வினில் ஒன்றான பின்னே


​​
வாழ்வு என் பக்கம்.    1976 இல் வெளிவந்த திரைப்படம். 




கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்தப் படத்தின் கதை மகேந்திரன் எழுதியது.  இசை எம் எஸ் விஸ்வநாதன். 



முத்துராமன் - லட்சுமி நடித்த திரைப்படம்.



பகிரப் போகும் இந்தப் பாடல் உட்பட இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதியது.​  

உண்மையிலேயே வார்த்தை இல்லா சரசம்தான்.



இந்தப் பாடலைப் பாடியிருப்பவர்கள் கே ஜெ யேசுதாஸ் - பி எஸ் சசிரேகா



கே ஜே யேசுதாஸ் குரல் இந்தப் பாடலில் அப்படி இழையும்.  முதல் சரணத்தில் நாணம் வார்தையைச் சொல்லும்போது ஒரு குழைவு.  மௌனம் வார்தையைச் சொல்லும்போது ஒரு கமக்கம்..  



இடை இடையே ஒலிக்கும் பெண்குரல் பாடலின் உணர்வைக் கூட்டுகிறது.

நானும் ரசிக்கும் ஒரு பாடல்.


வீணை பேசும் 
அதை மீட்டும் விரல்களைக் கண்டு 
தென்றல் பேசும் 
அது மோதும் மலர்களில் நின்று 

நாணம் ஒருவகை கலையின் சுகம் 
மௌனம் ஒருவகை மொழியின் பதம் 
தீபம் எப்போது பேசும் கண்ணே 
தோன்றும் தெய்வத்தின் முன்னே 
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் 
தீபம் சொல்லாதோ கண்ணே 


காதல் தருவது ரதியின் கதை 
கண்ணில் வருவது கவிதைக் கலை 
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே 
வாழ்வினில் ஒன்றான பின்னே 
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே 
நெஞ்சில் தாலாட்டு கண்ணே 




61 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும்
    இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு ஓடோடி வரும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. வெள்ளியின் விடியலில்
    வீணையின் மங்கலம்....

    நன்றி ஸ்ரீராம்...

    பதிலளிநீக்கு
  3. தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ!...

    எத்தனை பொருள் பொதிந்த வரிகள்...

    கண்கள் இருந்தாலும்
    தெய்வத்தை விளங்க வைப்பது தீபம்...

    இல்லறத்திலும்
    தெய்வத்தை விளங்க வைப்பவள் - பெண்..

    அதனால்தான் பெண்ணை
    குலவிளக்கு என்றார்கள்..

    தெய்வம் இருந்தும் தீபம் இல்லை எனில் வீண்...

    தெய்வம் வாழ்க..
    தீபம் வாழ்க..
    குலம் வாழ்க..
    குல விளக்கு வாழ்க..
    குறைவிலா இல்லறம்
    வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தெய்வம் வாழ்க..
      தீபம் வாழ்க..
      குலம் வாழ்க..
      குல விளக்கு வாழ்க..
      குறைவிலா இல்லறம்
      வாழ்க.. வாழ்க.. ​//

      கண்ணதாசன் வாழ்க..
      எம் எஸ் வி வாழ்க..
      யேசுதாஸ் வாழ்க..​
      ​ரசிக்கும் மனங்கள்
      வாழ்க வாழ்கவே..​

      நீக்கு
    2. போற்றப்படும் பெண்மை..
      புகழப்படும் ஆண்மை..

      இல்லறம் அல்லது
      நல்லறம் அன்று...

      ஔவையார் சும்மாவா சொன்னாங்க!.

      நீக்கு
  4. கேட்ட பாடல்தான் இன்று இசித்து கேட்டேன் நன்றி ஸ்ரீராம்ஜி

    பதிலளிநீக்கு
  5. தெரியாது இப்படி ஒரு படம் வந்திருப்பது. மற்றபடி முத்துராமன் லக்ஷ்மி ஜோடியில் சில படங்கள் பார்த்தது உண்டு. சிவகுமார் லக்ஷ்மி ஜோடி நடிச்சும் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தெரியாது இப்படி ஒரு படம்..//

      இன்னும் கொஞ்ச நேரத்தில
      சலங்கைச் சத்தம் கேக்கும் பாருங்க...

      முத்துராமன் தாத்தா..
      லெச்சுமி பாட்டி.. ந்னு சொல்லிக்கிட்டு!...

      நீக்கு
    2. அழகான பாடல். முத்துராமனின் முகமே அமைதி
      கொடுக்கும் Bhavam நிறைந்தது. படக்கதை நினைவில்லை.

      நன்றாகத்தான் இருந்திருக்கும். ஜேசுதான் குரல் என்னமாய் இழையோடுகிறது.
      இந்தத் தம்பதிகள் போல எல்லாத் தம்பதிகளும் இனிதே
      வாழ வாழ்த்துகள்.

      நீக்கு
    3. நோஓ அது அன்ரி... அங்கிள் துரை அண்ணன்:) ஹா ஹா ஹா ..

      நீக்கு
    4. இந்தப் படம் நான் கூடப் பார்த்தது இல்லை கீதா அக்கா.. ஆனால் அந்தப் படங்களில் நல்ல பாடல்கள் இருந்தால் பிடித்து விடுவேன்!

      நீக்கு
    5. ஆம், இனிமையான பாடல்தான் வல்லிம்மா.

      நீக்கு
  6. முத்துராமன் 'கொடிமலர்" படத்தில் இப்படி வாய் பேசாத பெண்ணிடம் ஒரு பாடல் பாடுவார் அதுவும் நன்றாக இருக்கும்.
    மெளனமே பார்வையால் ஒரு வார்த்தை பேச வேண்டும், என்று ஆரம்பிக்கும்.
    இந்த பாட்டும் பிடித்த பாடல்தான். பகிர்வுக்கு நன்றி
    இரண்டு வேடத்தில் நடித்து இருப்பார் லட்சுமி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... முதற்கண் உங்களுக்கு (தேதிப்படி) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

      மௌனமே பார்வையாய் இனிய பாடல்.

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம்.
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  7. இந்த பாடலை கேட்க்கும் போது முத்துராமன் ஜெயா தொல்க்காட்சியில் காதலிக்க நேரமில்லை காதலிக்க ஆளுமில்லை என்று பாடிக் கொண்டு இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.. ஹா... அது வேறு டைப் பாடல்...!

      நீக்கு
    2. அது இளமைப் பாடல். மிக ரசிப்பேன் கோமதி. இனிய வாழ்த்துகள் மா.

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம் ......

    இனிய பாடல். பலமுறை கேட்டதுண்டு. இப்போது தான் காட்சியுடன் பார்க்கிறேன்.

    கானகந்தர்வனின் குரலில் பாடல்கள் நிறைய கேட்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.

      மாலை வணக்கம்.

      நான் எஸ் பி பி கலெக்ஷன், யேசுதாஸ் கலெக்ஷன், டி எம் எஸ் கலெக்ஷன் என்று தனித்தனியாய் பாடல் சேமிப்பு வைத்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  9. பாடலைக் கேட்கவே தேவையில்லை. கவிதை வரிகளைப் படிக்கும்போதே பாட்டின் வரிகள் மனதில் ஒலிக்கிறது. அட அது எப்படி, எந்த வருடம் என்பதை இப்போதுதான் பார்த்தேன். 76/77. என் 7வது வகுப்பு சமயம். பாடல் எங்கோ ஒலித்தது என் மனதில் பதிந்துவிட்டதுபோலும் (வீட்டுல சினிமாப் பாட்டெல்லாம் கேட்கமுடியாது, அந்த சமயத்தில்தான் 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்ற பாடலும் பலமுறை பள்ளியிலிருந்து வரும் வழியில் கேட்டிருக்கிறேன்)

    சிம்பிளான நல்ல வரிகள் கண்ணதாசனோடுடையது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆ அஞ்சூ ஓடியாங்கோஓஓஒ கையும் களவுமாப் பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் அப்போ நம்முடைய ஆரம்பக் கணக்குத்தேன்ன்ன் கரீட்டூஊஊஊஉ:) ஹா ஹா ஹா

      நீக்கு
    2. வாங்க நெல்லை.. பாடலையும், வரிகளையும் ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஹா... அதிரா நெல்லை உங்க கிட்ட மாட்டிகிட்டாரா?​

      நீக்கு
    4. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

      நீக்கு
  10. வீணையின் நாதம் ரசித்தேன் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. ஆஆஆஆஆஆ இது என்னுடைய கொப்பி வலது சோங்ங்ங்ங் ...... இதை யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டேன்ன்ன்ன்ன்ன்:)...
    மை கண்ணதாசன் அங்கிள், முத்துராமன் மாமா... ஜேசுதாஸ் அங்கிள் மூவரும் ஒன்றிணைந்த பாடல்ல்ல்ல்ல்ல்... அதிராவை விட வேற ஆரும் டச்சுப் ப்ண்ணக்குடா ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... மூவருமே உங்கள் அபிமான ஆட்களோ அதிரா? யேசுதாஸ் குரலில் நிறைய நல்ல பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றாகப் பகிரவேண்டும்!

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க பகிர மாட்டீங்க:) கண்ணதாசன் அங்கிளின் பேர்த்டேக்குப் போடுவேன் என்றிட்டு போடவே இல்லை:) அதனால நான் நம்ப மாட்டேனாக்கும்:)..

      நீக்கு
  12. ஓ வாழ்வு என் பக்கமோ படத்தின் பெயர்.. பார்க்கவில்லை படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படம் பார்க்கவில்லை அதிரா.. ஆனால் பாடல்களை விடமாட்டேன் - நல்ல பாடல்களாக இருந்தால்!

      நீக்கு
  13. படத்தின் பெயரே அசடு வழிகிறது. அது என்ன ’வாழ்வு என் பக்கம்’..உன் பக்கம்? சுகமோ, துக்கமோ - வாழ்வு என்பது ஒவ்வொரு உயிருக்கும் உண்டு. பக்கம், சைடு எல்லாம் எங்கிருந்து வந்தது இதில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க ஏகாந்தன் ஸார்? பாஸிட்டிவா யோசிக்கிறார் கதாநாயகன்!!

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ எல்லோரும் பொடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிங்கோஓஓ ஏகாந்தன் அண்ணன் இப்போ ஹொட்டா இருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹையோ தெரியாம தேடிட்டமோ:).. இனி தேடினதை வாபஸ் வாங்கவும் முடியாதே:)))... ஹா ஹா ஹா அந்தா ஶ்ரீராம் ஓடுறார்ர் பிடிங்கோ பிடிங்கோ ஏ அண்ணன் ... என்னை விட்டிடுங்கோ மீ ஒரு அப்பாஆஆஆஆஆவி:)..

      நீக்கு
    3. ஹா... ஹா.. ஹா... ஏகாந்தன் ஸார் இந்தியா - பங்களாதேஷ் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த 'ரெ'ன்ஷன்!

      நீக்கு
  14. /நானும் ரசிக்கும் ஒரு பாடல்....!/ நீங்கள் ரசிக்காத பாடலும் உண்டோ தேடித்தேடி ரசிக்கிறீர்களே

    பதிலளிநீக்கு
  15. நான் ரசித்த பாடல். கேட்க இனிமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் ரசிக்காத பாடலும் உண்டோ //

      வாங்க ஜி எம் பி ஸார்.. நான் ரசிக்காத பாடல்கள் நிறையவே உண்டு.

      நீக்கு
    2. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இனிமையான பாடல். கேட்ட நினைவு வருகிறது. ஆனால் சரியாகவும் சொல்லத் தெரியவில்லை. படம் பார்த்ததில்லை. இப்போது பாடல் கேட்டேன். மிகவும் ரசிக்க தக்கதாய் உள்ளது. அருமையான இசை. அந்த கால கட்டத்தில் வீட்டில் நல்ல குடும்ப படங்கள் என்ற சான்றிதழ் கிடைத்த பின்தான் அம்மாவோடு செல்ல முடியும். ஆகையால் வந்த படங்களையெல்லாம் பார்க்க இயலாது. பிற வேலைகள் போக நான் மும்மரமாக அமர்ந்து "எழுத்தாள" கனவில் கதைகளை எழுதிய நேரங்களது. எழுபத்தியாறு என் பழைய நினைவுகளை மீட்டிச் சென்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..

      மிகவும் மென்மையான பாடல் இது. மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.

      நன்றி அக்கா.

      நீக்கு
  17. படம் பேரு நினைவில் இருக்கு. பாட்டுதான் நினைவில் இல்ல. ஆனா, பாட்டு நல்லா இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி.. ஆஹா.. இந்தப் பாடல் இப்போதுதான் கேட்கிறீர்களா? அட!

      நீக்கு
  18. அருமையான பாடல். பாடல் வரிகளையும், பாடகர் குரலையும் அமுக்காத இனிய இசை.
    லக்ஷ்மி சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்து புகழை குவித்த பிறகு வெளியான சாதாரண படம். பார்த்ததில்லை. பாடல் பல முறை கேட்டிருக்கிறேன். பகிர்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  19. சினிமாப் புலிகளும், சிங்கங்களும் உலவிடும் தளத்தில் ஹீரோ, ஹீரோயின் படத்தையும் போட்டு, பக்கத்தில் 'முத்துராமன், லட்சுமி நடித்த படம்' என்றும் எழுதிவைத்தால் என்ன அர்த்தம்?

    பதிலளிநீக்கு
  20. Castயை விட crew பிரமாதம். Music, playback singer, song writer, direction/screenplay..

    பதிலளிநீக்கு
  21. பாடல் செம பாடல் ஸ்ரீராம். கள்ளத்தனமாக இலங்கை வானொலியில் கேட்ட பாடல் வீட்டில் பாட்டெல்லாம் நாங்கள் போட்டுக் கேட்க முடியாதே....

    அப்படி நிறைய கேட்டதுண்டு இப்பாடல். வரிகள் இப்போதான் நீங்கள் இங்கு போட்டுத்தான் வாசித்தேன். அருமையான வரிகள் இல்லையா...இடையில் வரும் ஹம்மிங்க் சசிரேகா என்று நினைவு. சரியா தெரியலை. மற்றபடி படம் எல்லாம் தெரியலை அதுவும் முத்துராமன் லக்ஷ்மி - பாடல் என்பதும் இப்பத்தான் தெரிந்தது. யேசுதாஸின் அருமையான பாடல்களில் இதுவும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  22. முத்துராமன் அங்கிளுக்கு ஏஞ்சல் வரலையா!!?? ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!