இன்று பாக்கி இருக்கும் நினைத்தாலே இனிக்கும் (1979) பாடல்களை பகிர்ந்து நிறைவு செய்து விடுகிறேன்!
மூன்று சின்னஞ்சிறு பாடல்கள், ஒரு சாதாரண பாடல்!
படத்தில் வைரக் கடத்தலும் ஒரு அம்சம். 'யுவர்ஸ் லவிங்லி' இசைக்குழு இருக்கும் அறைக்குள் யாரும் இல்லாத நேரத்தில் வைரம் தேடவந்த ஆசாமியை ரஜினி பார்த்து பின்னாலேயே அடிமேலடி வைத்து வருவார். மெதுவாய் அவன் பக்கம் சென்று அவன் தோளைத்தொட்டு "அண்ணே.. வணக்கம்... ஆளில்லாத ரூம்ல எதைத்தேடறீங்க?" என்று கேட்டு ஓடநினைக்கும் அவன் கழுத்தில் உடனே கராத்தே போஸில் கைவைப்பார். மியூசிக் ஆரம்பம். பாடலும்!
தட்டிக் கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்டப்பிரசண்டன்...ஓ...
'ராகபந்தங்கள்' படத்தில் மிச்சமிருந்த பாடல் ஒன்றை (ஒரு பாடலை நான் பகிரவில்லை) சென்ற வாரமே பகிர்ந்திருக்கலாம் என்று இப்ப்போது தோன்றினாலும், கொடுத்த வாக்குப்படி அதையும் பகிர்ந்து விடுகிறேன். நினைத்தாலே இனிக்கும் படத்தின் ஆனந்த தாண்டவமோ பாடல் தவிர மற்ற பாடல்கள் சிறிய நான்கு வரி பாடல்கள்தானே...
கண்ணதாசன் பாடலுக்கு குன்னக்குடி இசை அமைக்க ஜெயச்சந்திரன் குரலில் ஹிந்தோள ராகத்தில் அமைந்த பாடல்... மிக அருமையான பாடல். அதிகம் வெளிச்சத்துக்கு வராத இனிமையான பாடல். இலங்கை வானொலிக் காரர்களுக்குதான் இது மாதிரி பாடல்களின் அருமை எல்லாம் தெரியும்! அவர்கள்தான் இந்தப் பாடல், தென்றல் ஒரு தாளம் சொன்னது, வானம் இங்கே, வெள்ளம்போலே போன்ற பாடல்களை அடிக்கடி ஒலிபரப்பியவர்கள்.
மலரோ நிலவோ மலைமகளோ …. மலரோ நிலவோ மலைமகளோ தேவி வடிவாக அமர்ந்தவர் யாரோ தேவி வடிவாக அமர்ந்தவர் யாரோ
மலரோ நிலவோ மலைமகளோ
நீதானா அழைத்ததும் நீதானா நெடுநாளாய் நினைத்ததும் இதைத்தானா நீதானா அழைத்ததும் நீதானா நெடுநாளாய் நினைத்ததும் இதைத்தானா என் தேவி உனக்கிது சரிதானா என் தேவி உனக்கிது சரிதானா
மின்னல் மின்னும் இரு விழியில் அன்னை உன்னை இதய மலர் அள்ளி அள்ளி கவிதை தருவேன் தொழுது வருவேன் தொடர்ந்து வருவேன்
மலரோ நிலவோ மலைமகளோ
நான் ஒரு பூசாரி உனக்கிது தெரியாதோ ஓ…ஓ…ஒ… நான் ஒரு பூசாரி உனக்கிது தெரியாதோ நடமாடும் திருக்கோயில் நீயல்லவோ நடமாடும் திருக்கோயில் நீயல்லவோ அடிமையை மறக்காதே அடுத்ததை நினைக்காதே…..ஏ…ஏ…ஏ…. அடிமையை மறக்காதே அடுத்ததை நினைக்காதே
உன்னை எண்ணி உருகி வரும் என்னை என்றும் அருள் பெருக கொஞ்சும் தெய்வம் உனது திருநாள் விரைவில் வருமோ விடிவு தருமோ
வைரம் தேடித்தான் ஜெயப்பிரதா தன் அறைக்கு வந்தார் என்பது கமலுக்கு தெரியாது. தன்னைப் பார்க்க வந்த ரசிகை என்றே நினைத்து பேசுகிறார் சுவாரஸ்யமான வசனங்கள்...
"சந்துரு.. உங்க கைல கிடாராகணும்"
"அங்கெல்லாம் பேனா எழுதாது"
நண்பர்களை அழைத்து வந்து காட்டுவதற்குள் தப்பி விடும் ஜெயப்பிரதாவை கமல் மறுபடி சிங்கப்பூர் விமானத்தில் பார்க்கிறார். அவரிடம் கடலை போட்டு நட்பாகும்போது வரும் உற்சாகப பாடல்..
வானிலே மேடை அமைந்தது ஆனந்த வாலிபத் திருவிழா
மேனியில் நாணம் அகன்றது மேகத்தின் தேரினில் ஊர்வலம்
ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்
ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்
ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்
சிங்கப்பூர் கூத்துகள் முடிந்து ஜெயப்ரதாவைப் பிரிந்து கமல் சென்னை திரும்பும் சமயம் மேலே கேட்ட அதே பாடல் சோகமாக...
நினைத்தாலே இனிக்கும் பாடல்களின் கடைசிப் பாடலாக எல் ஆர் ஈஸ்வரி பாடிய பாடல்.
காதலைச் சொன்ன ஜெயப்பிரதா காபரே நடனம் ஆடுகிறார் என்று கடுப்பாகிப் போகும் கமல் ஜெயப்பிரதா போதையில் தெருவில் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கிறார். இதெல்லாம் ஏன், என்ன என்று கமலுக்கு பின்னால்தான் தெரியும். அவரை அப்படியே விட்டுச் செல்லவும் முடியாமல் அழைத்துச் செல்லவும் முடியாமல் கமல் தொல்லைப்படும் காட்சி..
நீண்டு நிமிர்ந்திருந்த அந்தத் தெருவின் கடைசியில் - அல்லது முதலில் என்றும் சொல்லலாம். அது நீங்கள் எந்தத் திசையிலிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது - அவன் உதயமானான்.
நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த கால சங்கடங்கள், உபாதைகள் விலகி, வரும் காலத்தில் எல்லா நலமும் பெற வாழ்த்துகிறோம்.. வாழ்த்தப்போகும் உங்கள் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றி.