வியாழன், 31 டிசம்பர், 2020

நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகுமென்று...

 

நண்பர்களுக்கு அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ன்றிரவு 2021 மலர்கிறது.  என்னென்ன மர்மங்களை, துயரங்களை தனக்கான நேரத்தில் வைத்திருக்கிறதோ?  எல்லா வருடங்களும் போல எதிர்பார்க்கப்பட்ட 2020 இன்றுடன் முடிகிறது.   வரலாற்றில் மறக்க முடியாத வருடங்களில் ஒன்றாக 2020 ம் நினைவு கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.  நாளை பிறக்கும் புத்தாண்டில் 2021 சந்தோஷங்களை தராவிட்டாலும், துன்பங்கள், துயரங்கள் இல்லாமல் இருக்கப் பிரார்த்தனைகள்.

செவ்வாய், 29 டிசம்பர், 2020

சிறுகதை :  மயக்கமா? கலக்கமா? - கீதா சாம்பசிவம் 

 "இப்போக் கொடுக்கப் போறியா இல்லையா? என்ன பிடிவாதம்?" 

வெள்ளி, 25 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : தேனில் செய்த தேகம் தாங்குமோ தென்றல் வந்து தீண்டினால்

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

==============================================================================================

 காமத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்?  காதலில் காமம் இருக்கும்.  காமத்தில் காதல் இருக்க வாய்ப்பில்லை.  வந்த வேகத்தில் மறையும் காமம்.  பிரிந்து நின்றாலும் மறையாது காதல்.  பலபேரிடம் வரும் காமம்.  ஒரே ஆளிடம் வரும் காதல்.  

வியாழன், 24 டிசம்பர், 2020

பெண்ணிடம் வம்பு செய்தால்...

 சமீபத்தில் தொலைக்காட்சியில் செய்திச்சேனலுக்கு ஓடிக்கொண்டிருந்தபோது ஏதோ ஒரு சேனலில் மாதவன் நடித்த ரன் படக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது.  தனது தங்கையைக் காதலிக்கும் மாதவனைக் கண்டுபிடித்து விடும் அதுல் குல்கர்னி மாதவன் வீட்டுக்குள் நுழைந்து குடும்பத்தினரை மிரட்டுவார்.  மாதவனுக்கு ஃபோனைப் போட்டால் அவரிடமிருந்து கவுண்ட்டர் அட்டாக் வரும். "எனக்கு மட்டும்தான் குடும்பமா?  உனக்கு குடும்பம் கிடையாதா?  நான் உன் பொண்ணு பக்கத்துலதான் இருக்கேன்" என்று மிரட்டும் குரலில் பேசுவார்.  ஆனால் அந்தக் குழந்தையிடம் மென்மையாகத்தான் நடந்து கொள்வார்.  கதாநாயகனாச்சே...! 

செவ்வாய், 22 டிசம்பர், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : புரியாத புதிர் - கீதா ரெங்கன் 

துரை அண்ணா எபி யில் கே வா போ கதைப் பகுதியில் எழுதியிருந்த அப்பனும் அம்மையும்  கதையை வாசித்ததும் பெண்ணின் கோணத்தில் மனதுள் எழுந்த கதை. துரை அண்ணாவின் அழகான கதை எனக்கு மற்றொரு கதை எழுதத் தூண்டியதற்கு அண்ணாவிற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து ஊக்கப்படுத்தி படைப்புகளை வெளியிடுவதற்கு எபி ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.

திங்கள், 21 டிசம்பர், 2020

வெள்ளி, 18 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : உன் எழில் மேவும் பனிமலர் பார்வையில் உலகம் நீலகிரி ஆகவே

 கிராமங்கள் நகரங்கள் என்று பிரித்து உணரக்கூடிய காலம் இருந்தது.  இப்போதும் ஓரளவு இருக்கலாம்.  அன்றைய கிராமத்துக்கும் நகரத்துக்கும் இருந்த வேறுபாடு மிகப் பெரிது.  இன்று இணையம் எனும் விஞ்ஞான நுட்பம் கிராமம் நகரம் என்கிற வேறுபாட்டையே இல்லாமல் செய்து விட்டது.

வியாழன், 17 டிசம்பர், 2020

கைரேகை ஜோசியம் பார்க்கலியோ... ஜோசியம்...

 சின்ன வயசில் (!) கையைப் பார்த்தோ, ஜாதகம் பார்த்தோ சில ஆரூடங்கள் சொல்வார்கள்.  இந்த மாதிரி விஷயங்கள் எனக்குத் தெரியும் என்று வீட்டுக்கு வருபவர்கள் யாராவது சொல்லி விட்டால் போதும்...   உதாரணமாக கைரேகை..   

உடனே வீட்டில் உள்ளவர்கள் கைகள் யாவும் அவர் முன் நீளும்! 

திங்கள், 14 டிசம்பர், 2020

திங்க'க்கிழமை : பொரிச்ச இட்லி

 அஞ்சு இட்லியை வச்சு அஞ்சுபேர் பசியாற முடியுமா?  முடிந்தது!

வெள்ளி, 11 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : காற்றோடு புல்லாங்குழல் -அது கண்ணே நீ சொல்லும் தமிழ்..

 எஸ்​ ஏ சந்திரசேகர் தயாரிப்பில் 1989 இல் வெளியான படம் ராஜநடை.  விஜயகாந்த், சீதா, கௌதமி, பேபி ஷாம்லி நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.​

வியாழன், 10 டிசம்பர், 2020

திங்கள், 7 டிசம்பர், 2020

'திங்க'க்கிழமை : சப்பாத்தி (ஏடாகூடமாக ) Stuffed

 நீண்ட நாட்களாய் கிடப்பில் இருந்த திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினேன்!  வீட்டில் அண்ணனும் அவர் மகனும் வந்திருக்க அன்று இதைச்செய்ய முடிவெடுத்தேன்.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : ராதை போல் ஆனேன் கிருஷ்ண தேவா

 இந்தப் பழி வாங்கும் கதை எல்லாம் இருக்கிறதல்லவா?  அது எப்போது ஆரம்பித்தது என்று பார்த்தால் ராமாயணம், மகாபாரதம் போன்ற நம் புராணங்களிலும் இருந்திருக்கிறது.  ரோம, கிரேக்க புராணங்களிலும் இருந்திருக்கிறது.

வியாழன், 3 டிசம்பர், 2020

கரப்பான் பூச்சியின் கடைசி நாட்கள்

 புதிய வீட்டுக்கு வந்ததில் கரப்பன் பூச்சிகள் கண்ணில் படாதது  சந்தோஷமாக இருந்தது.  அந்த சந்தோஷம் கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது!  ஓரிரு மாதங்களிலேயே ஒன்றிரண்டாக கண்ணில் பட ஆரம்பித்தது.  அதுவும் அங்கிருந்து (பிரிக்காமலேயே வைத்திருந்த) கொண்டு வந்த புததகப் பெட்டிகளை பிரித்ததும் அதிலிருந்து வெளிவந்து, அடிப்பதற்குள் (ஏஞ்சல் மன்னிப்பாராக) குடுகுடுவென்று ஓடி கிடைத்த இடுக்குகளில் மறைந்தன சில கரப்பான் பூச்சிகள்.

வெள்ளி, 27 நவம்பர், 2020

சுகங்களின் ஸ்வரங்களிலே ஸ்ருதி லயம் சேர்ந்திருக்க... 

 யாருக்கு யார் காவல்?  எனக்குத் தெரிந்து படத்தின் பெயர் இதுதான்.  ஆனால் அப்புறம் பெண்ணுக்கு யார் காவல் என்று மாற்றினார்கள் போலும்.

வியாழன், 26 நவம்பர், 2020

அன்புள்ள மான்விழியே..

எங்கள் அனுதாபங்கள்

மிகவும் சிரமப்படாமல் இறைவன் திருவடியை அடைந்திருக்கிறார் அரசு ஸார்..  காலை புயல் செய்தியைப் பார்க்க அதிகாலை எழுந்து தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து அக்காவிடம் இரண்டு மிளகு கடிக்கக் கேட்டிருக்கிறார்.  அப்புறம் வாயில் ஊதச்சொல்லி செயற்கை சுவாசத்துக்குக் கேட்டிருக்கிறார்.  அதற்குள் இறைவன் அவரை அழைத்துக் கொண்டு விட்டார்.

வெள்ளி, 20 நவம்பர், 2020

வெள்ளி வீடியோ : உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு

1976 ஆம் ஆண்டு வெளிவந்த படம்.  விஜயகுமார் -  ராஜ்கோகிலா நடித்த படம்.  இசை எம் எல் ஸ்ரீகாந்த்.  இந்த விவரங்கள் தவிர வேறு விவரங்கள் கிடைக்காத ஒரு படம் 'நினைப்பது நிறைவேறும்' 

வியாழன், 19 நவம்பர், 2020

பரிமாறினால் பசியாறுவேன்...

வெள்ளை சட்டைக்கும்  எனக்கும் எப்போதும் ராசியே இருக்காது.  

வெள்ளி, 13 நவம்பர், 2020

வெள்ளி வீடியோ : எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே

ரங்கராட்டினம்.  1971 இல் வெளிவந்த படம்.  சௌகார் ஜானகி தயாரித்து நடித்து தோல்வியடைந்த படம்.  படம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அப்போது சொன்னாராம் சௌகார்.  அஸ் யூஷுவல் நான் படம் பார்க்கவில்லை.

வியாழன், 12 நவம்பர், 2020

திங்கள், 9 நவம்பர், 2020

"திங்க"க்கிழமை :  அடைகுடைமிளகாய்!  (ஸ்டஃப்ட் கேப்ஸிகம்)

லாக்டவுன் காலங்களில் ஒருநாள் செய்த ஒரு பக்கப்பண்டம்!  அதுதாங்க ஸைட் டிஷ்!  

வெள்ளி, 6 நவம்பர், 2020

வெள்ளி வீடியோ : கனவினில் வந்தது கவிதைகள் தந்தது...

ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்த மரியான் திரைப்படத்திலிருந்து பானு அக்கா ஒரு பாடலை நேயர் விருப்பமாகக் கேட்டிருக்கிறார்.  ஏ ஆர்  ரெஹ்மான் இசையில், விஜய் பிரகாஷ்,  ஸ்வேதா மோகன்  பாடிய பாடல்.  எழுதி இருப்பவர்கள் கபிலனும் ரஹ்மானும்.

வியாழன், 5 நவம்பர், 2020

சரவணா ஸ்டோர்ஸில் சற்று நேரம்...

ஓடோனில், சோப் உள்ளிட்ட சில பொருட்கள்,  பெல்ட்,, தலையணை, சில உள்ளாடைகள், நாற்காலிகள், துணி காயப்போடும் ஸ்டான்ட், 

திங்கள், 2 நவம்பர், 2020

கடப்பா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


 கடப்பா 

ஜாக்கிரதையாக பெயரை படியுங்கள். கட்டப்பா இல்லை, கடப்பா! நான் கூட பெயரை கேள்விப்பட்டு ஏதோ ஆந்திரா சமாசாரம் என்று நினைத்தேன். ஆனால் கும்பகோணம் வெங்கடா  லாட்ஜ்  ஸ்பெஷலாமே? எனிவே செய்முறையை தெரிந்து கொள்வோமா?

வியாழன், 29 அக்டோபர், 2020

ஒத்தையா இரட்டையா?  இதுவா அதுவா?

"அதிகம்"

இன்னும் கொஞ்சம் சாதம்? என்றோ, இன்னொரு தோசை? என்றோ கேட்டால் வரும் வேகமான பதில் இதுதான்!  நானெல்லாம் 'போதும்' என்றோ, 'வேண்டாம்' என்றோதான் சொல்வேன்! 

திங்கள், 26 அக்டோபர், 2020

வெள்ளி, 23 அக்டோபர், 2020

வெள்ளி வீடியோ : நெற்றியிலும் திலகமிட்டான் மீராவின் கண்ணன் - உன் நெஞ்சினிலும் திலகமிட்டான் காதலிலே மன்னன்

படம் வெளியான ஆண்டு 1974.  சுஜாதா, ஜெய்கணேஷ், படாபட் ஜெயலக்ஷ்மி, ஆகியோருக்கு முதல் படம்.  திடீர் கன்னையா, ஸ்ரீப்ரியா ஆகியோருக்கு முதல் பேர் சொல்லும் படம்.

வியாழன், 22 அக்டோபர், 2020

மீனுக்கு வேர்க்குமோ?

பயங்கரமான அந்த வில்லனிடம் தோற்றுப் போன ஹீரோ தற்காலிகமாக வெளியிடத்தில் பதுங்கி இருக்கிறான்.

வெள்ளி, 16 அக்டோபர், 2020

துள்ளும் அலையென அலைந்தோம்... நெஞ்சில் கனவினைச் சுமந்தோம்

பானு அக்காவின் நேயர் விருப்பத்தில் 'சிட்டுக்குருவி' படத்தில் இடம்பெற்ற 'என் கண்மணி' பாடல்.  அப்போது வானொலியில் பரபரப்பாக அடிக்கடி ஒலிபரப்பப் பட்ட பாடல்.  இளையராஜா அப்போது பாடல்களில் சில புதுமைகளை புகுத்தி வந்தார்.  அதில் இதுவும் ஒன்று..

வியாழன், 15 அக்டோபர், 2020

வெள்ளி, 9 அக்டோபர், 2020

வெள்ளி வீடியோ : காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்

பாலச்சந்தரின் திரைக்கதை இயக்கத்தில், பிரபு, ரமேஷ் அரவிந், மீனாக்ஷி சேஷாத்திரி, பிரகாஷ்ராஜ்  நடிப்பில் 1994 இல் வெளியான படம் டூயட்.

வியாழன், 8 அக்டோபர், 2020

எட்டிப்பார்த்தது எங்கள் வீட்டையும் அந்தப் பொல்லாத கொரோனா..

 எட்டிப்பார்த்தது எங்கள் வீட்டையும் அந்தப் பொல்லாத கொரோனா..

வெள்ளி, 2 அக்டோபர், 2020

வெள்ளி வீடியோ : தீதிலா காதலா  ஊடலா  கூடலா  அவள் மீட்டும் பண்ணிலா

1977 இல் வெளியான இந்தப் படத்தில்தான் டெல்லி கணேஷ், சரத் பாபு, சிவச்சந்திரன் ஆகியோர் திரையுலகில் நுழைந்தனர்.  விசு எழுதி மேடையேற்றிய நாடகத்தை சுடச்சுட பாலச்சந்தர் வாங்கி, படமாக்கினார்.

வியாழன், 1 அக்டோபர், 2020

தங்கப் பெண்ணே தாராவே !


நாஞ்சில் மருமகள் - படித்ததில் ரசித்தது.

புதன், 30 செப்டம்பர், 2020

விதியை மதி வென்ற கதை

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்களே, அது நிஜமாகவே சாத்தியமா?

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா

வெளிவந்த வருடம் 1965.  இயக்கம் பி. மாதவன்.  திரைக்கதை : கே பாலச்சந்தர்.  கண்ணதாசன் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசை.

வியாழன், 24 செப்டம்பர், 2020

நான் மட்டும் என்ன சொன்னேன்?

இந்த வாரம் சொல்லவந்த விஷயத்தைச் சொல்வதாகச் சொல்லி இருந்தேன்.  

புதன், 23 செப்டம்பர், 2020

நல்ல மேலாளர் எப்படி இருக்க வேண்டும்?

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

16 September - எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாள். அவர் இசையரசி என்று போற்றப்பட்டதற்கு அவருடைய குரல் வளம் மட்டுமே காரணமா?

சனி, 19 செப்டம்பர், 2020

B + செய்திகள்

50 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

வெள்ளி வீடியோ : இனத்தால் அல்ல மனத்தால் மட்டும் வாழ்பவன் மனிதன் என்றாராம்...

டயோஜீன்ஸ் ​என்றொரு கிரேக்க தத்துவஞானி.  "ஒரு மேதை பகல்வேளை கையில் விளக்குடன் சென்றாராம் என்று பாடல் வரி கேட்டிருப்பீர்களே...   அந்த மேதை இவர்தான்.

வியாழன், 17 செப்டம்பர், 2020

துண்டு பீடி துலுக்காணம்

அரசுப்பணியில் இனைந்து சில வருடங்கள் ஆகி இருந்தன. 

புதன், 16 செப்டம்பர், 2020

கேள்வி - பதில்கள் - கேள்விகள்


நெலலைத்தமிழன் : 

தனக்குப் பிடித்தமாதிரி பதில் மற்றும் ஆலோசனை சொல்பவர்களை மட்டும்தான் நாம் விரும்புகிறோமோ? 

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

அன்னமா? வாத்தா ?

மாமா அந்த மேகத்தைப் பார்த்தால் அன்ன பட்சி மாதிரி இல்லை?

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

வெள்ளி வீடியோ : இளைய பாரதத்தினாய் வா வா வா எதிரிலா வலத்தினாய் வா வா வா

எம் எஸ் பாடல்களில் எனக்குப் பிடித்த இரண்டு பாடல்களை இங்கு பகிர்கிறேன்.

வியாழன், 10 செப்டம்பர், 2020

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத கவிஞன் 

இந்த நீண்ட லாக் டவுன் காலங்களில் முதல் சில நாட்கள் டிப்ரெஷனிலேயே கழிந்தன.  பின்னர் சில த்ரில்லர் வகையறா படங்கள் அவ்வப்போது அமேசான் ப்ரைமிலும் நெட்ப்ளிக்சிலும் சில படங்கள் பார்த்திருக்கிறேன்.  அப்புறம் படங்கள் பார்க்கவும் மூட் வரவில்லை!  

புதன், 9 செப்டம்பர், 2020

எங்கள் கேள்விகள்: ச வி பொ பி தே யார்?

நெல்லைத்தமிழன் : 


ஒரு காலத்தில் நம் கனவுக் கன்னியாக இருந்தவர்களை இப்போது பார்க்கும்போது, இவங்க மேலயா க்ரேஸாக இருந்தோம் என்று தோன்றுவதன், நம்மைப் பார்த்து நகைத்துக்கொள்வதன் காரணம் என்ன?


செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

மைசூர் செல்லும் வழியில் ..


மைசூர் செல்லும் வழியில் இரண்டு வேலைகள் 


சனி, 5 செப்டம்பர், 2020

ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம் !

இந்த வார பாசிடிவ் செய்திகள் எல்லாவற்றிற்கும் எங்கள் நன்றி: தினமலர் telegram குழு. 
====
புனே; ஆபத்தான கட்டத்தில் இருந்த நோயாளியை, ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று உயிர் காத்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

வெள்ளி வீடியோ : பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி

1961 இல் வெளிவந்த படம்.  பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த படம்.  நான் இன்னும் பார்க்காத படம்!  ஆனால் இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுக்கேட்டு ரசித்த படம்!

வியாழன், 3 செப்டம்பர், 2020

புதன், 2 செப்டம்பர், 2020

௨௫ ௦௮ ௨௦௨௦ அன்று தமன்னா கூறியது என்ன?

கீதா சாம்பசிவம் :

1. தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? '&' தொலைக்காட்சியே பார்ப்பதில்லை என்று சொன்ன நினைவு.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சனி, 29 ஆகஸ்ட், 2020

++ செய்திகள் ++ நன்றி : தினமலர்

இந்த வார பாசிடிவ் செய்திகள் அனைத்தும் தினமலர் - telegram  app  மூலம் காணப்பட்டு - இங்கே தொகுத்து அளித்திருக்கின்றேன். 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

வெள்ளி வீடியோ : கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

நடிகர்களையும் இசை அமைப்பளாரையும் கோவைத்தம்பிதான் பார்த்துப் பார்த்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

புதன், 26 ஆகஸ்ட், 2020

ஒவ்வொருநாளும் புதிதாய் பிறக்கின்றோம் என்பது உண்மையா ?


இதோ கேட்கப் போகிறேன் என்று போன வார புதன் பதிவில் சொல்லிய யாருமே கேள்வி கேட்கவில்லையே என்று திங்கட்கிழமை மதியம் வரை தேடித் தேடி இளைத்தேன். அதற்கப்புறம் ..  

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை : சாபம் 1/3 ----- ஜீவி


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
                                                                                             
                       

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கார்களே நில்லுங்கள், கண்களே பாருங்கள் !!


இப்படி ஒரு கார் கண்காட்சி நம் ஊரில் என்று நினைக்கும்போதே ஒரு தூசிப்படலம் நம் கண்ணில் .....

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

வெள்ளி வீடியோ : கடலுக்கு கூட ஈரமில்லையோ நியாயங்களை கேட்க யாருமில்லையோ

1982 இல் வெளியான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் அதன் இயக்குனர் ஆர் சுந்தராஜனுக்கு மட்டும் முதல் படமல்ல, கோவைத்தம்பி - அதாவது மதர்லேண்ட் பிக்சர்ஸுக்கும் அதுவே முதல் படம்.  ஆனாலும் அப்போது அவர் அதை மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்று அறிவிக்காமல் தயாரிப்பாளர்களாய் மூன்று பெயர்கள் சொன்னார்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

புதன், 19 ஆகஸ்ட், 2020

ஒரு நபரை முதன்முதலாக சந்திக்கும்போது நீங்கள் கவனிக்கும் முதல் விஷயம் எது ?


ஏஞ்சல் : 

1, நமக்கு கஷ்டத்தை வேதனைகளை கொடுத்தவங்களுக்கும் அன்பை தரணும் என்பது ப்ராக்டிகலா சரியா வருமா ?ஏதேனும் ஒரு கட்டத்தில் பழைய வலியின் வடுக்கள் வலிகளை நினைவுகூறாதா ?


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

வெள்ளி வீடியோ : காலைவேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன் பாடநூலில் தினம் செல்வி துணையென்று எழுதினேன்

A L ராகவன் மறைந்த நேரம், ஏகாந்தன் ஸார் நேயர் விருப்பமாக ஏதாவது ஒரு ஏ எல் ராகவன் பாடல் கேட்டிருந்தார்.  'பாப்பா பாப்பா கதை கேளு' முன்பே ஒரு முறை போட்டாச்சு.  'எங்கிருந்தாலும் வாழ்க' அனைவரும் கேட்டிருப்பார்கள்.  அதிகமாக கேட்காத பாடலாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டி 'சுமதி என் சுந்தரி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை அவரின் விருப்பமாக பகிர்கிறேன்.  பிடிக்கவில்லை என்றாலும் பொறுத்துக் கொள்ளுங்கள் ஏகாந்தன் ஸார்!

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

புதன், 12 ஆகஸ்ட், 2020

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை. சங்கிலி -- ஜீவி

  சங்கிலி   
                                                                         -                                   
                                                                       --  ஜீவி

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

நிறைய செய்முறைகள் என் பெண் பண்ணினா. அதையெல்லாம் படங்கள் எடுத்து வச்சிருக்கேன். அவள்ட இதை எ.பிக்கு அனுப்பப் போகிறேன் என்றேன். ஆனால் ஒன்றையும் இதுவரை எ.பிக்காக எழுதவே இல்லை. ஒவ்வொரு தடவையும், இதையே முதல் செய்முறையா எழுதிவிடுகிறேன் என்பேன்.  

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

வெள்ளி வீடியோ  :  மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தெனை அள்ளுமே

முதலில் நேயர் விருப்பம்.   எப்போதோ கேட்கப்பட்டிருந்த நேயர் விருப்பங்களை ஒவ்வொன்றாக முடித்து வருகிறேன்!

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

விசித்திரக்கனவும் வித்தியாச அனுபவமும்

ஒரு வித்தியாசமான, விசித்திரமான கனவு பற்றி என் மேலதிகாரி சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.

புதன், 5 ஆகஸ்ட், 2020

கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதில் என்ன தவறு?


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஒரு கலைஞனை நாம் வணங்கும் பொழுது அந்த தனி மனிதனை வணங்குவதில்லை, அவனுக்குள் இருக்கும் இறை சக்தியைத்தான் வணங்குகிறோம் என்பார்கள். அதன்படி பார்த்தால் சினிமா நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதில் என்ன தவறு?


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : மழையிலே ஒரு பூனை. ஏகாந்தன்



அன்பு ஸ்ரீராம் / கௌதமன் சார்,

இத்துடன்  ’எர்னஸ்ட் ஹெமிங்வே’யின்  ‘மழையிலே ஒரு பூனை’  சிறுகதையை, மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறேன். ஒரு சிறு ‘ஆசிரியர் அறிமுகமும்’ கூடவே.

படித்துப் பாருங்கள்.  சரியாக வந்திருக்கிறதென நம்புகிறேன்.

நன்றிகள் பல.

அன்புடன்,
ஏகாந்தன்

==================================


வெள்ளி, 31 ஜூலை, 2020

வெள்ளி வீடியோ : ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து...


​1970 இல் வெளிவந்த கல்யாண ஊர்வலம் படத்தின் நாயகன் நாகேஷ்.  பெயருக்கு கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய சோகமும் கலந்த படம். 

வியாழன், 30 ஜூலை, 2020

காயத்ரி அப்பா!

முன் பகுதி :

தூக்கக் கலக்கத்துடன் 'அவர்' நின்றிருந்தார்.  

புதன், 29 ஜூலை, 2020

வில்லன் to காமெடியன் - கவர்ந்தவர் யார்?


பானுமதி வெங்கடேஸ்வரன் : 


1) ஒருவரை ஒருவர் தாக்கி, கட்டிப்புரண்டு, ரத்தம் வழிய சண்டை போட்டதை நேரில் பார்த்திருக்கிறீர்களா?

செவ்வாய், 28 ஜூலை, 2020

திங்கள், 27 ஜூலை, 2020

"திங்க"க்கிழமை :  பலாப்பழ பணியாரம் - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி 

ரொம்ப நாளைக்கு அப்புறம் திங்கக் கிழமைக்கு செய்முறை அனுப்பறேன்.   இது நாங்கள் பெங்களூருக்கு நிரந்தரமாக வந்த பிறகு எழுதும் முதல் சமையல் குறிப்பு. அதனால் இனிப்புடன் ஆரம்பித்திருக்கிறேன்.

சனி, 25 ஜூலை, 2020

இருண்ட வானில் ஒளிக்கீற்று

1)  "பேக்கரி வேலையுடன், கார் மாற்றியமைக்கும் வேலையையும் செய்தேன். 2001-ல், டில்லியில் நடந்த தேசிய அளவிலான, வாகனத் தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்க, கேரளாவில் இருந்து டில்லி வரை, என் காரை நானே ஓட்டிச் சென்றேன்; எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இப்போது, 'டாடா நானோ' முதல், பி.எம்.டபிள்யூ., வரை எல்லா கார்களையும் மாற்றுத்திறனாளிகளுக்காக, 'ரீ-டிசைன்' செய்து கொடுக்கிறேன்; "

வெள்ளி, 24 ஜூலை, 2020

வெள்ளி வீடியோ : வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்

முதலில் ஒரு நேயர் விருப்பப் பாடல்.   பானு அக்கா சிட்சோர் படத்திலிருந்து ஏதாவது ஒரு பாடல் பகிர விருப்பம் சொல்லி இருந்தார்கள்.  

வியாழன், 23 ஜூலை, 2020

கதை போல ஒரு நிஜம்

முன்னர் சின்னவன் பிறந்த சமயம் நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவுக்கு அலைந்தபோது உதவியாய் இருந்த சில நல்லவர்கள் பற்றி எழுதி இருந்தேன்.  அப்போதே பெரியவன் விஷயத்தில் நடந்த ஆட்டோ அனுபவம் ஒன்றை எழுதுவதாய்ச் சொல்லி இருந்தேன்.  அது இந்த வியாழனுக்கு கைகொடுக்கிறது!

புதன், 22 ஜூலை, 2020

சனி, 18 ஜூலை, 2020

மலைச்சாரலில் ஒரு ஐ டி கம்பெனி...


1)  ".......  அருகில் உள்ள தென்காசியில் நல்ல மருத்துவமனை, பொழுதுபோக்க திரையரங்குகள், சுற்றிலும் நிறைய அருவிகள், காலாற நடந்து செல்ல ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.அதுபோக, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தேவையான, 24 மணி நேர மின்சாரம், அதிவேக இணையதள தொடர்பு, அருமையான ஊழியர்களும் இருப்பதால், என் வெற்றிப் பயணம் தொடர்கிறது......"

வெள்ளி, 17 ஜூலை, 2020

வெள்ளி வீடியோ : மடியில் நான் துயில  இடை துவள  கலை பயில  . 


சினிபாரத் தயாரிப்பில் 1977 இல் வெளிவந்த திரைபபடம் பெண் ஜென்மம்.  ஏ ஸி திருலோக்சந்தர் இயக்கத்தில் வாலி பாடல்களை எழுத, இளையராஜா இசை அமைத்த திரைப்படம்.  முத்துராமன் - ஜெயபாரதி நடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

வியாழன், 16 ஜூலை, 2020

கபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்.. 

சில நாட்களாகவே அவ்வப்போது வயிற்று வலி வந்து படுத்த ஆரம்பித்தது.  எனக்கு வயிற்றுவலி வருவது கொஞ்சம் அபூர்வம்.  கொரோனா கால உலக நியதிப்படி இதற்கும், எனக்கும் பயம் வந்தது!

புதன், 15 ஜூலை, 2020

சிந்தனையாளர்களும் படிப்பும் ...

கில்லர்ஜி: 

வாசிப்பு என்பது விரிவான சிந்தனையாளனுக்கு இருக்க வேண்டிய சிறப்பு அம்சம். சிலர் சிலரது இடங்களில் வாசிக்காதது அவர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்ற குறுகிய எண்ணப்பாடுகளுடன் வாழ்பவர்களா ?

செவ்வாய், 14 ஜூலை, 2020

புதுமைப் பெண்களடி ..... -- ஜீவி


 புதுமைப்   பெண்களடி .....

                                             -- ஜீவி    

சனி, 11 ஜூலை, 2020

பாஸிட்டிவ்



1)  சிறிய கண்டுபிடிப்புகள் பெரிய கண்டுபிடிப்புகளுக்கு முதல்படி...  கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் பன்னீர் செல்வம், முக கவசம், ஸ்டெதஸ்கோப், மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை கிருமி நீக்கம் செய்யும் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்...

வெள்ளி, 10 ஜூலை, 2020

வெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

சென்ற வாரம் விட்டுப்போன (கொஞ்சம் தாமதமாக எங்களுக்கு அனுப்பப்பட்ட) 'ஹாப்பி பர்த்டே எங்கள் ப்ளாக்' வீடியோ முதலில் ...

வியாழன், 9 ஜூலை, 2020

விடாக்கொண்டர் கொடாக்கண்டர் கேஜிஜி !!

அது 2013 ஆம் வருடம்!   மே மாதம் முப்பதாம் தேதி.  அதற்கு முந்தைய நாளோ என்னவோ ரிஷபன் ஜி ஒரு கவிதை வெளியிட்டிருந்தார்.  அது என்ன என்று எனக்கு நினைவில்லை. உடனே நான் இதை எழுதி வெளியிட்டேன் - ரிஷபன் ஜிக்கு நன்றியுடன்.

புதன், 8 ஜூலை, 2020

ஆசிரியர்களில் காசு சோபனா என்பவர் யார்?


நெல்லைத்தமிழன் : 

ஜோசியம் பார்ப்பதால் என்ன நன்மை? நீங்க ஜோசியம் பார்த்து பலித்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2020

காபி, டீ குடை


ஒரு மழை பெய்ததும் செடிகள் மரங்கள் எல்லாம் துடைத்துவிட்ட மாதிரி பளபளப்பு .

வெள்ளி, 3 ஜூலை, 2020

வெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே

சென்ற வாரம் பிறந்த நாள் கொண்டாடிய எங்கள் பிளாக் தளத்துக்கு ஆடியோவிலோ, விடீயோவிலோ வாழ்த்துச் சொல்லலாமே என்று பானு அக்கா நண்பர்களை அழைத்திருந்தார்.  அதன்பேரில் நம் தளத்துக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கும் நண்பர்களின் காணொளி முதலில்...

இங்கும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.  யோசனை சொன்ன பானு அக்காவுக்கும் நன்றி.

வியாழன், 2 ஜூலை, 2020

புதன், 1 ஜூலை, 2020

மெரீனாவில் சூரிய உதயம் பார்த்திருக்கிறீர்களா?


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

மஞ்சள் பத்திரிகை, கருப்புப் பணம், நீலப்படம், சிவப்பு விளக்கு என்று மோசமான விஷயங்களை நிறங்களோடு சம்பந்தப் படுத்துகிறோமே, அந்த நிறங்கள் என்ன பாவம் செய்தன?

செவ்வாய், 30 ஜூன், 2020

செவ்வாய் கதை : ங்கா... (By ஜீவி )

  ங்கா...    ....... ஜீவி 
வானதி பட்டும் படாமலும்தான்  பார்த்தாள்.

வெள்ளி, 26 ஜூன், 2020

வெள்ளி வீடியோ : நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன் தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்

1990 இல் வெளிவந்து காணாமல்போன படம் கவிதை பாடும் அலைகள்.  ராஜ்மோகன் ஜனனி நடிப்பில் வெளிவந்த படம்.  ஜனனி பின்னர் ஈஸ்வரி ராவ் என்கிற பெயரில் பிரபலமானார்.  பல தமிழ்ப்படங்களில் நடித்தார்.  காலாவிலும் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார்.

செவ்வாய், 23 ஜூன், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை  :  அப்பனும் அம்மையும் - துரை செல்வராஜூ 

அப்பனும் அம்மையும்

துரை செல்வராஜூ 

===================

ஸ்ரீ காமாக்ஷி இல்லம்

வெள்ளி, 19 ஜூன், 2020

வெள்ளி வீடியோ :  ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான் உண்மையை அதிலே உறங்க வைத்தான்

k. சங்கர் இயக்கத்தில் 1965 ஆம் வருடம் வெளியான திரைப்படம் பஞ்சவர்ணக்கிளி.   இரட்டையர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மிக இனிமையான பாடல்களைக் கொண்ட படம்.

புதன், 17 ஜூன், 2020

பிராக்டிகல் ஜோக் செய்வதுண்டா?


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

1. பிராக்டிகல் ஜோக் செய்வதுண்டா? அல்லது அதற்கு விக்டிம் ஆனதுண்டா?


செவ்வாய், 16 ஜூன், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : தலைமுறை இடைவெளி - ஜீவி

எச்சரிக்கை:   இந்தக் கதை  55  வருடங்களுக்கு முன்  பிரபல பத்திரிகை  ஒன்றில் பிரசுரமான  கதை.  மனித மன உணர்வுகள்  என்னவாக  இருந்தாலும்  அதை அச்சு அசலாகப் பிரதிபலித்த  எழுத்துக்கள்  சிறந்திருந்த காலம் அது.  அதனால் தான்  அம்மா வந்தாள் போன்றவான எந்தப் பொய்மைப் போர்வையைப்  போட்டும்  போர்த்தி மறைக்கத் தேவையில்லாத  கதைகள்  வாசகர்களின்  வாசிப்புக்கு உள்ளாகின.   இப்பொழுதோ   கதா பாத்திரங்களின் உணர்வுகளை  அவர்தம் உரையாடல்கள்  மூலம் வெளிப்படுத்தாத,  ஏதோ விக்கிரமாதித்தன் கதையை  குழந்தைகளுக்குச் சொன்ன அந்நாளைய பாட்டிமார்கள் போல எழுத்தாளர்களும்  கதை சொல்லிகளாகி விட்டனர்.
  

திங்கள், 15 ஜூன், 2020

"திங்க"க்கிழமை  : புளியிட்ட கூட்டு/குழம்பு - ரெஸிப்பி - கீதா ரெங்கன்




புளியிட்ட கூட்டு/குழம்பு

எபி கிச்சன் வாசகர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வணக்கம்.

வெள்ளி, 12 ஜூன், 2020

வெள்ளி வீடியோ :   அன்று காதல் கண்கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ

கோமதி சுப்பிரமணியம் எழுதிய கதையை கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்க 1970 இல் ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், சரோஜா தேவி நடிப்பில் வெளியான திரைப்படம் மாலதி.

வியாழன், 11 ஜூன், 2020

சொந்தமாக ஒரு ரயில்  - டீனேஜ் ஆசை

எனது டீனேஜ் பருவத்தில் ரகம் ரகமான நண்பர்கள் எனக்கு இருந்தனர். ​ 

'எல்லோருக்கும் அப்படித்தான்...'  என்று ஏதோ குரல் கேட்கிறது!  யாரது நெல்லையா?​

புதன், 10 ஜூன், 2020

கோவிலுக்கு நாம் போவதன் முக்கியக் காரணம் என்ன?


நெல்லைத் தமிழன்: 

1. 'யார்கிட்டதான் குறை இல்லை' என்று பொறுத்துப்போகும் குணம் ஏன் பொதுவா நமக்கு வருவதில்லை?      


வெள்ளி, 5 ஜூன், 2020

வெள்ளி வீடியோ : தோளிலே மாலையாய் ஆடும் ராஜா ஆரீரோ ... + சிறப்புச் சிறுகதை 

1980 இல் வெளிவந்த இந்தத் திரைப்படம்,  ஹிட்ச்காக் திரைப்படமான சைக்கோவை பெருமளவு தழுவி எடுக்கப் பட்டிருந்தாலும், 1978 இல் வெளியான ராஜேந்திர குமாரின் நாவலான 'இதுவும் விடுதலைதான்' நாவலுக்குதான் க்ரெடிட் கொடுத்திருந்தார் பாலு மஹேந்திரா.  

வியாழன், 4 ஜூன், 2020

அஞ்சலி

எழுத்தாளர் கடுகு என்ற அகஸ்தியன் என்ற திரு.பி.எஸ்.ரங்கனாதன் அவர்கள் மறைவுக்கான இரங்கல்

புதன், 3 ஜூன், 2020

எல்லோரும் பதில் சொல்லுங்க ...


சென்ற வாரம், யாரும் எங்களை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 
அதனால், நாங்களே இங்கே உங்களை ஐந்து கேள்விகள் கேட்கிறோம்.


வெள்ளி, 29 மே, 2020

வியாழன், 28 மே, 2020

உண்மையான கனவு - போலிக்கனவு - கனவின் காலம் 

வியாசர் கனவுகளுக்கு பலன் எழுதி இருக்கிறாராம்.  அதைப் படித்ததும் பகிரலாம் என்று தோன்றியது. ....

புதன், 27 மே, 2020

புதன் 200527 : மின் நிலா!


நெல்லைத் தமிழன்: 


1. ஆடிப்பெருக்கு அன்று கலந்த சாதங்கள் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரையில் ஊருடன் சாப்பிட்டுருக்கீங்களா?


ஞாயிறு, 24 மே, 2020

மழையும் கலையும் ...



இவ்வளவு க்ளீனா இருக்கற முயல் பெட்டியில குப்பை போடுவதா!

வியாழன், 21 மே, 2020

என்ன எண்ணங்களோ.. என்ன கனவோ... என்ன காரணமோ..

அர்த்தமில்லாத கனவுகள் அடிக்கடி காண்பவன் நான்.  அதற்கு அர்த்தம் ஏற்படுத்திக் கொள்ள நினைப்பேன்!  சில கனவுகள் யோசிக்க வைக்கும்..   என்ன காரணமாய் இருக்கும் என்று!  யானை என்னைத் துரத்துவது போல தொடர் கனவு கண்டு அதை தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன்.  வேறு சில நீண்ட கனவுகள் பற்றியும் எழுதி இருக்கிறேன்.  அடிக்கடி அல்லது அதிகம் படிக்கப்படும் பதிவுகளில் அடிக்கடி இடம்பெறும் பதிவாகவும் கனவுகள் பற்றிய பதிவு இருக்கிறது!

புதன், 20 மே, 2020

நேருவின் கதையை திரைப்படமாக எடுத்தால் கமல் பொருத்தமாக இருப்பாரா?


வல்லிசிம்ஹன் : 

சைனா,தெற்கு கொரியா,ஜெர்மனி என்று மீண்டு வரும்
தொற்று யாருக்கும் கண்ணில் படவில்லையா.?
இல்லை தங்களுக்கு ஒன்றும் நேராது என்ற அசட்டுத் தைரியமா.?


திங்கள், 18 மே, 2020

பிஸி பேளா பாத் :: ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி


அச்சம் தரும் சூழ்நிலையிலிருந்து விடுபட்டு,  ஒரு நல்ல உணவைத் தயாரித்து நாமும் உண்டு, நம் குடும்பத்தாருக்கும் அளிப்போம் என்று முடிவு செய்து நான் பிஸி பேளா பாத் தயாரித்தேன். அதற்கு கூட உண்ண வறுவல் இல்லாததால், அப்பளம் பொரித்து சமாளித்தேன். 

ஞாயிறு, 17 மே, 2020

தலைக்காவேரி பயணம்.


              
நாம  தலைக்காவேரி போற அன்றைக்குத்தானா வருணனும் விசிட் செய்யணும்?


வெள்ளி, 15 மே, 2020

வெள்ளி வீடியோ  :  அடி வா வா எந்தன் தேவி சொல்லப் போறேன் ஒரு சேதி

​​போன வாரம் வியாழன் அரட்டையில் இசையமைப்பாளர் தேவா பற்றி பேச்சு வந்ததுமே முடிவு பண்ணி விட்டேன்.  அடுத்த வாரம் தேவா இசை அமைத்த பாடல்தான் என்று.

வியாழன், 14 மே, 2020

என்ன சொல்ல... என்னவோ போங்க...!

சில படங்களின் கதை அமைப்புகள் யோசிக்க வைக்கும்.  படத்தைப் பார்க்கும்போது நாமும் அதனுடன் அதாவது அந்தக் கதை அமைப்பின் ஓட்டத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறோம்.  அப்புறம் யோசிக்கும்போது கதையின் லாஜிக்கில் எங்கேயோ ஓட்டை இருக்கிறதோ, இது நியாயமா என்று தோன்றும்.

புதன், 13 மே, 2020

புதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது?



நெல்லைத்தமிழன் : 

இன்றைக்கு கேள்வி கேட்டவர்களும் இருவர். பதில் சொன்னவர்களும் இருவர். இது யதேச்சையாக நிகழ்ந்ததா?

# ஆம்.

வெள்ளி, 8 மே, 2020

வெள்ளி வீடியோ  :   மெய் சிலிர்த்து முகம் சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே


​​1​968 இல் தாதா மிராசி இயக்கத்தில் வெளியான படம் பூவும் பொட்டும்.  ஏ வி எம் ராஜன், நாகேஷ், முத்துராமன் பாரதி ஆகியோர் நடித்த இந்தப் படத்துக்கான பாடல்களை மருதகாசி, கண்ணதாசன், வாலி ஆகியோர் இயற்ற ஆர் கோவர்தன்  இசை அமைத்திருக்கிறார்.

புதன், 6 மே, 2020

புதன் 200506 :: தனிமனித உரிமை என்றால் என்ன?


நெல்லைத்தமிழன்: 

1. திருமணம் ஆன காலத்தில் ஆணுக்கு இருக்கும் ஈகோ, வயது ஆக ஆக மறைந்து அட்ஜஸ்டபிளாக மாறிவிடுகிறதா?


திங்கள், 4 மே, 2020

திங்க கிழமை : பேபிகார்ன் பட்டர் மசாலா - கீதா ரெங்கன் ரெசிப்பி



பேபிகார்ன் பட்டர் மசாலா

ஹாய்! எல்லா எபி கிச்சன் ரசிகப் பெருமக்களுக்கும் அன்பு வணக்கம்.


ஞாயிறு, 3 மே, 2020

பனியும் .... பச்சையும் !


ஹையோ இம்புட்டு பேருங்க இங்கே இருக்காங்களா! 


வெள்ளி, 1 மே, 2020

வெள்ளி வீடியோ :  வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி

இந்த ஏப்ரல் 11 வந்ததும் ஐம்பது வருஷங்கள் ஆகின்றன இந்தப் படத்துக்கு.

புதன், 29 ஏப்ரல், 2020

புதன் 200429 :: ரிடயர்மெண்ட் வாழ்க்கை யாரை அதிகம் பாதிக்கிறது?



 பானுமதி வெங்கடேஸ்வரன்: 

போஸ்ட் ரிடையர்மெண்ட் சிண்ட்ரோம் ஆண்களை பாதிப்பதை போல பெண்களை பாதிப்பதில்லையே ஏன்?

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

நிழல் நாடகங்களும், நீல வானமும்!



ஏதோ ராமாயணமோ மஹாபாரதமோ நிழல் நாடகமாகப் பார்ப்பது போலில்லை?


வெள்ளி, 24 ஏப்ரல், 2020

வெள்ளி வீடியோ : என்றும் அவள் எங்கள் வீட்டுத் திருமகள் ஆவாள் .....

​​1963 ம் வருடம் எல் வி பிரசாத் இயக்கத்தில், கருணாநிதி கதை வசனத்தில் உருவான திரைப்படம் இருவர் உள்ளம்.

வியாழன், 23 ஏப்ரல், 2020

ஓரமாக ஒரு ஒற்றை யானை !


என் இளையவன் பாஸ் வயிற்றுக்குள் இருந்தபோது கடவுளிடம் என் வேண்டுதல் 'இரவு நேரத்தில் மட்டும் வலி வர வைத்து விடாதே...'  என்பதுதான்....  என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்...     அது தொடர்கிறது...


புதன், 22 ஏப்ரல், 2020

புதன் 200422 : ஊரடங்கினால் பொது மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? தீமை என்ன?



கீதா சாம்பசிவம்: 

1. நடை, உடை, பாவனைகள் ஒழுங்காக இருந்தாலும் மனதளவில் பலரும் வேறே முகத்தைக் கொண்டிருக்கிறார்களே? அது ஏன்?


வெள்ளி, 17 ஏப்ரல், 2020

வெள்ளி வீடியோ : கார்குழல் தடவி கனியிதழ் பருகி காதலை வளர்ப்பேன் இசைபாடி


​1976 இல் வெளிவந்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் ​முத்தான முத்தல்லவோ...  முத்துராமன்- சுஜாதா நடித்திருக்கும் இந்தப் படத்திலிருந்து இரண்டு மிக அருமையான பாடல்கள்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

காவலரைக் கண்டால்...


பொறுக்கியும் போலீஸும் - சிறு அனுபவத் தொடர் 

திருமணமாகி வந்து குடித்தனம் வைத்த புதிதில் நான் இருந்த இடம் மெயின் ரோடிலிருந்து விலகி அது இருக்கும் இடமே மற்றவர்களுக்குத் தெரியாததாய் அமைந்த ஒரு இடம்.  அது ஒருவகையில் பாதுகாப்பு. ஒருவகையில் பாதுகாப்பில்லை! 

புதன், 15 ஏப்ரல், 2020

புதன் 200415 :: எங்கள் பிளாக்குக்கான ஆரம்பப் புள்ளி எப்படி உருவாகியது?



நெல்லைத்தமிழன் : 

நிருபர்களுக்கு அவங்க போகும் இடத்தில் (பெரிய கம்பெனி ஷோக்களுக்கு செய்தி சேகரிக்க) Press Kit என்று தருகிறார்களே. அது லஞ்சம் இல்லையா?


ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

ஞாயிறு :: மழையும் மௌன கோபுரமும் ....


'மழைக்கு முன், மழைக்குப் பின்'  என்று திரும்பத் திரும்ப வந்தாலும்,  நுணுக்கமான வேலைப்பாடுகள் பளிச்!