புதன், 6 டிசம்பர், 2017

புதன் 171206 வார வம்பு



சென்ற வார வம்பு பகுதியில் பங்கேற்று பல கருத்துகளை ஆணித்தரமாக அடித்துச் சொல்லியிருக்கிற எல்லோருக்கும் நன்றி.   
விரிவான கருத்துகளை முதலில் பதிவிட்ட து.   தி . கீதா அவர்களுக்கு சிறப்பு நன்றி. 

என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து கோபப்படாமல், அவர்கள் பக்க நியாயங்களை எழுதிய எல்லோரும் வாழ்த்துக்கு உரியவர்கள்.  மாதவன் பாட்டாகவே பாடிட்டார்! ( ஆனா எனக்கு தமிழ் இலக்கணம் த த தத்திங்கிணதோம் .... கவிதை எட்டாக்கனி! அதனால் கையை மட்டும் தட்டிடறேன். )


இந்த வார வம்பு கேள்வி : 

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை யாருமே செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து. 


இந்த இரண்டு விஷயங்களையும் செய்கின்ற பல ஆண்களையும், சில பெண்களையும் பார்த்துள்ளேன்.  

அவரவர்கள் அவர்களின் செய்கைகளுக்கு ஒரு காரணம் வைத்திருக்கலாம் . இந்த விஷயங்களை அவர்கள் வீட்டுக்குள் செய்தால் யாருக்கும் கவலை இல்லை. ஆனால் பொது இடங்களில் , வேற்று மனிதர்கள் வந்து போகும் இடங்களில் செய்வது உறுத்தலாக இருக்கு. 

நீங்க என்ன நினைக்கிறீர்கள் ? 





தமிழ்மணம்.


38 கருத்துகள்:

  1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போல பதிவு எட்டு மணிக்கு மேல் வரும் என்று இருக்கின்றார்கள்...

    பதிலளிநீக்கு
  3. இதை மற்றவர்களுக்காக நிறுத்த முடியாது என்னால் முடியும் காரணம் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை.

    பொது இடத்தில் புகை பிடிப்பவரை முடிந்த அளவு தடுக்க வேண்டும் கேட்காவிடில் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து போகாமல் இரயில்வே ஸ்டேஷன் அழைத்துப் போயி இரயில் விடும் புகைக்குள் அவரது தலையை கால் மணிநேரம் அமுக்கிப் பிடித்து மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் சாகவிடக்கூடாது.

    மோடி அரசு இதை விரைவில் அறிவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. கில்லர்ஜி சொல்லி இருக்கும் தண்டனை! :)

    இங்கே உரிமை என்பது கேலிக்குரியதாகிவிட்டது. என் உரிமை - நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பது தான் பலரின் எண்ணம்..... சிகரெட் பிடிப்பது என் உரிமை - அது உனக்குப் பிடிக்கவில்லையெனில் விலகிச் செல் என்பது தான் அவர்களது எண்ணமாக இருக்கிறது.....

    முன்பெல்லாம் நிறைய அலுவலகங்களின் உள்ளேயே புகை பிடிப்பார்கள் - அன்புமணி ராமதாஸ் செய்த ஒரு நல்ல விஷயம் இதை ஒழித்தது.

    பதிலளிநீக்கு



  5. புதன் என்றால் புதிர் என்று நினைத்து இந்த பகுதிக்கு வராமல் இருந்தேன் இன்று தற்செயலாக வம்பு என்ற தலைப்பை பார்த்ததும் அது நமக்கு பிடித்தது என்றதால் இங்கு இன்று ஆஜர் , கதை கவிதை புதிர் என்றால் கொஞ்சம் அலர்ஜி....... ஆனால் நட்பின் கதைகளை மட்டும் நேரம் இருந்தால் படிப்பேன் அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  6. அதிசயமாக காலையிலேயே புதிர் பகுதி வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. பொது இடத்தில் செய்யும் எந்த செயலும் மற்றவர்களை பாதிக்கிறது என்றால் அது தவறான செயல்தான்.

    புகைப்பிடித்தல்: புகைப்பிடிப்பதால் புகைப்பிடிப்பவரை மட்டும்ம் பாதிக்காமல் அருகில் உள்ளவரையும் பாதிக்கிறது...According to the U.S. Surgeon General, living with a smoker increases a nonsmoker's chances of developing lung cancer by 20% to 30%. Exposure to secondhand smoke can also cause coronary heart disease and have negative effects on your blood and blood vessels, increasing your risk of a heart attack. இந்த காரணங்களால் புகைபிடித்தல் என்பது மிகவும் தவறானது..


    எனது தந்தை மிகப் பெரிய ஜெயின் சுமோக்கர். அவர் கையில் ஒன்று சிகரெட் இருக்கும் அல்லது டீ கப் இருக்கும் அப்படி இல்லையென்றால் அவர் தூங்கி கொண்டிருப்பார். கடந்த வருடம் முதல் அவர் சிகெர்ட்டும் குடிப்பதில்லை டீயும் குடிப்பதில்லை...ஆனால் நிரந்தரமாக தூங்கி கொண்டிருக்கிறார்.


    மது அருந்துதல் : இதை பொது இடத்தில் குடித்தால் தவறுதான். அதுமட்டுமல்லாமல் அளவிற்கும் அதிகமாக குடித்தாலும் தவறுதான் அது உடம்பை பாதிப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தையும் சிரழித்துவிடும் நல்ல நட்புகளையும் இழக்க வைத்துவிடும்...குடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது அப்படியே குடித்தாலும் அளவோடு குடிப்பது நல்லது, இதை நான் சொல்லவில்லை மேலை நாட்டில் உள்ள மெடிக்கல் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

    எனக்கு குடிக்கும் பழக்கம் இருந்தாலும் மேலே சொன்ன இரண்டும் என் வாழ்வில் இது வரை ஏற்பட்டது இல்லை.

    எனக்கு குடிப்பழக்கம் உண்டு ,கல்லூரி படிப்பு படித்து முடித்து சென்னைக்கு வரும் வரை எந்தவொரு கெட்டப்பழக்கமும் என்னிடம் கிடையாது. நான் சென்னை வந்த பின் அங்குள்ள நண்பர்களால் அந்த பழக்கம் எனக்கு ஏற்ப்பட்டது.. அந்த நண்பர்கள் என் வயது ஒத்தவர்கள் அல்ல அவர்களில் சிலர் என் தகப்பானரின் வயதிற்குரியவர்கள் மற்றும் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் ஒருத்தர் கோத்தாரி என்ற எக்ஸ்போர்ட் கம்பெனியில் மிக உயர்ந்த பதவியில் உள்ளவர் ஒருத்தர் சென்னை நீயூக்காலேஜில் ஆங்கில டிபார்ட்மெண்டில் ஹெட் ஆப் தி டிபார்ட்மென்ட் ஆக பணிபுரிந்தவர் இன்னொருவர் டிராவல் துறையில் டீச்சிங்க் மற்றும் எக்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தியவர். ஒன்னொருவர் நான் படித்த மற்றும் அதே நிறுவனத்தில் நம்பர் 2 இடத்தில் இருந்தவர் மற்றும் சில எஞ்சினியர்ஸ் & வருமான வரித்துறை அதிகாரி இவர் என்னொட ரூம் மேட். அங்கு இருந்த போது தினம் தினம் அனைவரும் குடிக்கும் வழக்கம் உண்டு. ஒன்று பாரில் அல்லது நண்பர்களின் இல்லத்தில்தான் ஆனால் எங்கள் குருப்பில் யாரும் இந்த காலத்தில் உள்லது குடித்துவிட்டு ரோட்டில் விழ்ந்து கிடப்பது உளறுவது சண்டை பொடுவது எல்லாம் கிடையாது...

    நல்ல வேளை நான் அமெரிக்க வந்த பின் பல ஆண்டுகள் அந்த பழக்கம் அறவே இல்லாமல் இருந்தது அதன்பின் மீண்டும் ஏற்பட்டது ஆனால் சென்னையில் குடித்தது போல தினம் தினம் குடிக்கும் பழக்கம் இல்லை எப்போதாவது உண்டு. 2017 மொத்தம் 4 முறைதான் குடித்து இருக்கிறேன். இப்ப எல்லாம் நான் ரொம்ப நல்லவனாக்கும் ....ஹீஹீ....

    பதிலளிநீக்கு

  8. என்னடா கருத்து கேட்டால் பதிவாக எழுதிவிட்டு செல்கிறானே என்று திட்டாதிங்க

    பதிலளிநீக்கு
  9. @நெல்லைத் தமிழன் .

    ///அதிசயமாக காலையிலேயே புதிர் பகுதி வந்துவிட்டது.///

    என்னது இது புதிர் பகுதியா......அது தெரியாமல் நான் ஏதோ உளறி சென்றுவிட்டேனே

    இதுக்குதான் நான் இங்கே திங்கள் கிழமை மட்டும் ஆஜர் ஆவது ஹும்ம்


    மன்னிச்சு மன்னிச்சு

    பதிலளிநீக்கு
  10. எவ்வித குணக்கேடுகளும் இல்லாமல் தான் குழந்தை மண்ணில் பிறக்கின்றது..

    வளர்ந்து வரும் நாட்களில் நல்ல விஷயங்களை விட
    தீய குணங்களை ஈர்த்துக் கொள்வதில் வேகம் அதிகமாகின்றது..

    வேண்டாதவற்றிலேயே விருப்பமாகி விடுகின்றது...
    கடைசியில் ஆப்பு அசைத்த குரங்கின் நிலை!...

    அன்பின் வெங்கட் அவர்கள் சொல்வதைப் போல -

    புகை பிடிப்பது என் உரிமை - அது உனக்குப் பிடிக்கவில்லையெனில் விலகிச் செல் என்பது தான் அவர்களது எண்ணமாக இருக்கிறது...

    நமக்கெதற்கு பிறரைத் திருத்தும் வேலை?..

    பதிலளிநீக்கு
  11. அதிரா ஏஞ்சல் ஸ்ரீராம் நீங்கள் எல்லாம் குடிப்பது இல்லை என்று பொய் சொல்லகூடாது நீங்கள் எல்லோரும் குடித்து இருக்கிறீர்கள் ஆனால் என்ன அளவுதான் மிக குறைவு... அப்படி எல்லாம் இல்லை இல்லை என்று சொல்லுபவர்கள் நீங்கள் குடிக்கும் cough syrupலும் ஆல்கஹால் இருக்கிறது.. இப்ப சொல்லுங்க நீங்களும் குடிகாரர்கள்தானே ஹீஹீ....

    கிழே கண்ட cough syrup ல் இந்த அளவு ஆல்கஹால் சேர்க்கிறார்களாம்.

    இப்ப சொல்லுங்க... நீங்க cough க்காக மருந்து குடிக்கிறீங்களா இல்லை சரக்கு அடிப்பதற்காக cough syrup குடிக்கிறீங்களா


    Actol Expectorant 12.5%
    Alamine 5.0%
    Alomine C 5.0%
    Alomine Expectorant 7.5%
    Ambenyl-D 9.5%
    Anti-Tuss DM
    Expectorant 1.4%
    Benedryl 14.0%
    Benedryl Decongestant 5.0%
    Benylin 5.0%
    Benylin DM 5.0%
    Black Draught 5.0%
    Breacol 10.0%
    Cerose CM 2.5%
    Cetro-Cerose 1.5%
    Cheracol 3.0%
    Cheracol D 5.0%
    Chlortimeton
    Expectoran 4.7%
    Codimal DM 4.0%
    Coltrex 4.5%
    Coltrex Expectorant 4.7%
    Contact Severe Cold 25.0%
    Contrex 20.0%
    Consotuss 10.0%
    Coryban-D 7.5%
    Cotylenol 7.5
    Cosanyl DM 6.0%
    Cotussis 20.0%
    Creamcote #1-#4 10.0%
    Daycare 10.0%
    Demazin 8.5%
    Dimacol 4.75%
    Dimetap 2.3%
    Dimatane Decongestant 2.3%
    Dr. Drake’s 2.3%
    Dristan Cough 12.0%
    Dristan Ultra 25.0%
    Endotussin NN 4.0%
    Formula 44 Cough 10.0%
    Formula 44 D 20.0%
    2/G 3.5%
    2/G DM 5.0%
    GG Tussin 3.5%
    G Tussin DM 1.4%
    Halls 22.0%
    Head & Chest 5.0%
    Mercodol w/ Decaprin 5.0%
    Naldecon Dx 5.0%
    Night Relief 25.0%
    NN Cough Syrup 5.0%
    Nortussin 3.5%
    Novahistine Cough 3.5%
    Novahistine Cough & Cold 5.0%
    Novahistine DM 5.0%
    Novahistine DMX 10.0%
    Novahistine Expectorant 7.5%
    Novafed 7.5%
    Novafed A 5.0%
    Nyquil 10.0%
    Pediquil 5.0%
    Pertussin 8.5%
    Pinex 3.0%
    Quelidrine 2.0%
    Quiet Nite 25.0%
    Robitussin 3.5%
    Robitussin AC 3.5%
    Robitussin CF 1.4%
    Robitussin DAC 1.4%
    Robitussin DM 1.4%
    Robitussin PE 1.4%
    Romilar III 20.0%
    Romilar CF 20.0%
    Sudafed Cough Syrup 2.4%
    Terpin Hydrate DM 40.0%
    Tolu-Sed 10.0%
    Tolu-Sed DM 10.0%
    Tonecol 7.0%
    Triminic Expectorant 5.0%
    Trind DM 5.0%
    Vicks Cough 5.0%
    Viromed Liquid 16.6%
    Wal-Act 5.0%
    Wal-Phed .01%

    பதிலளிநீக்கு
  12. பு பு இப்போது பு வ ஆகிவிட்டதே!!! மிக்க நன்றி கௌதம் அண்ணா!!

    இரு பழக்கமுமே நல்லதல்லதான். இரண்டையுமே பொது இடங்களில் செய்து பிறரைத் துன்பப்படுத்தாமல் நாலு சுவற்றுக்குள் முடித்துக் கொண்டால் அது அவர்கள் பாடு. கேட்க முடியாது ஆனால் பொது இடத்தில் நாறினால் கேட்கலாம் கேட்க வேண்டும் அதற்கு அரசு ஆணை வேண்டும். சுப்ரீம் கோர்ட் இடையில் பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்று கொண்டுவந்த நினைவு. ஆனால் இப்போதும் புகையைப் பார்த்தால் அப்படி ஒரு சட்டம் வந்தடா என்று குழம்ப வைக்கிறது. இப்பொது கேரளத்தில் பொது இடத்தில் புகை பிடிப்பதில்லை.....

    இப்போதெல்லாம் பெண்களும் குடி, புகை என்று செய்கிறார்கள். சர்வ சாதாரணமாக. ஆனால் ஒன்று தெரிகிறது. இந்த இரண்டையுமே ஏற்பது கடினம் தான் என்றாலும் கூட குடிப்பவர்கள் அதாவது எப்பொதாவது சோசியல் ட்ரிங்க் என்று சின்ன அளவாகக் குடிப்பவர்களும் சரி யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் புகைப் பிடிப்பவர்களும் சரி அவர்களில் மிக மிக நல்லவர்கள் இருக்கிறார்கள். எந்தப் பழக்கமுமே இல்லாதவர்கள் மிக மிக மோசமான பிஹேவியர், சர்காஸ்டிக் பேச்சுகள், கோபம் அடித்தல் என்ற கொடுமைக்கார ஆண்கள் இருப்பதையும் பார்ப்பதால் ச்சே அவன் குடிச்சாலும் குணம் என்னமா இருக்குனு சொல்லிடத் தோன்றிவிடுகிறது...

    என் கஸின் முன்பு குடிக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அவனை நான் கண்டிப்பேன். அவன் சொல்லுவான் என்னிடம், "ஓகே டி கீதை நீ காபி குடிக்கற பழக்கத்தை விடு நான் விடறேன் என்று சவால் விடுவான்..என் காஃபி வீக்னெஸ் அவனுக்குத் தெரியுமே...இப்போதெல்லாம் காஃபி அடிக்கடிக் குடிப்பதில்லைதான். அவன் சொல்லுவான் பலருக்கும் காஃபி அடிக்ட்கஷன் உண்டு...காலையில் எழுந்ததும் காஃபி இல்லை என்றால் அவர்களுக்கு என்னவோ ஆகுமே ....ஆனால் நான் குடிக்கு அடிக்ட் கிடையாது...அது இல்லை என்றால் எனக்கு உடம்பு நடுக்கமோ இல்லையே...ஜஸ்ட் ஃபார் ஃபன் தான் குடி..டிரிங்க்ஸ் போதை என்றால் காஃபியும் போதைதான் ..என்று சொல்லி மடக்கிவிடுவான்...

    இருந்தாலும் நான் அவனிடம் முன்பு சொல்லுவது கமல் டயலாக் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் மோசம்னு சொல்லல ஆனா இல்லாம இருந்தா நல்லாருக்குமேனுதான்..டா..

    கீதா

    பதிலளிநீக்கு
  13. புதன்கிழமைக் காலையில் புகையைக் கிளப்பிவிட்டு, காரச்சட்டினி, மிளகாய்பொடி சகிதம் இட்லி/தோசையை அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள். அல்லது ரெண்டாவது ரவுண்டு காஃபிக்காக அப்ளிகேஷன் போட்டு கிட்ச்சனைப் பார்த்திருக்கிறீர்கள்!

    சீண்டுவதற்கு சரியான சப்ஜெக்ட்தான். எழுத ஆரம்பித்தால் பின்னூட்டத்தில் ஊட்டம் அதிகமாகி நீ..ண்..டுவிடும்.

    பதிலளிநீக்கு
  14. @மதுரைத்தமிழன் - உங்கள் கருத்துக்களைப் பார்த்தேன். புகை பிடிப்பது, மது, பாக்கு போடுவது, காபி டீ குடிப்பது எல்லாமே கெட்ட வழக்கங்கள்தான். இதுல புகை பிடிப்பவர்கள் மற்ற அப்பாவிகள் உடல் நலத்தையும் கெடுக்கும் கெட்ட எண்ணம் கொண்டிருப்பதால், புகை மட்டுமல்ல, புகை பிடிப்பவர்களும் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவர்கள் என்பது என் எண்ணம்.

    பொதுவா என் அனுபவப்படி, கெட்ட பழக்கம் உடையவர்கள், அனேகமாக அடுத்தவர்களையும் அந்தச் சகதியில் மற்றவர்களையும் இழுத்துவிடுவார்கள். இது அவர்களது குற்ற உணர்ச்சியைக் குறைப்பதற்காக (அதாவது தன் கூட்டத்தில் கூடுதல் பலம், நல்ல செயல் உடையவர்கள் கூட்டத்தின் எண்ணிக்கையைக் குறைப்பது). அதனால மது சமுதாயத்துக்குக் கெடுதல் என்று சிகரெட் வியாபாரிகள் சொன்னால் அது வெளிவேஷம்தான்.

    மற்றபடி மருத்துவர்கள் அறிவுரையின் பேரில், உடல் நலத்துக்காக மருந்தாக எடுத்துக்கொள்வது இதில் சேராது.

    பதிலளிநீக்கு
  15. மதுரை....ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!! இம்மாம் பெரிய பட்டியல்...ஆம் இப்படித்தான் என் கஸினும் என்னுடன் விவாதம் செய்வான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஏகாந்தன் சகோ ஹா ஹா ஹா உங்கள் கமென்ட் ரசித்தேன்.....நேற்றைய கமென்டையும் ரசித்தேன்...அங்கு சொல்ல நினைத்து விட்டுப் போனது...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நெல்லை ஆம் காபி குடிப்பதும் கூடக் கெட்டப் பழக்கம் தான் அதுவும் சிலர் அடிக்ட் ஆகிவிடுகிறார்கள். நான் முன்பு எல்லாம் கொஞ்சம் அதிகமாகத்தான் சாப்பிட்டுவந்தேன்...பாலில்லாமல் ப்ளாக் காஃபி என்று. வீட்டில் பால் விட்டுத் தர மாட்டார்கள். இரு நேரம் மட்டுமே பாலுடன் அதுவும் சின்ன டம்ளரில். அப்புறம் ப்ளாக் காஃபி பழக்கம் இருந்தது. இப்போதெல்லாம் 250 மில்லியை கொஞ்சம் கொஞ்சமாக மாலை வரை...

    அதையும் குறைக்க முயற்சி செய்கிறேன்...முடியலை ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கில்லர்ஜி உங்க பனிஷ்மென்ட் நல்லாத்தான் இருக்கு...ஆனா அப்படி நடக்க மாட்டேங்குதே. இதென்ன நீங்க இருந்த ஊரா என்ன...? அங்கதான் சட்டம் வந்துருச்சுனா கடுமையா இருக்கும்...இங்கல்லாம் அப்படி இல்லையே..

    கீதா

    பதிலளிநீக்கு
  19. @ கீதா:

    //…அதையும் குறைக்க முயற்சி செய்கிறேன்...முடியலை..//

    காபி ஒன்னும் விஷமில்லை..பயந்து நடுங்குவதற்கு! நான் க்யூபாவில் இருந்திருக்கிறேன்.காபி மட்டுமா அதிகம் குடிக்கிறார்கள்..தினம் ரம் குடிக்காமல் வாழமுடியாத அப்பாவி ஜனங்கள் அங்கே! சர்க்காரின் ரேஷனில் ரம் உண்டு!(க்யூபா பற்றி ‘சொல்வனத்தில் நான் எழுதிய ‘க்யூபா-ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்’ என்கிற கட்டுரையை இங்கே வாசிக்கவும்: http://solvanam.com/?p=47535) ப்ரஸீலியன்கள் நாளுக்கு சராசரியாக 20-25 கப்புகளை உள்ளே தள்ளுகிறார்கள் – சின்ன கப்தான். ஆனால் கருப்புக்காபி! இவர்கள் யாரும் இந்தப் பழக்கங்களினால், ஆரோக்கியக் குறைவினால் அவதிப்பட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவதில்லை. நம்மைவிட சந்தோஷமான மனிதர்களே!)

    எல்லாவற்றையுமே addiction என்றால் மனுஷன் வாயில் விரலைப்போட்டுக்கொண்டு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டா சதா சர்வகாலமும் உட்கார்ந்திருக்கமுடியும்? மனுஷன் மனுஷனா இருக்கவேண்டாமா இந்த உலகில்? ஆதலால் பிடித்திருந்தால், பயப்படாமல், குற்ற உணர்வு இல்லாமல் சந்தோஷமாக் காபி குடிங்கோ. (சிலருக்கு இன்னோருத்தர் எதையாவது enjoy பண்ணினால் பிடிக்காது! அவர்கள் ஜாதகம் அப்படி..)

    காபியை இரண்டுவேளை என்று நிறுத்திக்கொள்பவன் நானில்லை. எப்போது வேண்டுமோ அப்போது ஒரு சின்ன கப்! Simple. Yes, sometimes black coffee, especially in Delhi’s winter nights (now enjoying Delhi..). – குறிப்பாக ஏதாவது படிக்கையில், எழுதுகையில், க்ரிக்கெட் பார்க்கையில்! சிலபேர் சொல்வார்கள்..ராத்திரி வேளையிலே காபி சாப்பிடாதே.. தூக்கம் வராது! அதெல்லாம் சராசரிகளுக்கு. நான் என்று சராசரியாக இருந்திருக்கிறேன்!. All laws go for a twist and turn in my territory. That’s the way I live..

    பார்த்தீர்களா..நீண்டுவிட்டது பின்னூட்டம். இதனால்தான் உள்ளே நுழைய தயங்கினேன்!

    பதிலளிநீக்கு
  20. இந்த டாபிக் பற்றி நிறைய எழுதலாம் :)
    யாரது இங்கே இருமல் மருந்து ப்ரிஸ்க்ரைப் பண்ணிட்டிருக்கார் :) சர்ச் போயிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  21. ஆ!! ஏகாந்தன் சகோ!!! ஹைஃபைவ்!!! தாங்க்ஸ் தாங்க்ஸ் அ லாட்!! நிறைஅ எனக்கு அட்வைஸ் வருமா அப்போ...எனக்குச் சின்னதா இப்படித் தோணும். பட் you know சகோ ஐ எஞ்ஜாய் இட். அதுவும் இப்ப இங்க சென்னைல அதிசயமா மழை பெஞ்சுதே அப்ப அதை ரசித்துக் கொண்டு கையில் காஃபியுடன்..சுகமாய் ரசித்தேன்...

    ப்ரெசிலியன் பற்றி அறிந்திருக்கேன்....அமெரிக்கர்கள் கூட ப்ளாக் காஃபி அதுவும் அவங்க எல்லாம் கப் இல்ல mug தான்!!...க்யூபா பற்றி உங்கள் கட்டுரையை வாசிக்கிறேன்...

    ஹையோ மகிழ்ச்கியா இருக்கு...நான் எது சாப்ட்டாலும் கொஞ்சமா ரொம்ப எஞ்சாய் செய்து சாப்பிடுவேன்...உடலே இனிப்பா இருந்தாலும் கூட எனக்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும் அதனால் கொஞ்சமாவேனும் ரசித்து ருசிப்பேன்...

    தாங்க்யூ தாங்க்யூ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. சிகரெட் புகைப்பிடித்தல் மது அருந்துதல் இரண்டுமே பழக்கங்கள் தான் எதுவுமே அளவுக்கு மீறினால் கேடுதான் என் மாமனார் பீடி புகைப்பார் மது அருந்துவார் அவர் 88 வயது வரை எந்த நோயுமில்லாமலேயே இருந்தார் அவரதுமரணம்கூட எந்தநோயாலுமல்ல எதையும் ஜெனரலைஸ் செய்யக் கூடாது நோ ஸ்மோகிங் டே என்று கூட ஏதோ ஒரு நாள் அனுஷ்டிக்கப்படுகிறதாமே புகைப்பிடிப்பவர்கள் கையில் காசு நிற்காதாமே

    பதிலளிநீக்கு
  23. இப்படியான தலைப்புக்களில் விவாதிக்க , கதைகள் சொல்ல எனக்குப் பிடிக்கும், ஆனா இங்கு ஒரு பிரச்சனை, நாம் வந்து பார்த்து ஒரு 10.15 மணி நேரத்துள் அடுத்த தலைப்பு வந்துவிடும்.... பேச்சு மாறிவிடும்.. இது உள்ளே போய் விடும்.. அதனால அதிகம் எனர்ஜி யை வேஸ்ட் பண்ண விரும்புவதில்லை பல நேரங்களில்...

    இன்று ட்றுத்துக்குப் பிடிச்ச தலைப்புப்போல அதனாலயே இந்த அட்டகாசம்...

    ஹா ஹா ஹா பெனிலின் ஸ்றப்.. எங்கள் வீட்டில் இருக்கும் பெரும்பாலும்:)).

    Avargal Unmaigal said...
    ///இப்ப எல்லாம் நான் ரொம்ப நல்லவனாக்கும் ....ஹீஹீ....///

    ஹா ஹா ஹா இவ்ளோ காலமும் நான் கெட்டவர் என ட்றுத் சொல்லித்திரியும்போது.. இவரை நம்பலாம் என நினைச்சேன்:).. ஆனா இப்போ நல்லவர்ர்ர் எனச் சொல்லிட்டீங்க பாருங்கோ.. நம்பிக்கை போச்ச்ச்ச்:))

    பதிலளிநீக்கு
  24. இந்த மதுப்பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவோர்ர் ஒன்று வறிய சூழலிலும் கடினமாக கஸ்டப்பட்டு வேலையும் செய்வோர்ர் அதிகம் மதுவுக்கு அடிமையாகி அழிகின்றனர்...

    அடுத்தது , மிக உச்சியில் இருக்கும் நடிகர்கள், சிங்கேர்ஸ் இப்படியானோ.. அதி விலை உயர்ந்ததை ருசி பார்க்க வெளிக்கிட்டும் கெட்டுப் போகின்றனர்.. நடுவில் இருப்போர் இதற்கு அடிமையாவது மிகக் குறைவே..

    பல விசயங்கள் எழுத வருகிறது, ஆனா இப்போ நேரமில்லை, பின்பு வந்து எழுதிப் பிரியோசனமும் இல்லை அதனால அதிரா கோயிங்:))... கீதாஆஆஆஆஆஆஆஅ.. கீதாஆஆஆஆஆஆஅ உங்க வீட்டில கோழிக்குஞ்சு பொரிச்சிருக்காமே சத்து நில்லுங்கோ வாறேன்ன்..

    பதிலளிநீக்கு
  25. கீதாக்காவுக்கு என்ன ஆச்சு? எங்கேயாவது போயிருக்கிறாவோ சொல்லாமல் கொள்ளாமல்..:)

    பதிலளிநீக்கு
  26. Passive smoking is equally bad for health.
    Want to write more but some problem is there in my computer....

    பதிலளிநீக்கு
  27. //அதிரா ஏஞ்சல் ஸ்ரீராம் நீங்கள் எல்லாம் குடிப்பது இல்லை என்று பொய் சொல்லகூடாது நீங்கள் எல்லோரும் குடித்து இருக்கிறீர்கள் //

    ஸ்ஸ்ஸ்ஸ் :) யாரது மூணு அப்பாவிங்களை வம்புக்கு இழுக்கறது :)
    நாங்க பில்டர் காபி சுலைமானி டீ H 2 O / two atoms of hydrogen and one atom of oxygen/ அப்புறம் வல்லாரை ஜூஸ் ,கொத்தமல்லி ஜூஸ் எல்லா ஜூசும் குடிச்சிருக்கோம் ..
    உற்சாக பானம் சோமபானம் சுறா பானம் என் லிஸ்டில் இல்லை :)

    ஹாஹாஹா நானா இருமல் மருந்தே சாப்பிடறது இல்லியே இல்லியே இல்லில்லையே இஞ்சை தட்டி தேனில் போட்டு குடிச்சா போதுமே :)

    பதிலளிநீக்கு
  28. புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை யாருமே செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து//

    கௌதமன் சார் ..உங்களுடன் முற்றும் முழுதும் அக்ரீ செய்கின்றேன் ..
    யாரவது சிகரெட் பிடிச்சிட்டு போனா அடுத்த செகண்ட் என் லங்ஸ் உள்ளே அந்த புகை பரவியது மாதிரி இருக்கும் ,,
    டுபாக்கோ ஸ்மெல் மனுஷரை மட்டும் பாதிக்கலை அவங்க பிள்ளைகள் மற்றும் வளர்க்கிற PETS கூட பாதிக்கப்படுதுங்கலாம் ..
    யாரோ ஒருவர் செய்யும் பாவம் தப்பே செய்யாத அப்பாவிகளை பாதிக்குதே :(

    கில்லர்ஜியின் ஐடியா சூப்பர் :) அப்படி செஞ்சாதான் உருப்படுவாங்க :)
    ஒரு பெரிய அண்டா நிறைய பாயசம் இருக்கு அதில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பாயாசத்தின் இனிப்போ சுவையோ விஷத்தின் தன்மையை மாற்றப்போவதில்லையே ??
    விஷம் விஷம்தான் அது ஒரு பெக்கா இருந்தா என்னா இல்லை அதுக்குமேல போனாலென்ன தீமை தீமையே .

    பதிலளிநீக்கு
  29. அதிரா நானும் கீதாக்காவுக்கு மெஸேஜ் கொடுத்துக் கேட்டுள்ளேன்...

    ஏஞ்சல் மீ டூ இருமல் மருந்து சாப்பிடுவது இல்லை...இம்முறை கூட ஒரு மாதம் வரை நீட்த்தது ஆனால் நான் இயற்கை மருந்துதான் எடுத்துக் கொண்டேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  30. கலிகாலத்தில் அறிவுரையை யாரும் கேட்பதில்லை. ஆளாளுக்கு அவர்களே பெரிய ஆள் என்று நினைத்து கொள்கிறார்கள். அறிவுரை கூறுபவரை அடிக்காத குறைதான். இதெல்லாம் அவர்களாக திருத்தி கொண்டால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  31. இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் எல்லாமில்லை அதோ ஒரு விதத்தில் இதற்க்கு அடிமையாக்கிவிட்டு இருக்க வேண்டும்உடல் நிலையை பாதிக்கும் அளவுக்கு இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு நல்லது ஆனால் இதை பொது இடத்தில் செய்யாமல் இருப்பது நல்லது கண்டிக்கத்தக்கதும் கூட ஏனென்றால் இது பலருக்கு ஒவ்வாமையாக இருக்கலாம் குழந்தைகளுக்கு இருமல்களை கொண்டு வரலாம் நாட்டில் டிராஃபிக்கினால் வரும் புகைகள் போதாதா இதுவேறு எதற்கு enra நல்லெண்ணத்தை கொண்டு வந்தால் நல்லதுதான்

    பதிலளிநீக்கு
  32. கில்லர் ஜி --உங்கள் ஆலோசனையை அந்நியன் படத்தில் வருமே தண்டனைகள் அது போல் இருக்கு :-)))
    கீதா சிஸ்--- உங்க கருத்தை நானும் வழி மொழிகிறேன் சரிதான் காபியும் போதைதான்
    அவர்கள் உண்மைகள்--- என்று பெயரை வைத்ததனாலேயே உண்மை உண்மை உண்மை தவிர வேறில்லை என்பது போல் எழுதி தள்ளிவிட்டார் .

    பதிலளிநீக்கு
  33. புகைப்பிடித்தல் பிடிப்பவர்களை விட அக்கம் , பக்கம் , குடும்பத்தினரை பாதிக்கும்.
    பழைய சினிமாவில் சிவாஜி அவர்கள் கையில் சிகரெட், சுருட்டு போன்றவை இருக்கும்.
    பெரிய மனிதர் என்றால் பைப் புகைந்து கொண்டு இருக்க வேண்டும்.
    இப்போது சினிமாவில் க்தாநாயகன் நண்பர்களுடன் சேர்ந்து மது, பீர் குடிப்பது போல் காட்டப்படுகிறது, புகை மது உடல் நலகேடு என்று மட்டும் சொல்லப்படுகிறது.

    படங்களில் தடை செய்தால் நல்லது.

    பாலசுப்பிரமணியம் சார் சொல்வது போல் பீடி, மது அருந்தியும் உடல் நலத்தோடு இருந்தால் என்றால் அவர் உடல் வாகு அப்படி போலும்.

    சிலர் உடல் நலம், மன நலம் இழந்து தவிப்பதை பார்த்து , படித்து இருக்கிறோம்.
    சிவசங்கரியின் "ஒரு மனிதனின் கதை " மனதை வருந்த வைத்த கதை.

    பெண்களோ, ஆண்களோ வேண்டாம் இந்த பழக்கம்.






    பதிலளிநீக்கு
  34. புகை பிடித்ததால் உடல் நலம் கெட்டு உயிரிழந்தவர்கள் எங்க குடும்பத்தில் உண்டு. அகால மரணங்கள்! :) ஆனாலும் யார் கேட்கின்றனர்?

    என்னைத் தேடியவங்களுக்கு மிக்க நன்றி. உடம்பு சரியில்லை என்றாலும் சிறிது நேரம் கணினியில் உட்கார முடியும். :)

    பதிலளிநீக்கு
  35. தாமதமாகிவிட்டது வாசிப்பதற்கு. குடியும் புகையும் பொது இடங்களில் இல்லாத வரை நல்லது. கேரளத்தில் குடி என்பது ஒரு கலாச்சாரமாகவே இருக்கிறது. வீட்டுக் கல்யாணங்கள், நிகழ்வுகள், விசேஷங்கள், அல்லது ஒரு கெட்டுகெதர் என்றால் கண்டிப்பாக இருக்கும்...இக்கலாச்சாரத்திற்குப் பழகாதவர்கள் வெகு குறைவு. விரல் விட்டு எண்ணிவிடலாம். எங்கள் வீட்டிலும் இப்பழக்கம் உண்டு. எங்கள் குடும்பங்களில் எல்லாம் பெரியய்வர்கள் குழந்தைகள் முன்பே செய்வார்கள். அப்பாவும் மகனும், மாப்பிள்ளையும் சேர்ந்து அமர்ந்தே குடிப்பார்கள். நான் இளம் வயதில் கல்லூரிக் காலத்தில் இருந்தது. அதன் பின்னும் கொஞ்ச நாள் தான். சோசியல் டிர்ங்க் என்பது போல். ஆனால் தாறுமாறாக பிஹேவ் செய்வது போல் அல்ல. கொஞ்சமே கொஞ்சமாக. ஆனால் அப்புறம் ஆசிரியனாகும் எண்ணம் என் விருப்பம், நல்லதல்ல என்று அதை மாற்றிவிட்டது.

    பதிலளிநீக்கு
  36. புகை நமக்குப் பகை -- written in Cigarette packet.
    குடி குடியை‌‌க் கெடு‌க்கு‌ம், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும். !
    குடி நா‌ட்டு‌க்கு‌ம், ‌வீ‌ட்டு‌க்கு‌ம் கேடு !
    எ‌ன்பது போ‌ன்ற வாசக‌ங்க‌ள் மதுபான பா‌ட்டி‌ல்க‌ளிலேயே எழுத‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். ஆனா‌ல் அதை வா‌ங்‌கி‌க் குடி‌க்கு‌ம் குடிமக‌ன்க‌‌‌ள் யாரு‌ம் அதை‌ப் படி‌ப்பது‌ம்/படி‌த்து_நட‌ப்பது‌ம் இ‌ல்லை.
    குடி எ‌ன்பது மது‌ப்பழ‌க்க‌தையு‌ம், குடு‌ம்ப‌த்தையு‌ம் கு‌றி‌க்கு‌ம் சொ‌ல்லாகு‌ம். குடி‌த்தா‌ல் குடு‌ம்ப‌ம் கெடு‌ம் எ‌ன்பதுதா‌ன் குடி குடியை‌க் கெடு‌க்கு‌ம் எ‌ன்ற பழமொ‌ழி‌யி‌ன் பொரு‌ள். ஆனா‌ல் ந‌ம் குடிமக‌‌ன்களோ போதை‌யில இத படி‌ச்‌சி, அவ‌ங்க குடு‌ம்ப‌த்தால தா‌ன் அவ‌ங்க குடி‌க்‌கிறதே கெடுது‌ன்னு எழு‌தி‌யிரு‌க்‌கிறதா பு‌ரி‌ஞ்‌சி‌க்‌கிறா‌ங்களோ ?


    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!