ஞாயிறு, 12 ஜூலை, 2009

அன்புள்ள அனானிக்கு... 01

அன்புள்ள அனானி!

உங்கள் கேள்விகளில், முதலாவதாக நான் எடுத்துக் கொண்டிருப்பது:

கே: ஆசிரியர் குழு - அறிமுகம் தேவை.

பதில்:

1) ஆசி (Rear) : மற்ற மூவருக்கும் ஆசி வழங்க வேண்டியவர்; தன் 'பங்கு' க்கு மிகவும் நன்றாக எழுதுபவர். எங்கள் வெற்றிக்குப் பின்னே (rear) இவர் உண்டு.

2) ஆ (சிரி) யார் ? : சிரித்துக் கொண்டே ஆய்பவர்; எழுதுபவர் - எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் ......

3) ஆ (ஸ்ரீ யார்) : ஸ்ரீ என்பதை தமிழில் "திரு" என்பார்கள்; நெட்டிலே திருடி - நேர்மையாய் ஒத்துக் கொள்பவர் - ஆனால் சுவையான சுடல்கள்!

4) ஆ (சிறியர்) : பட்டணம் 'பொடி' அய்யர். தானும் தும்மி மற்றவர்களையும் தும்ம வைக்க முயற்சிப்பவர்!

1 கருத்து:

  1. ஆக, இனிமே - (என்னைப் போன்ற) அனானிகளும்
    அஞ்சா நெஞ்சர்களும் (பெயரைக் காட்டிக் கொள்ள அஞ்சாதவர்கள்!)
    உங்களிடம் கேள்வி கேட்கலாம்!
    அப்படித்தானே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!